
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலக்குடிமுளை என்ற ஊராட்சியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைபார்ப்பவர் சரவணன். இவர், அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் அருண் சூசை என்பவரிடம் நிதி வாங்கி, 20 லட்சம் ரூபாயில் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி கட்டுகிறார்கள்
அதற்கு ஒப்பந்ததாரர்கள் வேலை பார்த்தாலும், கல் எடுக்க, மண் எடுக்க,சுவற்றுக்கு தண்ணீர் பிடிக்க போன்ற சின்ன சின்ன வேலைகளுக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தி உள்ளார்கள். அதன் அடிப்படையில் செய்தி வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி தலைமை ஆசிரியர் கூறும் போது, யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. பள்ளி மாணவர்கள் தாங்களாக முன் வந்து பள்ளிக்கு வேலை பார்த்தார்கள். அவர்களாக விருப்பப்பட்டு வேலை பார்த்தார்கள் . எனினும் இது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.