விஐபியாக இருந்தாலும் விட மாட்டோம்.. கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை!


கோடநாடு வழக்கில் யார் யாரெல்லாம் தவறு செய்தார்களோ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். உண்மை குற்றவாளிகள் எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் சிறைத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது, கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேகதாது அணை விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பார். தமிழக அரசின் நிலைப்பாடு மேகதாது அணை அமைக்கக்கூடாது என்பதே ஆகும் என்றும் கூறினார்.

கோடநாடு விவகாரத்தில் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நடந்தது என்ன என்பதை தெளிவுபடுத்துவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்கிறபோது, கோபப்படுவதில் நியாயம் இல்லை. இது, பழிவாங்கும் போக்கு என்று கூறுவது ஏற்புடையதல்ல என்றார்.
Share on: