24 மணி நேரத்தில்.. தமிழக அரசியலை அதிரவைத்த.. நறுக்குன்னு 4 சம்பவங்கள்!


சம்பவம் 2 – கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அரசியலில் 4 பெரிய சம்பவங்கள் நடந்து உள்ளன. தமிழக அரசியலை உலுக்கும் விதமாக மிகப்பெரிய மோதல்கள் நேற்று ஒரே நாளில் நடந்து உள்ளது. அந்த சம்பவங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

நேற்று முதல்நாள், அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அதில் மொத்த திமுகவையும், உதயநிதி ஸ்டாலினையும் ரஜினிகாந்த் மிக தீவிரமாக பாராட்டி பேசினார். அதில், ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை. எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க, என்றும் பாராட்டி கூறினார்.

இதற்கு பதில் அளித்த துரைமுருகன், பல்லு விழுந்தபிறகும் நடித்துக்கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறதா? என்று கூறியுள்ளார். அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து கடைசிக்கட்ட நிலையிலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? அப்படித்தான்.. இவ்வாறு அவர் கூறினர். ரஜினிகாந்த், “ஓல்டு ஸ்டூடண்ட், கருணாநிதி கண்ணிலே விரல்விட்டு ஆட்டியவர் என்று துரைமுருகனை கலாய்த்து பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன், “பல்லு விழுந்த நடிகர்கள்” என்று கோபமாக கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உதயநிதி பேசுகையில், இளைஞர்களுக்கு வழிவிட்டு, வழிநடத்தி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.. இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிட வேண்டும். நேற்று ரஜினிகாந்த் பேசினார். அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார். அது என்ன என்று சொல்ல மாட்டேன்.

ஆனால் அவரின் பேச்சுக்கு ஒரு இடத்தில் கைத்தட்டு அதிகம் வந்தது. அது எந்த இடம் என்று பாருங்கள். நேற்று சூப்பர் ஸ்டார் பேசியதை வைத்தே பாருங்கள். நான் எதோ மனதில் வைத்துக்கொண்டு பேசுவதாக நினைக்க வேண்டாம். இதுதான் என் வேண்டுகோள்., என்று உதயநிதியும் தன் பங்கிற்கு துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்தார்.

சம்பவம் 2 – நேற்று பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை , காலில் விழுந்து பதவி வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி. என்னைப் பற்றிப்பேச எடப்பாடி பழனிசாமி எனும் தற்குறிக்கு எந்த அதிகாரமும் இல்லை. எழுதி வச்சிக்கோங்க.. பா.ஜ.கவுக்கும் தி.மு.கவுக்கும் எக்காலத்திலும் உறவு இருக்காது”.. தி.மு.க, அ.தி.மு.க இரண்டுமே பா.ஜ.கவுக்கு எதிரிகள் தான். எடப்பாடி போல தற்குறி இல்லை நான், என்று அண்ணாமலை கூறி உள்ளார்.

சம்பவம் 3 – நாம் தமிழர் கட்சியினருக்கு.. திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல என்று வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். திமுக ஐடி விங்கில் வேலை பார்த்தார் என்றால் ஏன் ஐபிஎஸ் வேலை பார்க்க வேண்டும் என்றும், பெரிய வீரர் என்றால் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேருக்கு நேர் மோத வேண்டும் என்றும் சீமான் சவால் விடுத்து பேசினார். திருச்சி எஸ்பி வருண்குமார் நாம் தமிழர் கட்சியினர் மீது தொடர் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில் சீமான் இவ்வாறு பேசியுள்ளார். இதற்கு வருண்குமார் , திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வேர்வை கண்ணீர் சிந்தி, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை. பெற்றோரின் கருணையால், உரப்புலி குலதெய்வத்தின் அருளால் UPSC CSE 2010 All India Rank 3 நினைவு கூறுகிறேன். First choice as IPS என்று பதிலடி கொடுத்துள்ளார்.

சம்பவம் 4: நேற்று பாஜக நிகழ்ச்சி ஒன்றில், நான் ஒண்ணும் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம பா.ஜ.கவுக்கு வரல.. 6 மாசம் ஆச்சு இன்னும் எந்த பதவியும் கொடுக்கல என்று பாஜகவை விமர்சனம் செய்து அண்ணாமலை இருந்த மேடையிலேயே விஜயதரணி பேச பேச அண்ணாமலை கொடுத்த ரியாக்‌ஷன் கவனம் பெற்றது.

சரியாக தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்வது என்பது புத்திசாலித்தனமாக வேன்றுமென்றுல்லாம் தோன்றலாம். ஆனால் அப்படி 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் கட்சி மாறிய விஜயதாரணியின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவில் எந்த பதவியும் வழங்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. Advertisement

அவருக்கு லோக் சபா தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.. விளவங்கோடு எம்.எல்.ஏ. பதவியில் இருந்து அவர் விலகியதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கட்சியிலும் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

செருப்புக்காக நடந்த சண்டை.. நாமக்கல் பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில் வெளியான ‘ஷாக்’ தகவல்!


நாமக்கல் அருகே பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் கிளம்பும்போது செருப்பு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மரணத்தில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்த வரகூர் அரசு பள்ளியில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 11ஆம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்த மாணவர் உயிரிழந்துள்ளார். பள்ளி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோதலில் உயிரிழந்தவர் ஆகாஷ் (16) என்பதும், அவர் நவலடிபட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது பற்றியும் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எருமப்பட்டி அருகே உள்ள நவலடிபட்டியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான ரமேஷ். இவரது மகன் ஆகாஷ், வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அதே வகுப்பில், செல்லி பாளையத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி சுப்பிரமணி என்பவரின் மகனும் படித்து வந்துள்ளார்.

நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது, வகுப்பறை வாசல் ஓரத்தில் விட்டிருந்த ஆகாஷின் செருப்பை காணவில்லையாம். இதனால் கோபமடைந்த அவர், தனது செருப்பை எடுத்து ஒளித்து வைத்தது யார் என அங்கிருந்த மாணவர்களிடம் கேட்டு திட்டியுள்ளார்.

அப்போது செல்லிபாளையத்தைச் சேர்ந்த மாணவன், தான் தான் செருப்பை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் இருவரும் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர். மாணவர்கள் விலக்கி விட முயற்சித்தும் தொடர்ந்து அடித்துக் கொண்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் சுருண்டு விழுந்த ஆகாஷ், நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அவரை எழுப்ப முயன்ற நிலையில் அவர் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து உடனடியாக மாணவர்கள், தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாணவர் ஆகாஷ் பலியான நிலையில், எருமப்பட்டி போலீசார் மாணவர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஆகாஷ் உடன் சண்டை போட்ட மாணவர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலிப்பு வந்து ஆகாஷ் மயங்கி விழுந்ததாக கூறினார்கள், நாங்கள் எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறினார்கள். அங்கு சென்று பார்த்தபோது எங்கள் மகன் உயிருடன் இல்லை. எங்கள் மகன் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பலியான ஆகாஷின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே மோதல் சம்பவங்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சாதிய ரீதியிலான மோதல், போதைப் பொருள் பழக்கம் ஆகியவை பள்ளி மாணவர்களிடையே அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், மாணவர்கள் மோதலில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Share on:

பகீர்! மற்றொரு பள்ளியிலும் சிறுமி பாலியல் வன்கொடுமை.. சிவராமன் மீது 2வது போக்சோ வழக்கு பாய்ந்தது!


கிருஷ்ணகிரியில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்திய போது 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் கடந்த 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8 ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை என்.சி.சி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த குற்றம் தெரிந்தும் அதை மறைக்க முயற்சி செய்த பள்ளியின் முதல்வர், தாளாளர் உட்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சிவராமன், போலியாக ஆவணங்களை தயார் செய்து ஏமாற்றியதும் அம்பலமாகி உள்ளது.

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும், பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரை ஆலோசித்து அவர்களின் நலம் காத்திட சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்று விசாரணை தொடங்கியது.

இதற்கிடையே, சிவராமன் தன்னை வழக்கறிஞர் என்று கூறி ரூ.36 லட்சம் ஏமாற்றியதாக நேற்று எஸ்.பி அலுவலகத்தில் 7 பேர் புகார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் சிவராமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் என்சிசி முகாம் நடத்திய போது 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி கந்திகுப்பத்தில் போலி என்.சி.சி முகாம் நடத்தி தனியார் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிவராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பாலியல் வழக்கையும் சேர்த்து, சிவராமன் மீது 3-வது வழக்கு பாய்ந்துள்ளது.

இதற்கிடையே, கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டதை அடுத்து அவருக்கு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Share on:

குடிச்சு செத்தால் 10 லட்சம்..குழந்தை செத்தால் தர முடியாதா? தமிழக அரசை விளாசிய நீதிபதி


மதுரை அருகே இலங்கை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து விழுந்து இறந்த குழந்தைக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கில் மேல்முறையீடு தாக்கல் செய்த அரசுக்கு அபராத விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

மேலும், வழக்கின் விசாரணையின் போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போன நபர் ஒன்றுக்கு பத்து லட்சம் கொடுத்த அரசு, சுவர் இடிந்து விழுந்து இறந்து போன குழந்தைக்கு 5 லட்சம் கொடுக்க முடியாமல் உள்ளதா நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, அரசின் மேல் முறையீடு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை திருவாதவூர் அகதிகள் முகாமை சேர்ந்த அதிபதி, என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில்,” என் 11 வயது மகள் சரண்யா. 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 12.5.2014-ல் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சரண்யா உயிரிழந்தார். அதற்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2014 ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தேன்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சிறுமி உயிரிழப்புக்கு காரணமாக சுவரை கட்டிக் கொடுத்தது அரசு தான். இதற்கு அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இதனால் மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார். மேலும் அங்குள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் எனவும் உத்தரவை சுட்டிக் காட்டி இருந்தார்.

இந்நிலையில் சிறுமிக்கு 5 லட்சம் பணம் வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு.

விசாரணையின் போது நீதிபதிகள் கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் அருந்தி இறந்து போனவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பணம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது. ஆனால் ஒரு குழந்தை சுவர் இடிந்து விழுந்து இறந்துள்ளது.

அதற்கு உரிய நிதி கொடுக்க முடியாமல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது அரசுக்கு வெட்கமாக இல்லையா? எவ்வாறு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசின் மனுவை தள்ளுபடி செய்து மேல் முறையீடு தாக்கல் செய்த அதிகாரிக்கு ரூபாய் 50,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
Share on:

கலெக்டராக இருக்க தகுதியற்றவர்.. நேரில் ஆஜராக வேண்டியிருக்கும்! தஞ்சாவூர் ஆட்சியருக்கு ஹைகோர்ட் கெடு!


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கோவில் குளங்கள், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சியராக இருக்க தகுதியற்றவர் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தஞ்சாவூர் ஆட்சியர் அக்டோபர் 28 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவில் குளங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அங்கு பெரிதாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது போல் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம், அரசு வழக்கறிஞர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வழங்கிய கடிதத்தை காண்பித்தார். அந்த கடிதத்தை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த கடிதம் திடுக்கிட வைக்கக் கூடியதாக உள்ளது என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும் மாற்று இடங்கள் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் சொல்லப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் அவர் மாவட்ட ஆட்சியராக இருக்க தகுதியானவர் இல்லை என்பது தெளிவாகிறது என்ற கண்டனத்தையும் நீதிபதிகள் பதிவு செய்தனர்.

மேலும் கும்பகோணம் கோவில் குளங்கள் மற்றும் நீர் செல்லக்கூடிய பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கெடு விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Share on:

கொல்கத்தா மருத்துவர் கொலை! நாடு தழுவிய ஸ்டிரைக்.. தமிழகத்திலும் மருத்துவர்கள் போராட்டம் தொடங்கியது.


மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறியுள்ளனர். இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை தீவிர விசாரணையை மேற்கொண்டது.

இந்த கொலை அதிகாலையில் 3-6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடந்திருக்கிறது. இந்த நேரத்தில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பரிசோதிக்கையில், ப்ளூடூத் இயர்ஃபோனுடன் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். ஆனால் திரும்ப வெளியே செல்லும்போது அவர் காதுகளில் ப்ளூடூத் இயர்ஃபோன் இல்லை. அது மருத்துவரின் சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் கைது செய்தனர்.

இருப்பினும் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறி மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதேநேரம் இந்த வழக்கு நியமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று, உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவரின் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்காக நீதி கேட்டும் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராடி வருகின்றனர். கடந்த 7 நாட்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தின் மருத்துவத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த பணியிலும் ஈடுபடமாட்டோம் என்று மருத்துவர்கள் ஸ்டிரைக் செய்தனர். போராட்டம் காரணமாக இதுவரை நோயாளிகளில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இப்படி இருக்கையில் கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக மருத்துவர்கள் அறிவித்திருந்தனர். இந்திய மருத்துவர்கள் சங்கம் இது குறித்து கூறுகையில், “கொல்கத்தாவில் பெண் மருத்துவரின் கொலையை கண்டித்து, இன்று காலை 6 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை நாடு முழுவதும் மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.

இதில், அவசர சிகிச்சை மட்டும் வழக்கம்போல செயல்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இன்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி வளாகத்தில் இந்திய மருத்துவச் சங்கமும் (IMA) தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கமும்(TNGDA) இணைந்து இன்று காலை கண்டன ஆர்பாட்டத்தை நடத்துகின்றன. அதேபோல அரசு மருத்துவமனைகளில் காலை 7.30-8.30 என ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்திலும் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அடையாள போராட்டத்தை நடத்துகின்றனர்.

சென்னை தவிர கோவை, மதுரை, நெல்லை என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒருநாள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மிக அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், உள்நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Share on:

கொல்கத்தாவைத் தொடர்ந்து கோவை..பயிற்சி பெண் மருத்துவரிடம் அநாகரீக ஆடையுடன் அத்துமீறல்.. இளைஞர் கைது

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவரிடம் மத்தியப் பிரதேச இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் கழுத்து எழும்பு முறிக்கப்பட்டுள்ளது. அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் உள்ளன.

மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து,…

Share on:

Continue Reading

தொகுதிக்கு 10 பேர்.. ஈபிஎஸ்சிடம் 6 முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை.. அதிமுக ஒருங்கிணைப்புக் குழு கூறுவது என்ன?


ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி வருவதாகவும், நால்வரும் அமர்ந்து பேசும் காலம் நெருங்கி வருவதாகவும் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ‘அதிமுக ஒருங்கிணைப்பு குழு’ எனும் பெயரில் செயல்பட்டு வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜேசிடி பிரபாகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்

அதிமுகவை ஒருங்கிணைக்கும் விதமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக தலா 10 பொறுப்பாளர்களை தங்களது ஒருங்கிணைப்புக் குழுவிற்கு நியமித்துள்ளதாகவும், வரும் 26ஆம் தேதி எழும்பூர் சிராஜ் மகாலில் தங்களது ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர்களுக்கு ஜேசிடி பிரபாகர் அளித்த பேட்டியில், “4 பிரிவுகளாக தெரிகிற பிரிவை ஒன்றாக இணைக்க பாடுபடுகிறோம். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன் என நால்வருக்கும் இணைப்பு குறித்து கடிதம் அனுப்பியுள்ளோம். தமிழகம் முழுவதும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியுள்ளது.

4 பிரிவில் யாரையும் நாங்கள் தனிப்பட்ட முறையில் குறை கூறுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு முன்பு ஓபிஎஸ் மருமகன் வீட்டில் நாங்கள் ஆலோசித்தோம். வழிகாட்டுதல் குழு அமைத்து அதன் முடிவுக்கு தான் கட்டுப்பட இருப்பதாக ஓபிஎஸ் எங்களிடம் கூறினார். ஆனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு வழிகாட்டுதல் குழு அமைப்பது குறித்த ஓபிஎஸ்-ன் முடிவை நாங்கள் வேண்டாம் என்று கூறினோம்.

4 பேரும் அமர்ந்து பேச வேண்டும். பாஜகவுடன் தான் தொடர்ந்து கூட்டணி என்ற ஓபிஎஸ் முடிவு இப்போது எங்களுக்கு ஏற்புடையது அல்ல, பொதுக்குழு, செயற்குழுவின் மூலமே கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட வேண்டும். தனிக்கட்சி நடத்துவதால் டிடிவி தினகரன் இணைப்புக்கு சாத்தியமில்லை என்று கூறினாலும், அவர்களுடன் கூட்டணி அமைத்து அதிமுக வாக்குகள் சிதையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விரைவில் பேச்சுவார்த்தை: 4 பேரும் அமர்ந்து பேசி இணைப்புக்கான தேதியை தீர்மானிக்க வேண்டும். 4 பேரும் அமர்ந்து பேசும் காலக்கட்டம் நெருங்கி வருகிறது. வைகோ தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறிய கருணாநிதி, பின்னர் தேவை என்றவுடன் வைகோவுக்கு அழைப்பு விடுத்தார். கட்சியைக் காப்பாற்ற நினைப்பவர்கள்தான் தலைவர்கள். இணைப்பு என்று வந்தால் கோபத்தை மறந்துவிட வேண்டும். அதிமுகவை அழிக்கப் போவதாக அண்ணாமலை தேவையில்லாமல் பேச வேண்டாம்” என்றார்.

அதனைத் தொடர்ந்து கே.சி.பழனிசாமி கூறுகையில், “அதிமுக தொண்டர்கள் செயலிழந்து நிற்கின்றனர். நடுநிலையாளர் வாக்குகளும் அதிமுகவிற்கு வருவதில்லை. இணைப்புக்கான முயற்சியில் ஈடுபடும் எங்களுக்கு தொண்டர்களின் ஆதரவு பெருகி வருகிறது. மேல்மட்ட தலைவர்களாக இருப்பவர்களுக்கு பதவி ஆசை மட்டுமே இருக்கிறது. வாக்கு வங்கி குறைந்தது குறித்து அவர்களுக்கு கவலை இல்லை.

ஒவ்வொருவரும் தங்கள் கட்சியை வளர்க்க நினைப்பது தவறில்லை. ஆனால் அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே அண்ணாமலையின் விருப்பமாக உள்ளது. 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா 10 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை தற்போது அமைத்துள்ளோம். இரண்டரை லட்சம் தொண்டர்கள் இதற்கு தயாராக உள்ளனர்.

அதிமுக வீழ்ச்சி? அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் வெளியில் தெரியாமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொண்டர்களின் அழுத்தத்தால் 6 முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருங்கிணைப்பு குறித்து வலியுறுத்தி பேசி வருகின்றனர். எங்கள் கடிதத்திற்கு பதில் கடிதம் வரவில்லை.

ஆனால், அதன் அழுத்தத்தால் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள் குறித்து தற்போது வெளிப்படையாக கூற முடியாது. பாஜக போன்ற மதவாத, இந்துத்துவா சக்திகளை தமிழகத்திற்குள் நுழைய விட்டுவிடக் கூடாது. அதிமுக வீழ்ச்சி அதற்கு இடம் தந்துவிடக் கூடாது” என்றார்.

பின்னர், புகழேந்தி பேசுகையில், “எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து தவறாக பேசிய தா.மோ.அன்பரசனை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும். கருணாநிதி இறந்துவிட்டார். எனவே, அவரை நாங்கள் திட்டமாட்டோம். எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து தவறாக பேசினால் எந்த நிலைக்குச் சென்றும் போராடுவோம். அன்பரசன் மன்னிப்பு கேட்க வேண்டும். கனிமொழியே ஜெயலலிதாவை துணிச்சல் மிக்கவர் என்று பாராட்டினார்.

அதிமுக 3வது இடத்துக்கு போய் விட்டதை பார்த்துவிட்டு, இனி 4 வது இடத்துக்கு போய் விடும் என அண்ணாமலை கூறுகிறார். எடப்பாடி பழனிசாமியால் ஒருபோதும் பொதுச் செயலாளர் ஆகவே முடியாது. வரும் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் சிராஜ் மகாலில் எங்களது ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற உள்ளது” என்றார்.
Share on:

நெகிழ வைத்த நீதிபதி ஆனந்த் வெங்கேடஷ் – சவுந்தர்! விஷச்சாராயத்தால் பெற்றோரை இழந்த 3 பேருக்கு உதவி


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பெற்றோரை இழந்து தவிக்கும் ஒரு மாணவி – 2 மாணவர்கள் என்று மொத்தம் 3 பேருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கேடஷ் மற்றும் சவுந்தார் ஆகியோர் நேரில் உதவி செய்து நெகிழ வைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த ஜூன் மாதம் 18 ம்தேதி கள்ளச்சாராயம் (விஷச்சாராயம்) குடித்தனர். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனையான கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்ததில் 200க்கும் அதிகமானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கபப்ட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கொத்து கொத்தாக அடுத்தடுத்து மக்கள் பலியாகினர். கள்ளச்சாராயம் குடித்து 230 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 68 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். மற்றவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

இந்த சம்பவத்தில் கருணாபுரத்தை சேர்ந்த சுரேஷ் – வடிவுக்கரசி தம்பதி பலியாகி இருந்தனர். இதனால் அவர்களின் ஒரு மகள், 2 மகன்கள் பெற்றோர் இன்றி தவித்து வருகின்றனர். கள்ளச்சாராயம் அருந்தி பலியான சுரேஷ் – வடிவுக்கரசி தம்பதியின் மகள் பெயர் கோகிலா. மகன்களின் பெயர்கள் ஹரிஷ், ராகவன் ஆகும். இதில் கோகிலா பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு பணிக்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சவுந்தர் ஆகியோர் சென்றனர்.

அப்போது பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவி கோகிலா, மாணவர்கள் ஹரிஷ், ராகவன் ஆகியோரை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்படி நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சவுந்தர் ஆகியோர் கூறினர். இதையடுத்து பள்ளியில் இருந்து அவர்கள் 3 பேரும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பள்ளி சீருடையில் அவர்கள் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்தனர்.

இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிபதி சவுந்தர் ஆகியோர் ஆறுதல் கூறினர். மேலும் புத்தாடைகள், பள்ளி சென்று வர வசதியாக சைக்கிளும் வழங்கினர். இந்த வேளையில் நீதிபதிகள் ‛‛தற்போது நீங்கள் என்ன படித்து வருகிறீர்கள்? எதிர்கால குறிக்கோள் என்ன?’’ என்று கேள்வி கேட்டனர். அதற்கு கோகிலா, ‛‛தான் 11ம் வகுப்பு படித்து வருகிறேன். இன்ஸ்பெக்டராக வர விரும்புகிறேன்’’ என்றார்.

அதேபோல் ஹரிஷ் தான் ‛‛10ம் வகுப்பு படிக்கிறேன். அட்வகேட் ஆக விரும்புகிறேன்’’ என்றார். மேலும் ராகவன், ‛‛தான் 9ம் வகுப்பு படித்து வருகிறேன். படிப்பை முடித்துவிட்டு ஐடிஐ படிக்க இருக்கிறேன்’’ என்று தங்களின் ஆசைகளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சவுந்தரிடம் தெரிவித்தனர். அதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த நீதிபதிகள் 3 பேருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ‛‛நீங்கள் மனதளராமல் படிக்க வேண்டும்’’ என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Share on:

திமுகவை போல அலட்டிக் கொள்ளாமல் சரித்திர சாதனை படைத்த எம்.ஜி.ஆர்..!


சாமான்யருக்கான சமூகத் திட்டங்கள். எம் ஜி ஆர் கொண்டு வந்த நலத் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், கடுமையான விமர்சனங்கள், கண்டனங்களை முன்வைத்தன. எல்லாரும் சொன்ன பொதுவான குற்றச்சாட்டு – ‘அரசுப் பணம் வீணாகிறது’. ‘இலவசங்கள் கொடுத்து அரசுக் கருவூலத்தைக் காலி செய்கிறார்’!

இந்தப் புகார்களுக்கு எல்லாம், பல்லாண்டுகளுக்கு முன்பே பதில் கூறி விட்டார் எம்.ஜி.ஆர். தனது சொந்தத் தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்தில் கூறுவார்:’மக்களிடம் இருந்து பெற்ற வரிப் பணத்தை மக்களுக்காகச் செலவிடுகிறோம்.’இதில் வேடிக்கை என்னவென்றால், இடையில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போன தி.மு.க.வால் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டங்கள் எதிலும் கைவைக்க முடியவில்லை. காரணம், இவற்றால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட நற்பயன்கள். உதாரணத்துக்கு, சத்துணவுத் திட்டம். சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் இரத்த வாந்தி எடுத்தனர் என்றெல்லாம், தனது ஆதரவு நாளிதழ் மூலம், பீதியைப் பரப்பியவர்கள், ஆட்சிக்கு வந்து ஏன் அந்தத் திட்டத்தைக் கைவிடவில்லை..? வலுவான காரணம் இருந்தது.

சத்துணவுத் திட்டம் அமலாக்கப்பட்ட முதல் ஆண்டில், சுமார் 2,63,000 குழந்தைகள் புதிதாக பள்ளிகளில் சேர்ந்தனர். அடுத்த ஆண்டில், 2,68,000 பேர் சேர்ந்தனர். எம்.ஜி.ஆர். மறைந்த 1987இல், தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 100% என்று உச்சத்தைத் தொட்டு இருந்தது. ‘பள்ளிக் கூடத்தின் பக்கம்’ போகாதவர்களே இல்லை என்கிற நிலையை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆர். ஆட்சி. இந்தச் சாதனையில், சத்துணவுத் திட்டம் மிக முக்கிய பங்கு வகித்தது. இதேபோன்று, மேலும் பல திட்டங்களும் காரணம் ஆகும்.

அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது – பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச காலணி திட்டம். தமிழ்நாட்டில் பல ஊர்களில் பல பகுதிகளில் சாதிய அடக்குமுறை மேலோங்கி இருந்தது.காலில் செருப்பு அணிந்து கொண்டு ஊருக்குள் நடந்து செல்ல முடியாத அவலநிலை இருந்தது. மாற்றி அமைக்க எண்ணினார் எம்.ஜி.ஆர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசக் காலணி வழங்கினார். அதனை அணிந்து கொண்டு,’எம்.ஜி.ஆரு குடுத்தது’ என்று ஆனந்தமாய்க் கூறியபடி ஊருக்குள் சுற்றி வர முடிந்தது. மௌனமாய் ஒரு மிகப் பெரிய சமுதாயப் புரட்சியை நடத்திக் காட்டினார் மக்கள் திலகம்.

சாதிக்கு எதிராகப் போராடுவதாக சொல்லிக் கொல்லும்… மன்னிக்கவும், சொல்லிக் கொள்ளும் கட்சி, தான் ஆட்சியில் இருந்த போது செய்யத் துணியாத காரியத்தை, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, எவருடைய எதிர்ப்பும் இல்லாமல், அமைதியாக செய்து முடித்தார் எம்.ஜி.ஆர். சாதிகளை மறந்து அ.தி.மு.க. பக்கம் மக்கள் நிற்பதற்கு முழுமுதற் காரணமே சாதிகளைக் கடந்த அதன் பார்வைதான். எம்.ஜி.ஆர். இட்ட அடித்தளம், ஜெயலலிதா எழுப்பிய கற்கோட்டை, மக்களின் பேராதரவு பெற்று விளங்குவதற்குக் காரணமே சாதிகளுக்கு அப்பாற்பட்டு எல்லாருக்கும் பொதுவான இயக்கமாக அது இருப்பதுதான்.

இந்தச் சமயத்தில் சத்துணவு திட்டம் குறித்த இன்னொரு தகவலையும் குறிப்பிட வேண்டும். இந்தத் திட்டம் அறிமுகமான ஆண்டிலேயே, 17.4 லட்சம் (13.7%) எஸ்.சி., எஸ்.டி. பிள்ளைகள், இதனால் பயன் பெற்றனர்; ஒரு மிகப் பெரிய சமூக, பொருளாதார பிரசினைக்கு சுமுகமான நிரந்தரத் தீர்வு கண்டார் எம்.ஜி.ஆர். சாதிய ஏற்றத் தாழ்வுகளை முற்றிலுமாகக் களைந்து சமதர்ம சமுதாயமாகத் தமிழ்நாடு மலர வேண்டும் என்பதில், உண்மையான அக்கறை கொண்ட இயக்கமாக அதிமுக இருப்பதால், அனைத்து சாதிப் பிள்ளைகளும் ஆரோக்கியத்துடன், தரமான கல்வி பெற்று வாழ்க்கையில் உயர்வதற்கான திட்டங்களை அடுக்கடுக்காய் நிறைவேற்றி வருகிறது.

பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய அரும் பணியால் 1976-77இல், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் 942 இருந்தன. இவற்றில் உயர்நிலைப் பள்ளிகள் (High Schools) 21; நடுநிலைப் பள்ளிகள் – 80; தொடக்கப் பள்ளிகள் – 841. இந்தச் சிறப்புப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 1,65,822 பேர். எம்.ஜி.ஆர். அமரரான போது என்ன நிலைமை..? எந்த அளவுக்குத் தரம் உயர்த்தப் பட்டன பாருங்கள்: மேல்நிலைப் பள்ளிகள் – 963; உயர்நிலைப் பள்ளிகள் – 51; தொடக்கப் பள்ளிகள் – 844. மொத்தம் – 963. பயன் பெற்றவர்கள் – ஆண் பிள்ளைகள் – 124503; பெண் பிள்ளைகள் – 104018. மொத்தம் – 2,28,521.

இப்பள்ளிகளில் 1 – 8ஆம் வகுப்பு படித்த அத்தனை பேருக்கும், ஆண்டுதோறும் இலவச சீருடைகள், இரண்டு வழங்கப்பட்டன. அரசு நடத்திய விடுதிகளில் (‘ஹாஸ்டல்’) தங்கிப் படித்த அனைவருக்கும் கூட இலவச சீருடை வழங்கப் பட்டது. இலவச புத்தகங்கள், நோட்டுகள் வழங்கும் திட்டம் அமலாக்கப் பட்டது. தொழிற் பயிற்சி பெறுவோருக்கு தொழிர்கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) திட்டமும் அறிமுகப் படுத்தப் பட்டு, 5,50,000 பேருக்கு உதவி தரப் பட்டது.
Share on: