அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தாலும் மக்கள் நம்பவில்லை!


பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறியதை தமிழ்நாடு மக்கள் ஏன் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை? என்பது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி விளக்கம் அளித்து உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, “எடப்பாடி – பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதை தமிழக மக்கள் ஏன் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை?

பாஜக எதிர்ப்பு வாக்குகள் என்பது சிறுபான்மை வாக்குகள் மட்டும் அல்ல சிறுபான்மையை தாண்டி அனைத்து மட்டங்களிலும் உள்ளது. ஆனால் EPS சிறுபான்மையினர் மட்டும் தான் பாஜகவிற்கு எதிரானவர்கள் என்று நம்புகிறார். அந்த பெரும்பான்மை பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுக அறுவடை செய்கிறது. அதை அதிமுக பக்கம் இழுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்க வில்லை.

முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் நடவடிக்கைகளுக்கு கவர்னர் மூலம் அனுமதி அளிக்க காலதாமதம் செய்வதும், மத்திய பாஜக திமுக மீது மட்டும் நடவடிக்கை எடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் ஒரு சந்தேக பார்வையை மக்களிடம் ஏற்படுத்துகிறது.

திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் பாஜகவை எதிர்த்து அதிமுக அரசியல் செய்ய வேண்டும் என்கிற கருத்தை 2018-ல் தெரிவித்தார் அதற்காக இபிஎஸ் அவரை கட்சியை விட்டு நீக்கினார். ஆனால் கேசிபி இன்றுவரை தொடர்ந்து பாஜக எதிர்ப்பு நிலையில் பயணித்து வருகிறார். ஆனால் இதுவரை அவருடன் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. உண்மையிலேயே இபிஎஸ் பாஜக எதிர்ப்பு நிலையில் உறுதியாக இருந்தால் கேசிபியுடன் இணைந்து பயணிக்கலாமே.

இபிஎஸ்- இன் கடந்த கால வரலாறுகளை பார்த்து அவரை நம்பகத்தன்மை வாய்ந்தவராக பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.கொள்கை சார்ந்த சித்தாந்த அரசியல் செய்வதற்கு பதிலாக சாதிய அரசியல் செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இவர்கள் மீது வலிமையாக இருக்கிறது.

ஒன்றுபட்டு வலிமையான அதிமுக-வை கட்டமைத்து பலரும் கூட்டணிக்கு ஆர்வமாக நாடிவருவதற்கு கட்சியை போதுமான அளவு வேகமான கள அரசியலுக்கு அதிமுக தயார்படுத்த படாமல் பாஜக VS திமுக (இந்துத்துவா VS திராவிடம்) என்கிற சித்தாந்த அரசியல் கட்டமைக்கப்படுகிறது.இதை உணர்ந்து செயல்படுவாரா எடப்பாடி பழனிசாமி?” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Share on:

டிடிவி தினகரன் திவாலானவர் என்ற அறிவிப்பு செல்லாது..


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கடந்த 1995 – 1996 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்றதாகவும், பின்னர் அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும் டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறையினர், ஃபெரா என்னும் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த 1998ஆம் ஆண்டு டிடிவி தினகரனுக்கு 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையம், 31 கோடி ரூபாய் அபராதத்தை, 28 கோடி ரூபாயாக குறைத்து உத்தரவிட்டது.

இந்த அபராதத்தை செலுத்தாததால் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத் துறை பிறப்பித்த நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனுத்தாக்கல் செய்தார்.

உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005 ஆம் ஆண்டில் தாக்கல் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தது. இந்த மனு பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
Share on:

கூட்டணியை முறித்த அதிமுக.. ‘கனத்த’ மவுனத்துடன் பாஜக!


அதிமுக கூட்டணியை முறித்த பின்னரும் பாஜக கனத்த மவுனம் கனத்த பயங்கர சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி பகீர் பதிவிட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்ணா திமுக இடம் பெற்றிருந்தது. இந்தக் கூட்டணியில் தேசிய அளவில் 2-வது பெரிய கட்சியாக இடம் பெற்றிருந்தது அதிமுக.

ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இடைவிடாமல் அதிமுகவை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக அக்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினர். இதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்தது. பின்னர் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து தீர்மானமும் நிறைவேற்றியது. 2024 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக தலைமையில் தனித்த கூட்டணி அமைக்கப்படும் எனவும் அக்கட்சி அறிவித்தது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக அதிமுக அறிவித்தும் இதுவரை பாஜக மௌனம் காப்பதற்கான காரணம் என்ன ?

சிறுபான்மையினர் வாக்கு முழுமையாக அதிமுக பக்கம் சென்று விட கூடாது என்று குழப்பத்தை உண்டாக்கி அதன் மூலமாக பாஜக vs திமுக என்ற சித்தாந்த அரசியலை கையில் எடுக்கவா? மீண்டும் தேர்தலுக்கு முன் அதிமுகவை கூட்டணியில் இணைத்து விடலாம் என்ற நம்பிக்கையா? திமுக கூட்டணியை பிளவுபடுத்தும் யுக்தியா? பாஜகவிற்கும் EPS-க்கும் ஏதேனும் ஒரு மறைமுக ஒப்பந்தமா?

எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார். கேசி பழனிசாமியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on:

கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!


சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துகள் தனக்கு களங்கம் விளைவிப்பதாக இருப்பதாக கூறி, அவதூறு வழக்கின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமனத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனைத்து ஆதரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தவறானது என கே.சி.பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தியாகேஸ்வரன் தெரிவித்தார்

இதையடுத்து, கேசி.பழனிசாமி வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Share on:

திடீர் IT Raid பின்னணியில் யார்!


சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.. சௌகார்பேட்டையில் மருத்து ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.. சவுகார்பேட்டை ஸ்டார்ட்டன் முத்தையா முதலி தெருவில் தொழில் அதிபர் ஒருவர் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மாதவரம் நடராஜன் நகரில் உள்ள தனியார் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தாம்பரம், குன்றத்தூர், எழும்பூர், மண்ணடி, தாம்பரம், வேப்பேரி, பூக்கடை, வேப்பேரி, வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு, உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்துவருவதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள், அந்த நிறுவனம் தொடர்பான இடங்களிலும் வருமானவரி சோதனை நடக்கிறது.. இந்த சோதனைக்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த சோதனையின் முடிவில்தான் அரசியல் காரணம் குறித்து தெரியவரும்.

இந்த சோதனையும், விசாரணையும் முழுமையாக முடிவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது. என்றாலும், விடிகாலையிலேயே ரெய்டு நடத்தப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை சென்னையில் ஏற்படுத்தி வருகிறது.
Share on:

10 வயது சிறுவனை காவு வாங்கிய டெங்கு காய்ச்சல்!


பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவாரம் தொடர் சிகிச்சையில் இருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிழந்தார். ஒரு வாரம் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிறுவன், சிகிச்சை பலளின்றி பலியானார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின வழிகாட்டுதலின் படி டெங்கு பரவலைக் குறைக்க எல்லா மாநிலங்களும் தீவிர நடிவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான தனி மருத்துவ பிரிவும் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சக்தி சரவணன் என்ற 10 வயது சிறுவன் இன்று காலையில் உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரத்த அணுக்கள் குறைந்து வந்ததாக தெரிகிறது. ஒரு வாரம் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிறுவன், இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் ஏற்கனவே 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
Share on:

சென்னிமலையில் பதற்றத்தை உண்டாக்கிய இந்த நபரை திமுக அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?


சென்னிமலை-யில் பதற்றத்தை உண்டாக்கிய நபரை திமுக அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஒரு மதவாத மோதலை திமுகவும்,பாஜக வும் திட்டமிட்டு அரங்கேற்றி கொங்குமண்டலத்தில் அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளாக கொங்கு மக்களின் குலதெய்வமாக விளங்குகிற முருகப்பெருமான் குடிகொண்டிருக்கிற சென்னிமலை ஸ்தலத்திற்கு “கல்வாரி மலை என மாற்றம் செய்வோம்” என்று பகிரங்கமாக சவால் விட்டு பொது அமைதிக்கு களங்கம் விளைவித்த இந்த நபர் மீது முதலமைச்சர் திரு ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்குவதன் காரணம் என்ன?
Share on:

தலித் இளைஞரை ஆபாசமாக திட்டியதால் சஸ்பெண்ட்


சேலம் அருகே கோயிலுக்குள் புகுந்து சண்டையிட்டதாக கூறி தலித் இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கட்சியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் பொறுப்பை வழங்கி துரைமுருகன் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் திருமலைகிரி அருகே மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்வதற்கு உயர்சாதியினர் தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த தடையை மீறி கோயிலுக்குள் சென்றுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக அந்த பட்டியலின இளைஞரை சூழ்ந்த ஊர் மக்கள் அவரை கடுமையாக விமர்சித்து மிரட்டல் விடுத்தனர். அந்த நேரத்தில் அங்கிருந்த சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் டி. மாணிக்கம் பட்டியலின இளைஞரின் நெஞ்சை பிடித்து தள்ளினார். அத்துடன் அங்கு நின்றுகொண்டு இருந்த பட்டியலின இளைஞரின் தந்தையையும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார்.

மேலும், அங்கு நின்ற தலித் மக்களை காட்டி, “இவர்கள் எல்லாம் ஆட்கள் இல்லையா? இவர்களுக்கு தெரியாதை நீ செய்கிறாயா? சோறு தண்ணி இல்லாமல் செத்து போயிடுவ. எங்கேயும் போக முடியாது. எத்தனை நாள் நீ என் வீட்டுக்கு வந்த. உன் பையனுக்கு எங்கு போனது புத்தி? எங்க ஊருல பாதி பேரு கோயிலுக்கே வர மாட்டேன் என்கிறான். கோயிலே வேண்டாம் என்கிறான். எல்லாத்தையும் காலி பண்ணிருவேன்.” என்றார்.

பட்டியலின இளைஞரை தகாத முறையில் திட்டிய சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் டி மாணிக்கத்தை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி அறிவித்தார்.
Share on:

VAO-வை லாரி ஏற்றி கொல்ல முயன்றது திமுக நிர்வாகிகள்..


பழனி அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளியதை தடுக்க முயன்ற விஏஓ மீது கொலை முயற்சி நடந்த நிலையில், திமுக நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு மணல் அள்ளிய லாரிகளை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், அங்கு மணல் அள்ளியவர்களிடம் ஆயக்குடி பகுதிக்கான பாஸ் எதுவும் இல்லாததும் வேறொரு பகுதியான தாதநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குளத்திற்கான பாஸ் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

காவல் நிலையம் செல்வதற்காக லாரிகளை முன்னால் செல்ல விட்டு பின்னால் வி.ஏ.ஓ, அவருடைய உதவியாளர் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென லாரிகளை வேகமாக இயக்கியும், பின்னால் இருசக்கர வாகனங்கள் பின் தொடராத வண்ணம் ஜீப்பில் வந்தவர்கள் இருசக்கர வாகனத்தை முந்தவிடாமல் அவர்களை வலது புறமும், இடது புறமும் வாகனத்தை இயக்கி பின்னால் கதவை திறந்து விட்டு மண்ணை மேலே கொட்டியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வி.ஏ.ஓ கருப்புசாமி ஆயக்குடி காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். காவலர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

இதையடுத்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு லாரியுடன் தப்பி ஓடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வி.ஏ.ஓ மற்றும் அவரது உதவியாளர் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் விஏஓ மற்றும் உதவியாளரை கொல்ல முயன்ற புகாரில் திமுக நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஏஓ கருப்பசாமி, அவரது உதவியாளர் மகுடீஸ்வரன், இரு காவலர்கள் ஆகிய நால்வரை அவர்கள் மீது ஆற்று மணலைக் கொட்டியும், லாரியை ஏற்றியும் படுகொலை செய்ய முயன்ற நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது
Share on:

வரலாறுகளுக்குதானே விடை தெரியும்!


மகாராஷ்டிரா அரசியலில் யாரோ ஒருவர் உருவாக்கிய கட்சியில் இணைந்து அதே கட்சியை கபளீகரமே செய்து கட்சி ஓனரையே கதறவிட்டவர் ஏக்நாத் ஷிண்டே. அதனால்தான் என்னவே மாமனார் உருவாக்கிய கட்சியை ஆட்டைய போட்ட ‘சந்திரபாபு’க்கள் மறக்கடிக்கப்பட்டு ‘ஏக்நாத் ஷிண்டே’க்கள் பெயர் அதீதமாக இந்திய அரசியல் அரங்கில் உச்சரிக்கப்படுகின்றன.

தமிழ்நாடுதான் என்றில்லை… அதிமுகதான் என்றில்லை.. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஷிண்டேவை ‘டெல்லி’ சர்க்கார் “உற்பத்தி” செய்து கொண்டுதான் இருக்கிறது. தேசிய கட்சிகள் என்றில்லை.. மாநில கட்சிகள்தான் என்றில்லை.. மிசோரம் போன்ற குட்டி மாநிலங்களிலும் கூட எல்லை அருணாச்சல பிரதேசத்திலும் கூட ஷிண்டேக்கள் “உற்பத்தி” டெல்லியால் புற்றீசல் போல புறப்பாடு ஆகி கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்நாடு பாஜக தலைவருக்கும் ஒரு ஷிண்டே இருக்கிறார்தானே.. அதையேதான் ” அண்ணாமலைக்கு ‘ஆப்பு’- அதிமுகவின் 2 ஏக்நாத் ஷிண்டேக்கள் ப்ளஸ் பாஜக பெண் தலைவரின் ஸ்கெட்ச் நிறைவேறும்?” என நாமும் எழுதி இருந்தோம்.

“நாம நினைப்பது போல நாலு கூறாக இந்த “மா” நிலம் பிளவுபடாமலா போகும்? நமக்கும் ஒரு நாள் நாற்காலி வராமலா போகும்? சுழற்சி முறையில் மூவருமாய் மகுடம் சூட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்? போன முறை பிடியில் இருந்தவர்கள் 2026-ல் பின்வருவார்களா? புதிய முகங்களை வளைக்க முடியுமா? “முதலீடு” என்ன? “வருவாய்” என்ன? என்பதில்தான் ஷிண்டேக்கள் மூச்சுக்கு மூச்சு விவாதிக்கிறார்களாம்!
Share on: