கூட்டணியை முறித்த அதிமுக.. ‘கனத்த’ மவுனத்துடன் பாஜக!


அதிமுக கூட்டணியை முறித்த பின்னரும் பாஜக கனத்த மவுனம் கனத்த பயங்கர சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி பகீர் பதிவிட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்ணா திமுக இடம் பெற்றிருந்தது. இந்தக் கூட்டணியில் தேசிய அளவில் 2-வது பெரிய கட்சியாக இடம் பெற்றிருந்தது அதிமுக.

ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இடைவிடாமல் அதிமுகவை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக அக்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினர். இதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்தது. பின்னர் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து தீர்மானமும் நிறைவேற்றியது. 2024 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக தலைமையில் தனித்த கூட்டணி அமைக்கப்படும் எனவும் அக்கட்சி அறிவித்தது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக அதிமுக அறிவித்தும் இதுவரை பாஜக மௌனம் காப்பதற்கான காரணம் என்ன ?

சிறுபான்மையினர் வாக்கு முழுமையாக அதிமுக பக்கம் சென்று விட கூடாது என்று குழப்பத்தை உண்டாக்கி அதன் மூலமாக பாஜக vs திமுக என்ற சித்தாந்த அரசியலை கையில் எடுக்கவா? மீண்டும் தேர்தலுக்கு முன் அதிமுகவை கூட்டணியில் இணைத்து விடலாம் என்ற நம்பிக்கையா? திமுக கூட்டணியை பிளவுபடுத்தும் யுக்தியா? பாஜகவிற்கும் EPS-க்கும் ஏதேனும் ஒரு மறைமுக ஒப்பந்தமா?

எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார். கேசி பழனிசாமியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on: