வரித்துறை திமுக அரசின் மீது கடுமை காட்டினால் அதை அவர்கள் தாங்கி நிற்பார்களா

செந்தில் பாலாஜி சாதுரியமாக தனக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட மோதலை, திமுகவிற்கும் வருமான வரித்துறைக்கும் என்று மாற்றிவிட்டார்.

இதை உணராத ஸ்டாலின் அவர்களும் “PTR -இன் விஷயத்தில் அது அவர் தனிப்பட்ட விவகாரம் அவர் பார்த்துக்கொள்வார்”என்று ஒதுங்கிக்கொண்டு செந்தில் பாலாஜி விஷயத்தில் மட்டும் தேவைக்கு அதிகமாக அவரை ஆதரித்து அனைத்து திமுகவினருக்கும் பிரச்சனையை தேடிக்கொண்டார் .ஏன் செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஸ்டாலின் ஆதரவு தருவது ஏன் என்று திமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது .

வருமான வரித்துறையினர் தமிழ்நாடு முழுவதும் திமுகவை சார்ந்தவர்கள் மீது சற்று கடுமை காட்டினால் போதும்,திமுகவின் பொருளாதாரம் மற்றும் ஆதரவு குறையும்.ஏனென்றால் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை செய்த பொழுது அவரது ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினரின் கார் கண்ணாடிகளை உடைத்த பிரச்சனை பேசும் பொருளாக மாறி உள்ளது .எனவே அவர்கள் திமுக அரசின் மீது கடுமை காட்டினால் அதை அவர்கள் தாங்கி நிற்பார்களா
Share on:

தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்தால் தான் ஒண்றிணைக்க முடியும்!



திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் zoom மூலமாக தொண்டர்களுடன் கலந்துரையாடிய பொழுது கூறியதாவது ,தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்தால் தான் ஒண்றிணைக்க முடியும்.மேலும் தலைவர்கள் என்பவர்கள் சுயநலவாதிகள் ,அவர்களுக்கு தங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு ,அவர்களின் குடும்பத்தின் தேவையை நிறைவேற்றி கொள்வதற்கும் ,அவர்களின் உற்றார் உறவினர்களுக்கும் ,அவர்களின் கமிஷன் ஏஜெண்டுகளுக்கும் நிறைவேற்றிகொள்வதற்காக மட்டுமே இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் உரையாடலின் பொழுது அவர்கள் அனைவரும் கட்சியை பற்றி சிறிது கூட அவர்கள் கவலை படுவதில்லை என்று கூறியுள்ளார் .அடிமட்டத்தில் மற்றும் கிளை அளவில் உள்ளவர்கள் தான் கட்சியின் தேவைகளை பற்றி நன்றாக தெரிந்து மக்கள் என்ன எதிர் பாக்கிறார்கள் ,ஒன்று பட்ட அண்ணாதிமுகவிவை எதிர்பாக்கிறார்கள் .அதனை நோக்கி பயணிக்க வேண்டும் ,அதனை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் .எனவே நாம் அதனை நோக்கி பயணித்து ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் உரையாடும் பொழுது கூறியுள்ளார்
Share on:

மதுவிலக்கு குறித்து திமுகவின் இரட்டை வேடம்!



தமிழ்நாட்டில் தற்பொழுது மதுவிலக்கு இல்லாததால் ஏழை ,எளிய விவசாய பெருங்குடி மக்கள் ,தொழிலாளத் தோழர்கள் ,ஏன் ஏழை மாணவர்களும் கூட தொடர்ந்து மனம் போக்கில் மதுவை அருந்தி நூற்றுக்கணக்கில் உயிர்பலி ஆகிறார்கள் .இந்த கொடுமைக்கும் ,கொடூர பழக்கத்திற்கும் ஆண்கள் மட்டுமன்றி தாய்மார்களும் ,பச்சிளம் குழந்தைகளும் பலியாகிறார்கள் என்கிற செய்தி தொடர்ந்து வந்துகொண்டிக்கின்றன .எனவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும் ,ஏற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் – மு.கருணாநிதி ஜூலை 20,2015

இந்தியாவிலேயே அதிகமாக இளம் விதவைகள் இருக்க கூடிய மாநிலமாக தமிழ்நாடு மாறிக்கொண்டு இருக்கிறது .ஏனென்றால் இங்கே ஒவ்வொரு நாளும் குடிப்பழக்கத்துக்கும் ,மதுவுக்கும் அடிமையாகும் நிலை அதிகரித்துக்கொண்டே போகிறது .அதைப்பற்றி இந்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை;கவலையில்லை – கனிமொழி ,ஏப்ரல் 10,2016

திமுக தேர்தல் அறிக்கையில் (2016),மதுவிலக்கை அமல்படுத்த தனி சட்டம் கொண்டு வரப்படும் .டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கலைக்கப்படும் . அதில் பணியாற்றும் ஊழியருக்கு மாற்று வேலை தரப்படும் என்று தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது .மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்கு தான் .எனவே திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்று உறுதி அளிக்கிறேன் – மு.க.ஸ்டாலின்,ஏப்ரல்20,2016

திமுக தேர்தல் அறிக்கையில் (2021) எங்கும் பூரண மதுவிலக்கு என்றோ ,மதுக்கடைகளை குறைப்போம் என்றோ வாக்குறுதி கொடுக்கவில்லை – செந்தில் பாலாஜி ,பிப்ரவரி 2,2023
Share on:

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை.

இதன் தொடர்ச்சியாக விரைவில் அமலாக்கதுறையும் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்த வாய்ப்புள்ளது.

மதுவிலக்கு துறையில் நடந்த முறைகேட்டை “டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வழக்கை போல்” CBI விசாரிக்க வாய்ப்புள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கைதுசெய்யப்பட்ட வாய்ப்பு அதிகம் உள்ளது. @KCPalanisamy1
#Senthilbalaji #Corruption

Share on:

Continue Reading

பாஜக நினைப்பது அவர்களுக்கு அடங்கி போகின்ற கைபொம்மையாக அதிமுகவில் பொதுச்செயலாளரை தக்க வைக்க வேண்டும் என்பது தான்!

திரு.கே.சி பழனிசாமி அவர்கள் zoom மூலமாக தொண்டர்களுடன் கலந்துரையாடிய பொழுது கூறியதாவது ,பாஜக நினைப்பது என்னவென்றால் அவர்களுக்கு அடங்கி போகின்ற கைபொம்மையாக அண்ணாதிமுகவில் பொதுச்செயலாளரை தக்க வைக்க முயற்சி செய்கின்றனர் .அவர்கள் காலில் விழுந்து சசிகலா,தினகரன்,ops,eps அவர்களுக்கிடையே போட்டியை ஏற்படுத்தி அவர்களை தங்களுக்கு அடிமையாக மாற்ற நினைக்கிறார்கள் . மேலும் இவர்கள் ஸ்டாலின் உடன் மறைமுகமாக ஒப்பந்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள் .ஆனால் bjp நினைப்பது என்னவென்றால் இதனை வைத்து பெரும்பான்மையான இடங்களில் bjp ஐ தேர்தலில் முன்னிறுத்தி கொள்ள ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள் .அவர்கள் குறிக்கோள் என்பது 20-25 சீட்டுகள் bjp கும் 15 சீட்டுகள் மட்டும் அதிமுகவிற்கு ஒதுக்கி கட்டுப்படுத்த நினைக்கிறார்கள் . மேலும் உரையாடலின் பொழுது அதிமுகவில் உள்ள விசுவாசிகள் யாரும் ops -ஐ பார்த்தோ eps-ஐ பார்த்தோ வரவில்லை .அவர்கள் அணிஅவரும் எம்ஜிஆர் மற்றும் அம்மாவை பார்த்து தான் அண்ணாதிமுகவிற்கு வந்தனர் என்றும் ,அவர்கள் வழியே சென்று தொண்டர்களால் ஒரு தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே என்று கலந்துரையாடலில் கூறியுள்ளார் .
Share on:

தற்காத்து கொள்வாரா மு.க.ஸ்டாலின் ?

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூ முதல் 30 ரூ வரை அதிகமாக விற்கப்படுகிறதுஎன்ற குற்றச்சாட்டு மிகப்பெரிய பிரச்சனையாக எழுந்துள்ளது.அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட SP-களுக்கும் Commissioner -களுக்கும் காவல் நிலையங்களுக்கும் உத்தரவிட்டு யாரெல்லாம் டாஸ்மாக்கில் விலை அதிகமாக கொடுத்து வாங்குகிறார்களோ உரிய ஆதாரத்தோடு புகார் கொடுக்கலாம் என்று திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறைக்கு உத்தரவிட்டால் லட்சக்கணக்கான புகார்கள் பதிவாகும். இப்படி ஒரு நடவடிக்கை எடுத்து தன்னை தற்காத்துக்கொள்வது தான் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நல்லது.
Share on:

எடப்பாடி பழனிசாமி அவர்களின் கவர்னர் சந்திப்பு!

எடப்பாடி பழனிசாமி அவர்களின் கவர்னர் சந்திப்பிலும் அதை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு முன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் பொதுவாக ஊழல் குறித்து EPS சொல்கிறாரே ஒழிய எந்தெந்த துறைகளில் எந்தெந்த அமைச்சர்கள் எந்தெந்த வகையில் எவ்வளவு ரூபாய் ஊழல் புரிந்துள்ளார்கள் என்கிற ஆதாரங்களோடு எதையும் அவர் குறிப்பிடவில்லை.

அப்படி குறிப்பிட்டு அதை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி CBI ,IT ,ED மூலமாக நடவடிக்கை எடுக்கலாம் .அதை செய்ய eps பயப்படுவது தன் மீது உள்ள ஊழல் வழக்குகளுக்காகவா அல்லது திமுகவிற்கும் EPS க்கும் உள்ள மறைமுக ஒப்பந்தம் வெறுமனே விளம்பரத்திற்காக பல நாட்களாக பேசப்பட்ட கள்ளச்சாராய விற்பனை குறித்து மட்டும் விரிவாக பேசி ஒப்பந்தப்படி நடந்து கொள்கிறாரா ?
Share on:

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,அம்மாவை போன்று மக்களை வசீகரிக்கும் தலைவரா?

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,அம்மாவை போன்று மக்களை வசீகரிக்கும் தலைவரா? பாஜக தலைமையிலான கூட்டணியில் தான் அதிமுக ஒரு அங்கம் வகிக்கிறது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கவில்லை என்றால். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவிக்க வேண்டும். இது போன்ற பேச்சுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தும் தமிழக பாஜக தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. ஒன்றுபட்ட அதிமுகவாக தனித்து நின்றாலே பாஜக , திமுகவை எதிர்த்து 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றிபெற முடியும் – கே சி பழனிசாமி
Share on:

மக்களிடையே நம்பிக்கை இல்லாத திமுக ஆட்சியை அகற்றி,பாஜகவையும் எதிர்க்கக்கூடிய ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்குவோம்

எதிர்க்கட்சிகளின் பணபலத்தை கட்டுப்படுத்துவதற்க்கே இந்த Rs 2000 நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு.சாதாரண மக்களுக்கு இந்த பணமதிப்பிழப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது .ஆனால் இந்திய பொருளாதாரத்தில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினால் வெறும் காவல்துறை மீது மட்டும் நடவடிக்கை எடுத்து எந்த பயனும் இல்லை கள்ளச்சாராயம் விற்கப்படுகிற பகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர் முதல் கிளை கழக பொறுப்பாளர் வரை கட்சி மற்றும் அரசாங்க பொறுப்புகளில் இருந்து நீக்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தற்பொழுது செந்தில் பாலாஜி 2 ஆண்டுகால தி.மு.க அரசாங்கத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வில் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். விஷச்சாராய விவகாரம் முடிவதற்குள் மீண்டும் தஞ்சாவூரில் டாஸ்மாக் இல் மது வாங்கி அருந்தி இருவர் பலியாயிருப்பது திமுக அரசின் நிர்வாக சீர்கேடையே காட்டுகிறது மக்களிடையே நம்பிக்கை இல்லாத திமுக ஆட்சியை அகற்றி,பாஜகவையும் எதிர்க்கக்கூடிய ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்குவோம்
Share on:

2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெரும் மத்திய அரசின் முடிவு! மக்களுக்கு உள்ள சாதகம் பாதகம் என்ன?

2,000 ரூபாய்த் தாளை மாற்ற வரும் ஒவ்வொருவரிடமும் ஆதார் அட்டையும், பான் அட்டையும் (PAN Card) வங்கியில் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். அவற்றின் பிரதியை, மூலத்தோடு ஒப்பிட்டுச் சரிபார்த்த பின், வங்கியில் வைத்துக் கொள்வார்கள்.

தங்கள் வங்கிக் கணக்கில் பணமாகக் கட்டுபவர்களுடைய ஜாதகம் வங்கியில் ஏற்கனவே இருக்கும். உதாரணமாக, ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி, பான் எண் ஆகியவற்றின் விவரங்கள் வங்கியில் ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்’ (KYC) என்கிற விதியின் படி, வங்கிக் கணினியில் சேமிக்கப்பட்டு இருக்கும்.

அடுத்தாக, ஒருவர் மாற்றுகிற 2,000 ரூபாய்த் தாளின் கூட்டு மதிப்பு (Cumulative Value) ரூ.50,000-ஐத் தாண்டினாலோ, கணக்கில் செலுத்தும் தொகையின் கூட்டு மதிப்பு ரூ.5 லட்சத்தைத் தாண்டினாலோ, அவர்களுடைய விவரங்கள் வருமானவரித் துறைக்கு வங்கிகளின் கணினி வலைப்பின்னல் வாயிலாகத் தானாகவே போய்ச் சேர்ந்து விடும்.

உடனே களத்தில் இறங்கும் வருமானவரித் துறை அதிகாரிகள், பரிசீலனையில் இருக்கும் நபர்களின் கடந்த 3…

Share on:

Continue Reading