அண்ணாதிமுக என்பது ஒரு திராவிட கட்சி .இரட்டை குழல் துப்பாக்கியாக நாங்கள் கொள்கைகளில் பயணிப்போம் !!

ஓ.பன்னீர்செல்வத்தின் பிரச்சனை என்னவென்றால், நேரத்திற்கு தகுந்தமாதிரி எது ஆதாயமாக உள்ளதோ அதேதான் கொள்கை என்று கூறுவார் சிறிது நாட்கள் கழித்து இன்னொரு விஷயத்தை ஆதாயமாக எடுத்துக்கொண்டு அதை கொள்கை என்று கூறுவார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் மட்டும், தான் சொல்கிற விஷயத்தை தான் அனைவரும் கேட்டாக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கின்றார். AIADMK ஒரு கட்சிக்கு இரண்டுமே நல்லதாக அமையாது இருவருமே சுயநலவாதிகள்,ஒருத்தர் சிரித்துக்கொண்டே இருக்கிற சுயநலவாதி,மற்றொருவர் அதற்கு நேர்மாறாக இருக்கின்ற சுயநலவாதி. நாம் இவர்களை பார்த்து அண்ணாதிமுகவிற்கு வரவில்லை புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அவர்களின் வழியிலே வந்தவர்கள் நாம் அவர்கள் இந்த இயக்கம் இப்படித்தான் வழிநடத்தப்படவேண்டும் என்று கொடுத்துஇருக்கிறார்கள். AIADMK தொண்டர்களை வைத்து ஒரு தேர்தல் நடத்தி அதில் யார் தலைமையில் வழிநடத்தப்படவேண்டுமோ அதனை தொண்டர்களின்  விருப்பத்திருக்கேற்ப நடத்த வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக அமையும் ஒருங்கிணைந்தால் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும். ஒரு சமூக நீதி அடித்தட்டு மக்களுக்கு பயன்பெறுகின்ற அனைத்து விஷயங்களும் செய்ய வேண்டும். சாதாரண மனிதன் கூட அதிகாரத்திற்கு வரமுடியும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் முதல் சாதனை. இரண்டாவது சாதனையாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்தில் சத்துணவுதிட்டம், அம்மா அவர்களின் காலத்தில் இலவச சைக்கிள் திட்டம் போன்ற பயன்பெறுகிற திட்டங்களை கொண்டுவந்தனர். AIADMK ஆனால் இன்றைக்கு அந்த அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கின்ற பலன்களை தடுக்கின்ற வகையில்  பாரதியஜனதாகட்சி மறைமுகமாக உச்சநீதிமன்றத்தின் மூலமாக அதை சாதிக்க நினைக்கின்ற பொழுது ,அம்மா அவர்கள் இருந்துருந்தால் அந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொண்டு இலவசங்கள் தொடர வேண்டும் என்று வாதிட்ருப்பார்கள் ஆனால் இவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பேசுவது தவறான விஷயமாகும். AIADMK

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: