எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிப்பது தேர்தல் ஆணையம் தான்!!!

அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படாமலே பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தியுள்ளதாக அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அவரை தொடர்ந்து,எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று அதிமுக அடிப்படை உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் மனு அளிந்திருந்தார்.பொதுச்செயலாளர் வழக்குகளில் இபிஎஸ் வெற்றி பெற்றாலும் இறுதியாக,எடப்பாடியை அங்கீகரிக்க வேண்டியது தேர்தல் ஆணையம்தான்.

திருத்தப்பட்ட தேர்தல் விதிகளின்கீழ் தேர்தல் நடந்தது என்று தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும்கூட, திருத்தப்பட்ட விதிகளுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை ஒப்புதல் தரவில்லை.திருத்தப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் தராத ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை, எப்படி தேர்தல் ஆணையம் ஏற்கும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.

இபிஎஸ்-க்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு அளித்திருந்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக உள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பும் தேர்தலில் பபோட்டியிடுவதா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து பேசியுள்ளனர்.

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிடுகிறது.தேர்தலில் போட்டியிடும் அதிமுகவுக்கு அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற சிக்கல் மீண்டும் எழுந்துள்ளது.மேலும் இரட்டை இலை சின்னம் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டு ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் யாருக்கு அளிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.அதிமுக சார்பாக ஏ பார்ம், பி-பார்ம்களில் கையெழுத்திடும் அதிகாரத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் வழங்கினால் மட்டுமே தேர்தல் ஆணையம் இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதாக அர்த்தமாகும் என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Share on: