அதிமுகவில் தொடரும் ஓபிஎஸ்&இபிஎஸ் அணி தாவல்

அதிமுகவை அழிக்க மு.க.ஸ்டாலின் எண்ணுவதாக விமர்சித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.எஸ்.பி.வேலுமணி அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை,கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ளார்.மேலும் அதிமுகவை ஒழிக்க டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் முயற்சி செய்வதாக திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபோன்றுதொடர்ந்து அதிமுகவினர் திமுகவின் மீது வைக்கப்படும் விமர்சனங்களின் அடிப்படை என்ன? என்ற கேள்வியின் அடிப்படையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி கலந்து கொண்டார்.விவாதத்தில் கலந்து கொண்ட கே.சி.பழனிச்சாமி அதிமுகவை பலவீனப்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி கங்கனம் கட்டி கொண்டு இருக்கிறார்.முதலமைச்சராக இருந்த இபிஎஸ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களை கட்சியிலிருந்து நீக்கி வெளியேற்றினார் தற்போது திமுகவில் முக்கிய அமைச்சர்களாக இருக்கும் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரை இபிஎஸ்-ல் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள் தான்.
அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் என வேலுமணி கூறுவது அபத்தமானது.அதிமுக தொண்டர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வரும் இபிஎஸ், வேலுமணி உள்ளிட்டோரையும் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்.இபிஎஸ்,ஓபிஎஸ் என பிளவுபட்ட அதிமுகவை பாஜகவின் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த மோடி, அமித்ஷா திட்டமிட்டுள்ளனர்.எப்போதெல்லாம் அதிமுக பிளவுபட்டு உள்ளதோ,அதனை வாய்ப்பாக பயன்படுத்தி திமுக ஆட்சியை கைப்பற்றி கொள்கிறது.அதிமுகவின் பிளவை மற்ற கட்சிகள் பயன்படுத்தி கொள்கின்றன இபிஎஸ் பாஜகவை எதிர்க்க துணிந்து விட்டாரா? எடப்பாடி பழனிசாமி மனதளவில் வேண்டுமானால் பாஜகவை எதிர்க்க நினைத்திருப்பார்.
இபிஎஸ் ஒருபோதும் பாஜகவை எதிர்த்து செயல்பட மாட்டார்.மேலும் ஆளுங்கட்சியில் இருந்து கொண்டு திமுக திராவிட கொள்கைகளுக்கு எதிராக தற்போது செயல்பட்டு வருகிறது.திமுக குடும்ப அரசியலை செய்து வருவது திராவிட சித்தாந்தங்களுக்கு முற்றிலும் எதிரானது.அண்ணா குடும்ப அரசியலை முற்றிலும் எதிர்த்து வந்தவர் அவரால் உருவாக்கப்பட்ட திமுக,கொள்கைகளை மறந்து வாரிசு அரசியலை மூன்று தலைமுறையாக செய்து வருகிறது.
எம்ஜிஆரின் வாரிசாக ஜானகியம்மாள் அதிமுக தலைமை பதவிக்கு போட்டியிட்டார்.தேர்தலில் அதிமுக தொண்டர்கள் ஜானகியம்மாளை தோற்கடித்து எதிர்ப்பை காட்டினர்.அதேபோல் திமுக தொண்டர்கள் வாரிசு அரசியலை எதிர்த்து உதயநிதியை தோற்கடிக்க தைரியம் இருக்கிறாதா என்று கேள்வி எழுப்பினார். திமுகவின் கூட்டணி கட்சிகளும் வாரிசு அரசியலை ஏற்று கொண்டு அமைதி காப்பது சரியான அரசியல் நிலைப்பாடு அல்ல.குறிப்பாக சிபிஐ போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் வாரிசு அரசியலுக்கு துணை போவது சரியானதல்ல என்று கே. சி. பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

இந்த தொகுப்பினை வீடியோவடிவில் காண
https://youtu.be/HLjZbSMQz2Y

Share on: