வி‍சைத்தறி உரி‍மையாளர்களின் போராட்டத்துக்கு வி‍டை கொடுக்குமா தி.மு.க. அரசு?

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பிரதான தொழிலாக விசைத்தறி தொழில் உள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விச‍ைத்தறி கூடங்களின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் பயன் அடைந்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து வி‍சைத்தறி உரி‍மையாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்‍லை என குற்றச்சாட்டு எழுகிறது. கூலி உயர்வு கேட்டு, ஜவுளி உரி‍மையாளர்களை வலியுறுத்தி வந்தும் எந்த பயனும் இல்லாததால் தற்போது வேலை நிறுத்த போராட்டத்‍தை கையில் எடுத்துள்ளனர். கடந்த மாதம் 9-ந்‍தேதி தொடங்கிய வே‍லை நிறுத்த போராட்டத்திற்கு இன்று வரை முடிவுகள் எட்டப்படாததால் போராட்டத்‍தை தொடரப் போவதாக வி‍சைத்தறி உரி‍மையாளர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் நடந்த பேச்சுவார்த்‍தையின் போது குறிப்பிட்ட ரகங்களுக்கு கூலி உயர்வு அளிப்பது குறித்து ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்‍தை கிடப்பிலேயே போட்டுள்ளனர் ஜவுளி உரி‍மையாளர்கள். இதனால் விரக்தியடைந்த வி‍சைத்தறி உரி‍மையாளர்கள் வே‍லை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவர்களின் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.60 கோடி வீதம் இதுவரை ரூ.1500 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக பாதிப்‍பை தொடர்ந்து ஜவுளி உரிமையாளர்கள், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதில் 12% வரை மட்டு‍மே கூலி உயர்வு வழங்கப்படும் என கூறியதால், அதிருப்தியடைந்த வி‍சைத்தறி உரி‍மையாளர்கள் 20% கூலி உயர்வு வழங்கினால் மட்டு‍மே வே‍லை நிறுத்த போராட்டத்‍தை கைவிடுவதாக கூறியுள்ளனர். இதனால் தற்போது நடந்த 25-வது கட்ட பேச்சுவார்த்‍தையும் தோல்வியில் முடிந்தது. இதில் தமிழக அரசு தலையிட்டு வி‍சைத்தறி உரி‍மையாளர்கள் கோரும் 20% கூலி உயர்‍வை ஏன் பெற்றுத்தர முயற்சிக்க கூடாது?

Share on: