துணிச்சல் இருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அல்லது குறைந்தபட்சம் அண்ணாமலையாவது தனித்து நின்று வெற்றிபெற முயற்சிக்கட்டும்!


“ஆலயத்தில் தெய்வநிந்தனைப் பேச்சு நடந்தது நல்லதல்ல.அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லையேல் விழாவைத் தமுக்கம் மைதானத்துக்கு மாற்றிவிட வேண்டும்.

பி.டி.ஆர். தேவரின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘விழாவில் அவரவர் கருத்தைச் சொல்வதற்கு உரிமையுண்டு’ என்றார் அவர். உடனே தேவர் ஒலிபெருக்கி முன் வந்து நின்றார்.

‘எக்காரணத்தைக் கொண்டும் ஆலயத்தில் யாரும் தெய்வநிந்தனைப் பேச்சு பேசக் கூடாது. முதல் நாள் அண்ணாதுரை பேசியது பக்தர்கள் மனதைப் புண்படுத்திவிட்டது. எனவே பொன்விழா நிகழ்ச்சிகளைத் தமுக்கம் மைதானத்துக்கு மாற்றிவிட வேண்டும்’ என்றார் அவர்.

அது ஒரு கௌரவப் பிரச்சனையாக மாறியது. தேவர் சொன்னதற்காக விழாவை மாற்றுவதா?ஆடி வீதியில் தான் நடத்துவது என்று வீம்பு செய்யப்பட்டது.

ஆனால் கோவில் நிர்வாகிகள் ஆட்சேபணை தெரிவித்தனர்.அவர்கள் தேவர் பக்கம் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டனர்.மறுநாள் முதல் நிகழ்ச்சிகள் தமுக்கம் மைதானத்துக்கு மாற்றப்பட்டன.”

இதற்கு ஆதாரம் அன்றைய பத்திரிக்கை செய்திகளைத் தொகுத்து திரு தராசு ஹ்யாம் அவர்கள் எழுதிய “வீரத்திருமகன்” என்ற புத்தகத்தில் “68” ஆம் பக்கம் இதுபற்றிய விரிவான குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.

உண்மை இவ்வாறு இருக்க அதிமுக தலைவர்களை விமர்சித்தும் தான் 10 ஆண்டுகளாகத் துப்பாக்கி பிடித்தவன் என்று தேர்தலில் வெற்றிபெறத் துப்பில்லாத அண்ணாமலை பேசுவது ஆணவத்தின் அடையாளம்.துணிச்சல் இருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அல்லது குறைந்தபட்சம் அண்ணாமலையாவது தனித்து நின்று வெற்றிபெற முயற்சிக்கட்டும்.
Share on: