விவசாயிகளுக்கும், அரசுக்கும் வேண்டும் அதிக நிவாரண நிதி!


வடகிழக்கு பருவமழையின் முதல் தாக்கம் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் பாதிப்பையும், அதில் 12 மாவட்டங்களில் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒரு பெரும் மழையால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம்! தமிழக அரசு மத்திய அரசு அதிக நிவாரண நிதி அளித்தால்தான் இதை ஈடுகட்டமுடியும் என்று கூறுகிறது மேலும் அமைச்சர்களின் குழு முதல் அமைச்சரிடம் வெள்ள பாதிப்பின் அறிக்கை தாக்கல் செய்தது. அதன்படி முதலமைச்சர் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டர் ஒன்றுக்கு ரூ 20 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தது, வரவேற்கத்தக்கது ஆனால் தற்போதைய தேவை என்பது பருவநிலை மாற்றங்களிலும் நல்ல மகசூல் பெரும் வகையில் விவசாயத்திற்கு உதவி செய்யவேண்டும், இதை செயல்படுத்த சரியான வல்லுநர் குழு அமைக்க வேண்டும்.

Share on: