திமுக தேர்தல் அறிக்‍கையில் கூறியபடி அனைவரது நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

திமுக தேர்தல் அறிக்‍கையில் கூறியபடி அனைவரது நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புதிதாக சில நிபந்தனைகளை கூறி 35 லட்சம் பேரின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்பது மக்களின் நம்பிக்‍கைக்கு அளிக்கும் து‍ரோகம். தமிழக அரசு தனது முடிவி‍னை மறுபரிசீலனை செய்து, அனைவரின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும்.

Share on:

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த திட்ட நடவடிக்கைகள் என்ன?

திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகளை நி‍றை‍வேற்றியுள்ளதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே, அவை அனைத்தும் மொழி மற்றும் கலாச்சாரம் சார்ந்தவை. நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மொழி எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு நாட்டின் பொருளாதாரமும் அவசியம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த திட்ட நடவடிக்கைகள் என்ன? அதற்கான பணிகள் முடுக்கப்பட்டுள்ளதா?
–திரு.கே.சி பழனிசாமி

Share on:

ஓ.பி.எஸ். மீது நடவடிக்‍கை எடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தயங்குவது ஏன்?

புளியந்‍தோப்பு கே.பி.பார்க்கில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் வாழத்தகுதியற்றது என சென்‍னை ஐஐடி அறிக்‍கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தரமாக கட்டியிருப்பதாக கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.91 லட்சம் போனஸ் வழங்க உத்தரவிட்டது யார்?
ஓ.பி.எஸ். மீது நடவடிக்‍கை எடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தயங்குவது ஏன்?

Share on:

இந்தியாவின் இதயத்திற்கு நெருக்கமான இவரை நம்மிடம் இருந்து ஒரு கோர விபத்து பறித்துக்கொண்டது

ஒரு ஏழை குடும்பத்தின் முதல் பட்டதாரி இனி இல்லை.
21 வயது மாணவர் மணிகண்டன் தனது பைக்கை காவல்துறையினரிடம் இருந்து சில மீட்டர் தொலைவில் நிறுத்தியபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது, போலீஸார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மோசமாகத் தாக்கி மாலையில் விடுவித்ததாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு சம்மந்தப்பட்ட அதிகாரியின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமா ?

Share on:

சம்மந்தப்பட்ட அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

ஒரு ஏழை குடும்பத்தின் முதல் பட்டதாரி இனி இல்லை.
21 வயது மாணவர் மணிகண்டன் தனது பைக்கை காவல்துறையினரிடம் இருந்து சில மீட்டர் தொலைவில் நிறுத்தியபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது, போலீஸார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மோசமாகத் தாக்கி மாலையில் விடுவித்ததாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு சம்மந்தப்பட்ட அதிகாரியின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமா ?

Share on:

வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பில் திமுக அரசு.

விலைவாசி உயர்வு மதுவிலக்கு, வயல் வெளிகளில் மின்சார கோபுரம் அமைத்தல், பாலியல் குற்றச்சாட்டு,மாத மாத மின் கணக்கெடுப்பு சிறுபான்மையினர் பாதுகாப்பு, பாஜக அடிமை ஆட்சி இவற்றில் இந்த ஆறு மாதத்தில் திமுக செய்தது என்ன என்று கேள்வி கேட்டு பதில் தேடினால் ஆட்சி எப்படி என்று புரியும்.
இவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்ன எதை எதை நிறைவேற்றியுள்ளார்கள் எனக் கேள்வி கேட்கவோ தவறுகளைச் சுட்டிக்காட்டவோ எந்த ஊடகத்திற்கும் தைரியமில்லை

Share on:

இவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்ன எதை எதை நிறைவேற்றியுள்ளார்கள்?

விலைவாசி உயர்வு மதுவிலக்கு, வயல் வெளிகளில் மின்சார கோபுரம் அமைத்தல், பாலியல் குற்றச்சாட்டு,மாத மாத மின் கணக்கெடுப்பு சிறுபான்மையினர் பாதுகாப்பு, பாஜக அடிமை ஆட்சி இவற்றில் இந்த ஆறு மாதத்தில் திமுக செய்தது என்ன என்று கேள்வி கேட்டு பதில் தேடினால் ஆட்சி எப்படி என்று புரியும்.
இவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்ன எதை எதை நிறைவேற்றியுள்ளார்கள் எனக் கேள்வி கேட்கவோ தவறுகளைச் சுட்டிக்காட்டவோ எந்த ஊடகத்திற்கும் தைரியமில்லை

Share on:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2021

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மக்கள் நகராட்சி தலைவர், பேரூராட்சித்தலைவர் மற்றும் மேயர் அவர்களை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2011க்கு பிறகு நடைபெறவே இல்லை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மக்கள் நகராட்சி தலைவர், பேரூராட்சித்தலைவர் மற்றும் மேயர் அவர்களை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.
ஆளுகின்ற தி.மு.க 2006 இல் நேரடி நகர்ப்புற தேர்தலுக்குப் பதில் மறைமுக தேர்தல் கொண்டுவந்தது.
2011 இல் மீண்டும் அதிமுக ஆட்சி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நேரடி தேர்தல் நடத்த ஆணையிட்டார்.
2016 இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற நிலை வரும்போது ஜெயலலிதா அவர்களின் உடல்நிலை மோசமாகப் போனது.
பிறகு அவர் காலமானார். அதன் பின் உள்ளாட்சித் தேர்தல் கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் நடைபெறவில்லை.
தொடர்ச்சியாக அதிமுக உறுப்பினர்களின் மீது பல்வேறு வழக்குகள். பின்பு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி கிராமப்புறங்களுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. அதுவும் வெறும் 27 மாவட்டங்களுக்கு மட்டும்.விடுபட்ட மாவட்டங்களுக்கு இப்போது தி.மு.க ஆட்சியில் நடைபெற்றது.
இந்த சூழ்நிலையில் தான் நகராட்சி தலைவர், பேரூராட்சித்தலைவர் மற்றும் மேயர் தேர்வு நேரடி தேர்தல் மூலமாகவா அல்லது மறைமுக தேர்தல் மூலமாகவா என்ற கேள்வி எழுகிறது. திமுக கூட்டணிக் கட்சிகளோ நேரடி தேர்தல் நடத்தக் குரல் கொடுத்தவண்ணம் உள்ளனர்.
நேரடி தேர்தல் நடத்துவதன் மூலம் கீழ்மட்டத்தில் இருக்கும் வேட்பாளர்கள் மிக இயல்பாக நட்சத்திர தலைவர்கள் ஆக முடியும் அது போக அவர்களுக்குக் களத்தில் பணியாற்றப் பயிற்சி கிடைக்கும் நிச்சயமாகச் சட்டமன்றத்தில் ஜொலிப்பதற்கு வாய்ப்புண்டு. நேர்மையான முறையில் எந்தவித அரசியல் அழுத்தங்களின்றி பணபலம் இன்றி நேர்மையான முறையில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுமா? அதில் மக்கள் நேரடியாக தங்கள் மாநகராட்சி நகராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்படுமா?

Share on:

தமிழக அரசு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா?


கரூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் வேன் மோதி கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக அரசு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு மாநிலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக் கொல்லப்பட்டார் மற்றும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-திரு.கே.சி.பழனிசாமி Ex.MP, MLA

Share on:

விவசாயிகளுக்கும், அரசுக்கும் வேண்டும் அதிக நிவாரண நிதி!


வடகிழக்கு பருவமழையின் முதல் தாக்கம் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் பாதிப்பையும், அதில் 12 மாவட்டங்களில் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒரு பெரும் மழையால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம்! தமிழக அரசு மத்திய அரசு அதிக நிவாரண நிதி அளித்தால்தான் இதை ஈடுகட்டமுடியும் என்று கூறுகிறது மேலும் அமைச்சர்களின் குழு முதல் அமைச்சரிடம் வெள்ள பாதிப்பின் அறிக்கை தாக்கல் செய்தது. அதன்படி முதலமைச்சர் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டர் ஒன்றுக்கு ரூ 20 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தது, வரவேற்கத்தக்கது ஆனால் தற்போதைய தேவை என்பது பருவநிலை மாற்றங்களிலும் நல்ல மகசூல் பெரும் வகையில் விவசாயத்திற்கு உதவி செய்யவேண்டும், இதை செயல்படுத்த சரியான வல்லுநர் குழு அமைக்க வேண்டும்.

Share on: