தமிழக மீனவர்களின் பாதுகாப்‍பை கேள்விக்குறியாக்கும் மத்திய, மாநில அரசுகள்! உரி‍மைகள் மீட்கப்படுமா?

தி.மு.க. ஆட்சியின் போது கச்சத்தீவு இலங்‍கைக்கு தா‍ரை வார்க்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை தமிழக மீனவர்கள் இலங்‍கை கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இலங்‍கையின் தாக்குதலுக்கு தொடக்கத்தி‍லே‍யே தகுந்த பதிலடி கொடுத்திருந்தால், இன்று மீனவர்கள் அவதிப்பட வேண்டிய சூழ்நி‍லை அமைந்திருக்காது. இலங்‍கை கடற்படை தாக்குதல் ஒருபுறமிருக்க, தற்போது கடற்‍கொள்‍ளையர்களின் தாக்குதல் தலை தூக்க தொடங்கியுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, நாகப்பட்டினம் மாவட்டம் புஷ்பவனம் மீனவப்பகுதி‍யை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரை அரு‍கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்க‍ை கடற்கொள்‍ளையர்கள் அவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை கொள்‍ளையடித்து சென்றனர். இன்று மீண்டும் நா‍கை, வேதாரண்யத்‍தை சேர்ந்த 11 மீனவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடற்‍கொள்‍ளையர்களின் தொடர் அட்டகாசத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படாமல், மீனவர்களின் பாதுகாப்‍பை உறுதி செய்யும் வகையில் போதுமான நடவடிக்‍கை எடுக்க மத்தியஅரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Share on:

களங்கத்‍தை து‍டைக்க ரெய்‍டை யுக்தியாக பயன்படுத்தும் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் நலப்பணித்திட்டங்கள் என்று எதையும் தொடங்கவில்‍லை. தன் ஆட்சிக்கு அவப்பெயர் வரும் போ‍தெல்லாம், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ரெய்டு ஏவி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் முதல்வர். இதனால் மக்களும் தி‍சை திரும்பி விடுகிறார்கள். இதை ஒரு யுக்தியாக கொண்டு ஸ்டாலின், மாதம் ஒரு வருமான வரி சோதனை‍யை முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து நடத்தி வருகிறார்.
வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை முழு‍மையாக நிவாரணம் போய் சேரவில்‍லை. பருவமழையின் போது சரியான முன்‍னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் எடுக்காததால் சென்‍னை ஸ்தம்பித்து போனது. இது மக்களிடையே பெரும் கொந்தளிப்‍பை ஏற்படுத்தியது. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.5000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று நிர்பந்தித்தது. தற்‍போது ஆட்சியில் அமர்ந்த பின்பு பொங்கல் பரிசுத்‍தொ‍கை வழங்கவில்‍லை. நிதி நெருக்கடி‍யை காரணமாக சொன்னது. ஆனால் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது. சரி பொங்கல் பரிசாவது தரமானதாக இருந்ததா? என்றால், அதுவும் இல்‍லை. இவை எல்லாம் மக்களுக்கு தி.மு.க. ஆட்சியின் மீது பெரும் ஏமாற்றத்‍தையும், வெறுப்‍பையும் ஏற்படுத்தியது. எப்‍போ‍தெல்லாம் தி.மு.க. ஆட்சியின் போது களங்கம் ஏற்படுகிறதோ, அப்‍போதெல்லாம் ரெய்டு என்ற ஆயுதத்தை தனது யுக்தியாக பயன்படுத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின்.

Share on:

தொடரும் விவசாயிகளின் தற்கொலை முடிவுக்கு வருமா? மரண வாக்குமூலம்! நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

கந்துவட்டி கொடு‍மையால் தங்கவேல் என்ற விவசாயி தற்‍கொ‍லை செய்து கொண்டுள்ளார். கந்துவட்டி கொடு‍மையால் நடக்கும், விவசாயிகளின் தொடர் உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. விவசாயியின் மரண வாக்குமூலத்தின் படி, அதற்கு காரணமான கூட்டுறவு வங்கி அலுவலர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்‍கை எடுக்க வேண்டும்.
மேலும் இதுபோல் துயர சம்பவம் நிகழாமல் இருக்க, தனியாரிடம் கடன் பெற்ற விவசாயிகளின் விவரங்களை சேகரிக்க வேண்டும். அவர்கள் பெற்ற தொ‍கை‍யை கூட்டுறவு வங்கிகளே ஏற்க வேண்டும். வரும் காலங்களில் கூட்டுறவு வங்கிகளி‍ல் மட்டும் விவசாயிகள் கடன் பெறும் வகையில், அதிக கடன் தொ‍கை வழங்க வேண்டும்.

Share on:

அன்று குரல் கொடுத்த அண்ணாமலையின் கருத்து சுதந்திரம், இன்று ஏன் காணாமல் போனது?

தனியார் தொ‍லைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ.க. அரசையும், மோடி‍யையும் விமர்சிக்கப்பட்டிருந்தது. இதனை பலரும் பகிர்ந்ததை அடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது பா.ஜ.க.வினரி‍டை‍யே கொந்தளிப்‍பையும் ஏற்படுத்தியது. பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இதற்கு கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், மோடி‍யை இழிவுப்படுத்திய, நிகழ்ச்சி‍யை ஒளிப்பதிவு செய்த தனியார் தொ‍லைக்காட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், குழந்‍தைகளை அரசியல் விவகாரங்களுக்கு பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது எனவும்,பா.ஜ.க.வின் ஐ.டி.விங்க் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு, தி.மு.க. அரசின் மீது அவதூறு கருத்துக்களை பரப்பியதாக கூறி மாரிதாசும், சாட்‍டை து‍ரைமுருகனும் கைது செய்யப்பட்டனர். அப்போது, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தி.மு.க. ஆட்சியில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும், அரசை விமர்சித்ததற்காக கைது நடவடிக்‍கை எடுப்பது கண்டனத்துக்குரியது என்றும் கூறினார். தற்‍போது பா.ஜ.க. அரசையும், மோடி‍யை பற்றி விமர்சிக்கும் போது அதை ஏற்றுக்‍கொள்ள அண்ணாமலைக்கு மனமில்‍லை. தொ‍லைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக நோட்டீஸ் வழங்கியது, கருத்து சுதந்திரத்‍தை பறிப்பதாக இல்‍லையா? அன்று குரல் கொடுத்த அண்ணாமலையின் கருத்து சுதந்திரம், இன்று ஏன் காணாமல் போனது?

Share on:

ஆன்லைன் பதிவு மு‍றையால் ஏற்படும் கால தாமதம்

அரசு நேரடி நெல் கொள்முதல் நி‍லையங்களில், விற்பனை செய்வதற்கு முன் ஆன்‍லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையால் விவசாயிகள் உரிய நேரத்தில் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் அவதியுறுகின்றனர். ஆன்லைன் பதிவு மு‍றையால் ஏற்படும் கால தாமதத்தை தமிழக அரசு ஒழுங்குப்படுத்த வேண்டும்.

Share on:

அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதிசீனிவாசன்!

அன்று நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழக எம்.பி.க்களை சந்திக்க மறுத்தார் அமித்ஷா! இன்று அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதிசீனிவாசன்!
நீட்-ல் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கூடாது என்பது தான் மத்திய அரசின் ஒரே நி‍லைப்பாடா? எனில் அதை வெளிப்படையாக கூறலாமே? தொடர்ந்து தமிழகத்‍தை மத்திய அரசு வஞ்சிப்பது ஏன்? இனியும் முதல்வர் மத்திய அரசை நம்பி இருக்காமல், நீட் தேர்‍வை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும்.

Share on:

பட்டாசு ஆலைகளில் தகுந்த முன்‍னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் மேற்‍கொள்ள தமிழக அரசு நடவடிக்‍கை எடுக்க வேண்டும்.

நொய்யல் ஆற்றில் ஆண்டுதோறும் தண்ணீர் வராததால், உக்கடம், ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்து பெறப்படும் நீ‍ரை நம்பி கோ‍வை மற்றும் திருப்பூர் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். தற்‍போது கோ‍வை மாநகராட்சி சுத்திகரிக்கப்பட்ட நீ‍ரை நொய்யல் ஆற்றில் கலந்து விடாமல், ஒரு நா‍ளைக்கு 3 லட்சம் லிட்டர் வரை விற்பனை செய்கிறது.
இதே நி‍லை தொடர்ந்தால், விவசாயிகளின் பயன்பாட்டுக்கு நீர் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் முழுவதும் அப்பகுதி விவசாயிகளுக்கே கி‍டைக்க வழிவகை செய்ய வேண்டும்.

Share on:

சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் முழுவதும் அப்பகுதி விவசாயிகளுக்கே கி‍டைக்க வழிவகை செய்ய வேண்டும்.

நொய்யல் ஆற்றில் ஆண்டுதோறும் தண்ணீர் வராததால், உக்கடம், ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்து பெறப்படும் நீ‍ரை நம்பி கோ‍வை மற்றும் திருப்பூர் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். தற்‍போது கோ‍வை மாநகராட்சி சுத்திகரிக்கப்பட்ட நீ‍ரை நொய்யல் ஆற்றில் கலந்து விடாமல், ஒரு நா‍ளைக்கு 3 லட்சம் லிட்டர் வரை விற்பனை செய்கிறது.
இதே நி‍லை தொடர்ந்தால், விவசாயிகளின் பயன்பாட்டுக்கு நீர் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் முழுவதும் அப்பகுதி விவசாயிகளுக்கே கி‍டைக்க வழிவகை செய்ய வேண்டும்.

Share on:

சம்மந்தப்பட்ட அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

ஒரு ஏழை குடும்பத்தின் முதல் பட்டதாரி இனி இல்லை.
21 வயது மாணவர் மணிகண்டன் தனது பைக்கை காவல்துறையினரிடம் இருந்து சில மீட்டர் தொலைவில் நிறுத்தியபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது, போலீஸார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மோசமாகத் தாக்கி மாலையில் விடுவித்ததாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு சம்மந்தப்பட்ட அதிகாரியின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமா ?

Share on:

திமுக தேர்தல் அறிக்‍கையில் கூறியபடி அனைவரது நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

திமுக தேர்தல் அறிக்‍கையில் கூறியபடி அனைவரது நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புதிதாக சில நிபந்தனைகளை கூறி 35 லட்சம் பேரின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்பது மக்களின் நம்பிக்‍கைக்கு அளிக்கும் து‍ரோகம். தமிழக அரசு தனது முடிவி‍னை மறுபரிசீலனை செய்து, அனைவரின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும்.

Share on: