ஈரோடு இடைத்தேர்தல் அதிமுகவில் கே. எஸ். தென்னரசு வேட்பாளர்!!செந்தில் முருகனை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்!

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஒபிஎஸ் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில்,இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கேள்வி எழுந்தது.இதுகுறித்து,எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.மனுவை விசாரித்த
உச்சநீதிமன்றம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.அதில், இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கான வாய்ப்பு இல்லை. ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் இணைந்து பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என அறிவித்தது.உச்சநீதிமன்ற ஆணைப்படி ,அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்புக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.ஆனால், கடிதத்தை பெற்ற ஓபிஎஸ் தரப்பினர், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் கொடுக்கப்பட்டு,அவர்கள் மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், தமிழ்மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார் யார் வேட்பாளர்கள் என தெரிவிக்காமல், தென்னரசு பெயரை மட்டும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளனர்.ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில், இன்று வேட்பாளரை தேர்வு செய்தாக வேண்டும்.ஓபிஎஸ் இபிஎஸ் இரு தரப்பில் யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்தால் தான் இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட முடியும்.

இந்த தொகுப்பினை வீடியோவடிவில் காண
https://youtu.be/2joGRwAkQ6Y

Share on: