கச்சத்தீவு திமுக மற்றும் காங்கிரஸால் கட்சிகளால் இலங்கைக்கு வழங்கப்பட்டது
அதைத் திரும்பப் பெற அதிமுக எப்போதும் முயல்கிறது. இலங்கைக்கு 7500கோடி கடன் வழங்கும்போது பாஜக அரசு தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவில் மீன்பிடி உரிமையைத் திரும்பப் பெற திரு.மோடி அவர்கள் வலியுறுத்தவில்லை ஏன்?
இலங்கை அரசால் துன்புறுத்தப்படும் மீனவர்களின் எண்ணிக்கை மற்றும் சேதப்படுத்தப்படும் படகுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இலங்கைக்கு நிதியுதவி அளித்த சீனா, இலங்கையில் உள்ள துறைமுகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ஆனால் மீனவர் உரிமையை இந்தியா ஏன் திரும்பப் பெறவில்லை?
அதிமுகவும், எம்.ஜி.ஆரும் எப்பொழுதும் இலங்கைத் தமிழர்களை மற்றும் தமிழக மீனவர்கள் உரிமைகளைப் பாதுகாக்க முயல்கின்றனர். தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவில் மீன்பிடி உரிமையைத் திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
தமிழ்நாடு அரசு பட்ஜெட்2022
நிச்சயமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40ம் வெற்றியடைகிற வகையில்
இந்த இயக்கம் பலநூறு ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்பதற்கு , ஒன்றுபட்ட அ.தி.மு.க. மற்றும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை மற்றும் லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் அப்பாற்பட்டவர்களால் இவ்வியக்கத்தின் தலைமை ஏற்கப்படவேண்டும், சாதி மத இல்லாத வகையில் எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்ததைப் போல மக்கள் விரும்பும் ஆ.தி.மு.க. அமையவேண்டும் . புரட்சித் தலைவர் காலத்தில் தி.மு.க. எவ்வளவு தான் செலவு செய்தலும் எந்தத் தேர்தலிலும் மக்கள் அ.தி.மு.க.வை புறக்கணித்தது இல்லை .
நிச்சயமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40ம் வெற்றியடைகிற வகையில் மீண்டும் 2026’ல் ஆட்சியமைக்கின்ற வகையில் அ.தி.மு.க.வளர்ச்சியடையும் அந்த உத்வேகம் தொண்டர்களிடத்திலும் உள்ளது ஆயினும் அ.தி.மு.க பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் தான் இக்கருத்தைப் பதிவிடுகிறேன்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
எம்.ஜி.ஆர் ஆட்சி அமையும்! அண்ணாமலைக்கு எச்சரிக்கை!
2022-23 நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை வரும்18ஆம் தேதி தாக்கல்
2021 சட்டப்பேரவை தேர்தலில், திமுக தேர்தல் வாக்குறுதிகளாக குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் உரிமை தொகை, மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, விவசாயம் மற்றும் கல்விக்கடன் ரத்து, சமையல் எரிவாய்வுக்கு மானியம் போன்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்த திமுக ஆட்சி பொறுப்பேற்று ஏறத்தாழ ஒரு வருடம் நெருங்கும் இவ்வேளையில். திமுக அளித்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றபடும் என்று மக்கள் எதிர்பார்ப்போடு காத்துகொண்டு இருக்கின்றனர்.
நடப்பு நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை வரும் 18 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதிகளாக தமிழக அரசாங்கம் அளித்த பல்வேறு திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கபடுமா?? அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களின் பயன்பாட்டிற்காக நடைமுறைப்படுத்த படுமா ??
மக்களின் இந்த எதிர்பார்க்குகளை 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் மூலமாக தமிழக அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
திமுக’வை கடுமையாக எதிர்த்து பா.ஜ.க. உடனான கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்
ஆதிமுக’விற்கு எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட வாக்கு வங்கி 25% அதை எந்தக்காலத்திலும் அசைக்க முடியாது, ஆகையால் ஆதிமுக தலைமை எவ்வாறு அமையவேண்டும் என்றால் பாஜக’வை கடுமையாக எதிர்த்து நின்று திமுக’விற்கு போகின்ற எதிர்ப்பு ஓட்டுகள் 12சதவீதம் ஆதிமுக’விற்கு திரும்பப் பெற வேண்டும், மேலும் திமுக’வை கடுமையாக எதிர்த்து பா.ஜ.க. உடனான கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தி , பாஜக விற்கு செல்கின்ற திமுக எதிர்ப்பு ஒட்டு 2%யும் ஆதிமுக’விற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்கையில் நமக்கு 40% ஒட்டு என்பது உறுதியாகிவிடுகிறது.
எனவே ஆதிமுக’வின் தலைமை என்பது பாஜக’விற்கு எதிரான நிலைப்பாட்டில் திராவிட கொள்கைகளிலும், திராவிட சித்தாந்தங்களிலும், எம்ஜிஆர் வழியிலும் அம்மாவின் வழியிலும் பயணிக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
பெண்களின் சிறப்பை உணர்த்தும் தினம்
நீட் தேர்வு தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புக்கான கனவுகளைக் கொண்ட பல மாணவர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைத்துள்ளது!
அதிகக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தங்களது மருத்துவக் கனவை நனவாக்கிட உக்ரைன் போன்று பிற நாடுகளுக்குச் சென்று படித்துவரும் மாணவர்கள் உக்ரைனிலிருந்து வெளியேற முடியாமலும்-தங்களது மருத்துவக் கனவு
என்ன ஆகுமோ என்ற கவலையிலும், இன்னல்களைச் சந்தித்து வரும்
மாணவர்கள் குறித்து மத்திய அரசு தெரிவித்து வரும் கருத்துகள் ஏற்புடையது அல்ல.
மத்தியில் ஆளும் பாஜக அரசு அமல்படுத்திய நீட் தகுதித் தேர்வு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவுகளைச் சிதைக்கும் நோக்கில் உள்ளது.
நீட் தேர்வு தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புக்கான கனவுகளைக் கொண்ட பல மாணவர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைத்துள்ளது. இந்த நீட் தேர்வின் காரணமாகப் பல மாணவர்கள் உக்ரைன், சீனா போன்ற பிற நாடுகளுக்கு மருத்துவம் பயிலச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது மற்றும் சில மாணவ கண்மணிகள் தங்களது மருத்துவ கனவு நினைவாகாத காரணத்தால் உயிரை மாய்த்தும் கொண்டுள்ளனர்.
பணம் & செல்வ பலம் பொருந்தியவர்கள் மட்டுமே மருத்துவ பயில இயலும் என்று நிலை தற்போது இந்தியாவின் அணைத்து மாநிலங்களிலும் நிலவி வருகிறது. எனவே இந்த நீட் தேர்வை நடைமுறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கைவிட்டு உயர்கல்வி மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்குச் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
அ.தி.மு.க அடிப்படை கொள்கை தி.மு.க.வுக்கு நேர்மறையானது… ஆனால் ?
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அ.தி.மு.க., என்ற கட்சியை துவக்கியபோது, அதன் அடிப்படை கொள்கை தி.மு.க.வுக்கு நேர்மறையானது. அக்கட்சியின் தற்போதைய தலைமை ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) ஆகியோர் கூட்டணியை & விதிமுறையை பின்பற்றுவதில்லை என்று தெரிகிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரை திமுக கூட்டணிக் கட்சிகளை ஒற்றுமையாக வைத்திருக்கும் அதே வேளையில், அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதன் முக்கிய கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான பாஜகவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டது அதில் அதிமுகவுக்கு எந்தப் பலனையும் தரவில்லை, அதேசமயம் பாஜக தனித்து நின்று ஆதாயம் அடைந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், அதிமுக வெறும் 25.15 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. சுயேச்சையாகப் போட்டியிடத் தேர்ந்தெடுத்த அதன் மற்ற கூட்டணிக் கட்சிகள் ஒற்றை இலக்கத்தில் வாக்குப் பங்கைப் பெற்றன – பாஜக 5.41 சதவீதம், பாமக 1.51 சதவீதம் மற்றும் தேமுதிக 0.77 சதவீதம்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
அதிமுக வேட்பாளர்களுக்கே கட்சி நிதி சரிவரச் சென்று சேரவில்லையா?
அ.தி.மு.க. கட்சி தொண்டர்களோடு எனது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர்கள் கூறியது , பல இடங்களில் பணத்தைப் பெற்றுக்கொண்டு சீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது , பலபேருக்குக் கட்சியிலிருந்து எந்த விதமான நிதி உதவியும் வழங்கப்படவில்லை மற்றும் தவறான தேர்தல் வியூகங்கள், இவர்கள் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி இல்லை என்று அறிவித்த அன்று இருந்த உற்சாகம் அடுத்த 24மணி நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோம் என்ற அறிவிப்பால் மறைந்தது.
E.P.S மற்றும் O.P.S என்ன சத்திய பிரமாணம் செய்தாலும் மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் , இந்த இயக்கம் எம் .ஜி .ஆர் காலத்திலிருந்த முன்னோடிகளை முன்னிறுத்தப்பட்டு வழிநடத்தப்பட வேண்டும் . நகரச்செயலாளர் முதல் ஒன்றியச்செயலாளர், மாவட்டச்செயலாளர் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் தலைமை வரை தொண்டர்களிடத்தில் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் இவ்வாறு செயல்படும்பொழுது தான் வலிமையான அ.தி.மு.க.உருவாகும்.
இன்னும் சம்பிரதாய நடைமுறைகளை நாம் செய்து கொண்டிருப்பின் இரட்டை இலையைப் பார்த்து வாக்களிப்பவர்கள் என்றென்றும் நம்மை ஆதரிப்பார்கள்! கண்டிப்பாக இந்த இருவரது தலைமை அகற்றப்படும்!
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA