தமிழக முதல்வர் பிரதமருடனான சந்திப்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மீதான விலை உயர்வு & மானியம் குறித்து மேலும் இதன் வரியை ஜி.எஸ்.டிகுள் கொண்டுவருவது போன்று மக்களுக்குப் பலன் தரும் எந்த ஒரு முடிவுகளும் பிரதமருடனான சந்திப்பில் விவாதிக்கப்படவில்லை மேலும் மக்களின்மேல் சுமை சேர்க்கும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நிலையில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகப் பொருளாதாரங்களை இழந்த சாமானிய மக்கள் இன்னும் மீண்டும் வரவில்லை என்பது ஒருபுறம் மற்றொருபுறம் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. விலை உயர்வைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய மாநில அரசுகள்?
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
எம்.ஜி.ஆர் அவர்களின் கனவு இந்தியா அரசாங்கத்தை ஒருங்கிணைத்து நாம் வலியுறுத்துவோம்
இன்றைய சர்வேதேச சூழ்நிலைகளை பயன்படுத்தி இந்தியா இலங்கை தமிழர்களின் எதிர்காலத்திற்கு கடந்தகால போராட்டத்திற்கு ஒரு சுமுகமான தீர்வை பெற்று தரவேண்டும்.
இது புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் கனவு இந்தியா அரசாங்கத்தை ஒருங்கிணைத்து நாம் வலியுறுத்துவோம்
இலங்கைக்கு இந்திய தூதரகம் மூலமாக உணவு & மருந்துப்பொருட்கள் வழங்குவதற்கு திரு ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை வைத்தது நிரந்தரமான தீர்வல்ல.இலங்கையில் தமிழர்கள் தங்களுக்கும் சம அரசியல் உரிமை வேண்டுமென்று போராடினார்கள் அந்த உரிமையை இந்தியஅரசாங்கம் மூலமாக பெற்றுத்தருவதே நிரந்தர தீர்வாகும்.புலம்பெயர்ந்து அகதிகளாக பலநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கைத்தமிழர்களை ஒருங்கிணைத்து இலங்கையில் குடியமர்த்தி அரசு மற்றும் அரசியல் பாதுகாப்பு உறுதிப்படுத்தவேண்டும். இது இலங்கையையும் பொருளாதார சரிவிலிருந்து மீட்டெடுக்கும்.இலங்கைத்தமிழர்கள் பிரச்சனைகளுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது 2009இல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க அரசாங்க நடவடிக்கைகள் தான்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
மாணவர்களுக்கான மடிக்கணினி விநியோகம் முற்றிலும் நிறுத்திவைப்பு , சமையல் எரிவாயுவிற்கான மதிப்புக் கூட்டு வரி 54% மற்றும் மதுபான விலையேற்றம் போன்றவை அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் சேதப்படுத்துகிறது. இந்நிலைமை மாறாவிடில் இன்னும் 5ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் நிலைமை இலங்கையை போல் ஆகிவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை . நியாய விலைக் கடைகளில் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் மக்களுக்கான பொருட்களை சரியான நேரத்தில் விநியோகம் செய்யப்படாமல் மாதம் முழுவதும் அவர்களை அலைக்கழிப்பது இதுபோன்ற செயல்கள் தொடருமாயின் பிற்காலத்தில் நியாய விளைக் கடைகளே இல்லாத சூழ்நிலை உருவாகிவிடும்
எனவே மீண்டும் EPS, OPS’ஐ நம்பாமல் மாவட்டவாரியாக கூட்டம் போட்டு மேற்கண்ட அனைத்து இன்னல்களையும் ஆலோசித்து மக்களுக்கான உரிமைகளை மீண்டும் பெற்றுத்தர வேண்டும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
பாஜகவிற்கு எதிராக இரட்டை தலைமை எதிர்த்து பேசாததற்கு இதுதான் காரணமா ?
பா.ஜ.க.விற்கு எதிராகத் இரட்டை தலைமை எந்த கருத்தும் தெரிவிக்காததற்குக் காரணம். திரு.எடப்பாடி பழனிச்சாமிஅவர்களின் உறவினர்னரான ரேணுகாவின் கணவர் திரு.சந்திரகாந்த் ராமலிங்கம். அவர்கள் பணமதிப்பிழப்புக் காலத்தில் கர்நாடக சிறையில் 7 மாத காலங்களை கழித்தவர் இருப்பினும் திரு.எடப்பாடி அவர்கள் சில உண்மைகளைக் கூறாததற்கு சந்திரகாந்த் ராமலிங்கம் மட்டுமல்லாமல் திரு.மிதுன் அவர்களும் கைதாகும் நிலை ஏற்படும் என்பதால் தான்.
இதையே போல், ஒரு காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னார் குடி மாப்பியாவின் தற்போதைய கவலைக்கிடமான நிலை, சசிகலா முதல்முறை பரோலில் வெளிவந்தபோது அவர்களது கணவரைச் சந்திக்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் பணத்தைக் கணக்கு பார்த்துக் கொண்டு இருந்தது மிகவும் வருத்தத்திற்குரிய செயல் . அச்சமயம் பணமதிப்பிழப்புக் காலம் என்பதால் ஜெயலலிதா அம்மா அவர்கள் மருத்துவமனையிலிருந்தபொழுது போயஸ் கார்டெனில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200கோடி பணத்தை மாற்றித் தருபவர்களுக்கு 5% கமிசன் என்று மாற்றித் தான் பெரம்பலூரில் ஷாப்பிங் மால் மற்றும் பாண்டிச்சேரியில் பண்ணை வீடு போன்றவற்றை வாங்கினர்.
இன்று வருமான வரித்துறையின் மதிப்பீடு 1600கோடி இதில் 5கோடி கூட நேர்மையாகச் சம்பாதித்த பணம் இல்லை என்பதால் தான் அவர்களது மருமகனை மேலும் 8மாதங்கள் சிறையில் வைக்க நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
திமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றினால் மட்டுமே எதிர்காலம் போற்றும்! “செய்வார்களா”?
தி.மு.க.வின் வாக்குறுதியான மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 என்பது 2கோடி மகளிருக்கு 5ஆண்டிற்கு சுமார் 1லட்சம் கோடி ஆயினும் பெரியார் புத்தகம் ,தமிழ் சீர்திருத்தம் போன்றவற்றிற்கு 2 முதல் 10 கோடி வரை ஒரு முறை மட்டுமே அறிவித்தால் போதுமானது எனவே அண்ணா அவர்களின் காலத்தில் அரசின் திட்டம் வகுத்தபோதும் புரட்சித் தலைவரின் சத்துணவுத் திட்டம் அறிவித்த பொழுதும் நிதிப் பற்றாக்குறை இருந்தது எனினும் அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
திரு.ஸ்டாலின் அவர்கள் புகழ்பெற்ற திட்டத்தை இன்று அறிவித்ததை அடுத்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தும் நிலையில் ஒரு புகழப்பெற்ற முதலமைச்சராக எதிர்காலத்தில் போற்றப்படுவார் இத்துடன் தாலிக்குத்தங்கம் திட்டத்தையும் 9,10,11,12ஆம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா? இதில் தோல்வி ஏற்பட்டால் மீண்டு வருவது கடினம்.EPS மற்றும் OPS இல் யார் சிறந்தவர்கள் என்பதனை தவிர்த்து மேலும் காலத்தில் திமுகவை எதிர்க்க EPS மற்றும் OPS அவர்களை ஒதுக்கிவிட்டு என்போன்றவர்கள் தயாராக உள்ளோம் .
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
அன்றைக்கு OPSன் பதவி பறிப்பு “தர்ம யுத்தம்” V/s இன்றைக்கு பாசப்பிணைப்பு “NO யுத்தம்”
திரு.ஓ.பி.எஸ் அவர்கள் முதல்வராகப் பதவி ஏற்ற அன்று என்றும் முதலமைச்சராகவும்! சசிகலா என்றும் பொதுச்செயலாளராகவும் இருப்பார் என்று உறுதியாக இருந்த காரணத்தினால் சசிகலா அவர்களுக்கு ஒத்துப்போய் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. ஆனால் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவர் கூறிய கருத்தும் இன்று பாசப்பிணைப்புடன் கூறும் கருத்தும் முரண்பாட்டுடன் உள்ளது .
எனவே ஆணையம் என்ற ஒன்றை அமைத்து அதற்கான செலவுகள் என்று ஒரு பட்டியலிட்டு சற்றும் சம்பந்தம் இல்லாத கருத்துகளைப் பதிவிடுவது மக்களை ஏமாற்றும் செயல் இது வண்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
அம்மா மரணத்தில் உள்ள அனைத்து மர்மங்களும் விலகும் .
திருப்பரங்குன்றம் மறுதேர்தலுக்காக அம்மா வைத்த கைநாட்டில் உயிர் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியநிலையிலும் அம்மாவின் மரணம் இயற்கையானது என்பது ஏற்புடையதாக இல்லை. ஒரு ஆணையத்தைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு உள்ளது எனவே உச்சநீதிமன்ற ஆணையை ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஒப்படைக்க வேண்டும் அவ்வாறு ஒப்படைக்கையில் இந்த ஆணையத்தின் விசாரணை திசை மாறும் அவ்வாறு மறுகையில் அம்மா மரணத்தில் உள்ள அனைத்து மர்மங்களும் விலகும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
தமிழக அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் கொடுக்கத் தவறிவிட்டார்களா?
மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து முன்னாள் அமைச்சர்கள் கைது அவர்களது வீட்டில் ரெய்டு அதற்கான போராட்டம் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை , ஆவின் விலை உயர்வைச் சற்றும் கருத்தில் கொள்ளாமல் திரு .ஜெயக்குமார் அவர்களின் கைதிற்குப் போராடுவது வருத்தமளிக்கிறது எனவே இவர்கள் இத்தகைய செயலை தவிர்த்து மக்கள் பிரச்சனைகளில் கவனத்தைச் செலுத்தி அதற்கான பணிகளில் ஈடுபடும்பொழுது அ.தி.மு.க. மேலும் வளர்ச்சிப்பாதையில் செல்லும் .
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் நிலை எதுவாயினும் திரு.அண்ணாமலை அவர்களின் ஆவின் விலை ஏற்றம் ,டாஸ்மாக் விலை ஏற்றம் மற்றும் மின் கட்டண உயர்வு பற்றிய அறிக்கைகள் தி.மு.க.விற்கு எதிராகவும் ஈர்ப்புடையதாகவும் இருக்கின்றது . ஆனால் அ.தி.மு.க.நிர்வாகிகளின் குளிர்பான விநியோகம் போன்ற செய்திகள் கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக அமைகின்றது. பொதுமக்கள் பிரச்சனையில் ஈடுபடாமல் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை எனில் அக்கட்சி மறைந்து விடும் என்பதற்குக் காங்கிரஸ் ஒரு முன்னுதாரணம்.
எனவே தி.மு.க.விற்கு மாற்று பா.ஜ.க.தான் என்ற நிலைப்பாட்டில் திரு.அண்ணாமலை செயல்படுகின்ற நிலையில் தி.மு.க.விற்கு மாற்று அ.தி.மு.க. தான் என்று மக்கள் இருக்கையில் அதற்குரிய செயல்பாடுகளில் கட்சித் தலைமை பின்னடைவது மிகவும் வருத்தமளிக்கிறது
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவில் மீன்பிடி உரிமையைத் திரும்பப் பெற திரு.மோடி அவர்கள் வலியுறுத்தவில்லை ஏன்?
கச்சத்தீவு திமுக மற்றும் காங்கிரஸால் கட்சிகளால் இலங்கைக்கு வழங்கப்பட்டது
அதைத் திரும்பப் பெற அதிமுக எப்போதும் முயல்கிறது. இலங்கைக்கு 7500கோடி கடன் வழங்கும்போது பாஜக அரசு தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவில் மீன்பிடி உரிமையைத் திரும்பப் பெற திரு.மோடி அவர்கள் வலியுறுத்தவில்லை ஏன்?
இலங்கை அரசால் துன்புறுத்தப்படும் மீனவர்களின் எண்ணிக்கை மற்றும் சேதப்படுத்தப்படும் படகுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இலங்கைக்கு நிதியுதவி அளித்த சீனா, இலங்கையில் உள்ள துறைமுகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ஆனால் மீனவர் உரிமையை இந்தியா ஏன் திரும்பப் பெறவில்லை?
அதிமுகவும், எம்.ஜி.ஆரும் எப்பொழுதும் இலங்கைத் தமிழர்களை மற்றும் தமிழக மீனவர்கள் உரிமைகளைப் பாதுகாக்க முயல்கின்றனர். தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவில் மீன்பிடி உரிமையைத் திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA