அதிமுகவை கைப்பற்றினால் மட்டும் போதும் என்று நினைக்கிறாரா எடப்பாடி?



1996 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது.வெறும் 4 எம்.எல்.ஏகள் மட்டும் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை இருப்பினும் திமுக அரசுக்கு எதிராக மிக வலுவான எதிர்க்கட்சி அரசியலை செய்து கொண்டுவந்தார் ஜெயலலிதா. ஆனால் தற்பொழுது 62 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் பதவி பெறுவதில் மட்டுமே ஆர்வம் கட்டிய எடப்பாடி,தன்மீதும் தன் சகாக்கள் மீதும் வழக்குகளுக்கு பயந்துகொண்டு சரியான எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை.அதனால் தமிழக அரசியல் களம் திமுக VS பாஜக என்று அமைகிறது.அதிமுக அதன் தனித்தன்மையை இழக்கிறது .அதிமுக தொண்டர்கள் விழிப்படைய வேண்டிய நேரம் இது.

திமுகவின் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக அமைச்சரவை மாறி உள்ளது. கர்நாடகா தேர்தலின் முடிவுகள் தென்னிந்திய அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையில் உள்ளது.இதை எல்லாம் விட்டுவிட்டு 3 நாட்களுக்கு முன்பு நடந்த ஓ பி எஸ், தினகரன் சந்திப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் @EPSTamilNadu. இவர் மீண்டும் ஆட்சி அமைக்க நினைக்கிறாரா? அல்லது அதிமுகவை கைப்பற்றினால் மட்டும் போதும் என்று நினைக்கிறாரா?
Share on: