ஆவடியில் தடம்புரண்ட மின்சார ரயில்!


சென்னை ஆவடி அருகே மின்சார ரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து காரணமாக சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது.

கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்டரல்-அரக்கோணம் வழத்தடத்தில் உள்ள ஆவடியில் மின்சார ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது.

அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடிக்கு சென்ற மின்சார ரயிலின் 4 பெட்கள் தடம்புரண்டுள்ளன. இந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்தை நோக்கி செல்ல இருந்தது. இப்படி இருக்கையில் ரயில் விபத்தில் சிக்கியதால், தடம்புரண்ட பெட்டிகளை மீட்க ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

இது தொடர்பான முதல்கட்ட விசாரணையில் சிக்னல் கோளாறுதான் விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல விபத்தில் சிக்கிய ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட பெட்டிகளை மீண்டும் சரி செய்ய சில மணி நேரங்கள் கூட ஆகலாம் என்று சொல்லபடுகிறது.
Share on: