திமுக MP வீட்டிற்கு வந்த புதிய வருமான வரித் துறை டீம்!


திமுக எம்பி ஜெகதன்ரட்சகன் வீட்டில் சோதனை நடத்த புதிதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் வந்த போது அவர் சிரித்தபடியே அவர்களை வரவேற்றார்.

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை இன்று இரண்டாவது நாளாக நடத்தப்பட்டு வருகிறது. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லூரிகள், நட்சத்திர விடுதிகள், மருத்துவமனைகளில் ஆயுதப்படை பாதுகாப்புடன் நேற்று காலை 6 மணி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திநகரில் உள்ள நட்சத்திர விடுதி, தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. அது போல் படப்பையில் உள்ள கல்லூரி பணியாளர் ஒருவரி வீட்டு பூட்டை உடைத்து சோதனை நடத்தப்பட்டது.

மேலும் அவருடைய வீட்டில் புதிதாக பூசப்பட்ட சுவற்றில் ஏதேனும் அறை இருக்கிறதா என தட்டி பார்த்தனர். மேலும் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சொகுசு கார்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் வீட்டில் இருந்து 1.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தண்டலம் சவீதா கல்விக் குழுமத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ 10 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெகத்ரட்சகன் வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் நாளையும் இந்த சோதனை தொடரும் என சொல்லப்படுகிறது.
Share on: