பல்வீர் சிங்கிற்கு நெருக்கடி.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு


பல்பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை தொடங்க சிபிசிஐடி போலீஸாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது
இந்த வழக்கு உயர்மட்ட விசாரணை குழுவின் பரிந்துரையின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
மேலும் அந்த காட்சிகளை வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பற்களை பிடுங்கிய போது சிசிடிவி செயல்படவில்லை. ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் உத்தரவின் பேரில் சிசிடிவி கேமரா அணைத்து வைக்கப்பட்டது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் இருந்தனர். இதனிடையே பல்வீர் சிங்ஸ ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) சிபிசிஐடி போலீஸார் கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் பல்வீர் சிங் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை தொடங்க சிபிசிஐடி போலீஸாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
Share on: