
தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வாங்கிக்கொண்டு பைக்கில் சென்ற இளைஞரை வழிமறித்து பீர் பாட்டில் கொண்ட தலையில் கொலைவெறியுடன் ஆதிக்க சாதியினர் தாக்கிய சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கைவயல் தொடங்கி தொடர்ந்து சாதி வெறி கொடூரங்கள், தீண்டாமை குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் கறம்பக்குடி அருகே தீபாவளி பண்டிகை அன்று கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. கறம்பக்குடி அடுத்த மோலுடையான்பட்டியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் பட்டாசு வாங்கிச் சென்றபோது சாதி வெறியர்கள் அவரை வழிமறித்து பாட்டிலால் மண்டையை உடைத்து இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் அதிர்ச்சித் தகவலை தெரிவித்து உள்ளது.
கீழ்தொண்டைமான் கிராமத்தில் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த சாரதி மற்றும் அவர்களின் கூட்டாளிகள் சேர்ந்து வழிமறித்து இளைஞர் பிரகாஷை சாதிய தீண்டாமை வார்த்தையில் கொச்சையாக பேசி பீர் பாட்டிலில் 15 முறை தலையில் கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்
சாதி மன நோய் பிடித்த குற்றவாளிகளை SC / ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து உரிய நீதி வழங்கிட வேண்டும். தென் மாவட்டங்களில் தொடரும் பட்டியல் மக்களுக்கு எதிரான சாதிய தீண்டாமை வன்முறையை தடுக்க தமிழக அரசு, முதலமைச்சர் முக ஸ்டாலின், சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டு உள்ளது.