அண்ணா திமுக பிளவுபடுமோ என்கிற அச்சம் அனைத்து அண்ணாதிமுக தொண்டர்களிடத்தில் உள்ளது !!

அண்ணா திமுக பிளவுபடுமோ என்கிற அச்சம் அனைத்து அண்ணாதிமுக தொண்டர்களிடத்தில் உள்ளது .ஆனால் அதே சமயத்தில் ஒற்றை தலைமை தேவை ,அது தொண்டர்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படவேண்டும், பொதுக்குழுவால்  தேர்நதெடுக்கப்படக்கூடாது , என்கிற ஒரு ஆர்வம் அனைத்து அண்ணாதிமுக தொண்டர்களிடத்தில் உள்ளது .நீதிமன்ற போராட்டத்தால்  உருவாக்க முடியுமா ?அல்லது தொண்டர்களே உருவாக்க முடியுமா ?நீதிமன்ற போராட்டத்தில் ஒரு கால தாமதம் ஏற்படும் .ஒவ்வொரு நீதிபதியும் ஒவ்வொரு விதமான கருத்துகளை முன்வைத்து நடத்துகின்றனர் .அதனால் பொதுக்குழுவால்  தேர்ந்தெடுக்கப்படும் தலைமை கால தாமதம் ஏற்படுகிறது .தொண்டர்களில்  சிலர் சசிகலா வரவேண்டும் என்றும் ,ஒரு சிலர் ஓ பி எஸ் வர வேண்டும் என்றும் ,மற்றவர்கள் இ பி எஸ் வரவேண்டும் என்றும் நினைத்து கொண்டுஇருக்கின்றனர் .ஆனால் திடீரென்று ஒரு குழு சாரார் சேர்ந்து சி.வி.ஷண்முகம் பெயரை எடுத்துரைக்கின்றனர் .எனவே இவையனைத்திற்கும் தீர்வு  என்பது ஒட்டுமொத்த அண்ணா திமுக தொண்டர்களும் ஒன்றிணைந்து ,ஒரு கோடி தொண்டர்களை இணைத்து ,நாங்கள் இந்த இயக்கத்திற்கான தலைமையை அடையாளம் செய்கின்றோம் என்று தேர்தல் தொண்டர்கள் மூலமாக நடத்தப்படுகிறபொழுது ,அதில் யாரை தேர்வு செய்கிறார்களோ ,அதில் மட்டும்தான் அந்த ஒற்றை தலைமை உருவாகும் .இதை தவிர்த்து பார்த்தால் பி ஜே பி ன் பின்புலம் யாருள்ளார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் .புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அவர்கள் நம்பியதெல்லாம் அண்ணா திமுகவின் அடிப்படை தொண்டர்களை மட்டும் தான் .ஏனென்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் என்பவர்கள் விலைபோகிவிடுவார்கள் அல்லது ஆட்சி அதிகாரத்திற்கு பணிந்து விடுவார்கள் .நம்முடைய இலக்கு என்பது சாதிற்கும்,மதத்திற்கும் அப்பாற்பட்ட பகுதிவாரியாக இல்லாமல் ஒரு கொள்கை ரீதியாக அனைத்து தொண்டர்களை ஒன்றிணைத்து ஒரு தலைமையை உருவாக்குவோம் .

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவருமே ஒடுக்கப்பட்டவர்கள் ஆகிவிட்டார்கள் !!

இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவருமே ஒடுக்கப்பட்டவர்கள் ஆகிவிட்டார்கள் .ஏனென்றால் இன்றைக்கு சின்னம் முடங்கக்கூடிய இடத்துக்கு சென்றதுக்கு இவர்கள் இருவரும் தான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இவர்கள் இருவரையும் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து  ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் இவர்களை நீக்குவதற்கான வேலையை செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் விருப்பமாக பார்க்கப்படுகிறது .எடப்பாடி பழனிசாமி ,கே பி முன்னுசாமி ,தங்கமணி ,வேலுமணி ,சி.வி .ஷண்முகம் ,ஜெயக்குமார் ,ஓ .பன்னீர்செல்வம் ,வைத்தியலிங்கம்,மனோஜ்பாண்டியன் ,பிரபாகரன் ,இன்னும் சில நபர்களை தேர்வு செய்து கட்சியை விட்டு ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு ,மீதம் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தலைமையை அடையாளப்படுத்தினால் இந்த அதிமுக கட்சி இன்னும் 1000 வருடத்திற்கு வலிமையான கட்சியாக இருக்கும் .புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் வழியில் அதனை அதிமுக தொண்டர்களும்  ஒருங்கிணைந்து ஒரு தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டால் இவர்கள் இருவரும் தானாகவே அமைதியாகிவிடுவார்கள் .இல்லையென்றால் பி ஜே பி உடன் அடிமைப்படுத்துவார்கள் ,திமுக உடன் ஒரு ரகசிய உடன்பாடு செய்து கொள்வார்கள்  .காங்கிரஸ் கட்சி இன்றைக்கு 10 சீட்டுக்கும்  5 சீட்டுக்கும் கையேந்துகிற நிலையில் உள்ளது .இந்த நிலையில் பி ஜே பி உடன் ஒரு கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்டு அதில் கூட்டணியில் அதிமுக கையேந்துகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள் .அதனால் தொண்டர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு இந்த இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் .

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

சசிகலா தலைமையில் செயல்பட தயாராகிறாரா ஓ.பி.எஸ் என்பதை தொண்டர்களுக்கு விளக்கவேண்டும்

சட்டப்பூர்வமான  நடவடிக்கைகள் இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டு காலங்கள் எடுக்கும்.விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து விட முடியாது.எடப்பாடி அவர்கள் ஒரு பேட்டியில் பொதுக்குழுவை கூட்டிக்கொள்ளுங்கள்.நாங்கள் சட்ட ஆணையரை கொடுக்கின்றோம் என்று நீதியரசர் சொல்லியிருக்கிறார்,அதனால் பொதுக்குழு தான் வலிமையானது என்று கூறினார்.அது தவறு அதாவது தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி 6 மாதத்திற்கோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ இந்த கூட்டங்கள் நடக்க வேண்டும்.அதை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடை சொல்ல மாட்டார்கள்.அப்படி நடத்த வேண்டிய கட்டாயம் வந்தால் நீதிமன்றங்கள் அனுமதியளிக்குமே தவிர,பொதுக்குழுவிற்கு தான் உட்சபட்ச அதிகாரம்,நீங்கள் விதிகளை எல்லாம் திருத்தி மறுபடியும் 2000 நபர்கள் வைத்து நீங்களே பொதுச்செயலாளர் என்று அறிவித்துக்கொள்ளுங்கள் என்பதும் அர்த்தம் அல்ல அதையும் எடப்பாடி அவர்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்.பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவறாக முடிவு எடுத்து கொண்டு இருக்கிறார் திரு.எடப்பாடி. ஓபிஎஸ் அவர்கள் திருமதி சசிகலா மற்றும் தினகரன் இருவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்.ஆனால் ஒரு விளக்கம் மட்டும் திரு.ஓபிஎஸ் அவர்கள் தர வேண்டும், பொதுமக்களுக்கும் மற்றும் தொண்டர்களுக்கும்.சசிகலா அவர்கள் இன்றும் தன்னை பொதுச்செயலாளராக நினைத்துக்கொண்டு இருக்கிறார்.அப்பொழுது சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்று கொண்டு சேர வேண்டும் என்று கூறுகிறாரா அல்லது ஓபிஎஸ்ஐ தலைவராக ஏற்று கொண்டு சசிகலா அண்ணா திமுகவில் சேர வேண்டும் என்று கூறுகிறாரா தினகரன் அவர்கள் ஓபிஎஸ்ஐ நான் மன்னித்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் எனவே ஓபிஎஸ்ஐ தலைவராக ஏற்று கொண்டு தினகரன் அண்ணா திமுகவில் சேர வேண்டும் என்று கூறுகிறாரா அல்லது தினகரன்ஐ தலைவராக ஏற்றுகொண்டு
 ஓபிஎஸ் அவர்கள் அண்ணாதிமுகவில் சேர விரும்புகிறாரா,இதுதான் ஒவ்வொரு அண்ணாதிமுக தொண்டனுக்குள் எழுகின்ற கேள்வியாகும் .

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசாங்கத்தை எதிர்த்து நிற்கிற துணிச்சல் இல்லை

திரு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசாங்கத்தை எதிர்த்து நிற்கிற துணிச்சல் அவருக்கு இல்லை .ஏனென்றால் பழைய வழக்குகள் திரும்பவும் எடுக்கப்படுகிறது.ஆனால் மத்திய அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுத்தால்  அது நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் .மத்திய அரசாங்கம் ,மாநில அரசாங்கம் ,திமுக மற்றும் பிஜேபி இவை இரண்டும் மறைமுகமாக அண்ணாதிமுகவை அதில் இருக்கின்ற முன்னாள் அமைச்சர்களை ஒடுக்குவதற்கு அவர்களது பழைய கால நடவடிக்கைகளை கிளறி நடவடிக்கை எடுப்பதற்கு இணைந்து செயல்படுகின்றனர் .எதிர்கால தமிழக அரசியலை பி ஜே பி ஹிந்துத்துவ என்றும் ,திமுக திராவிடக்கழகம் என்கிற வகையில் அவர்கள் கட்டமைக்க நினைக்கிறார்கள் .இந்த நேரத்தில் அண்ணா திமுகவை சார்ந்தவர்கள் தங்களுக்குள் இருக்கக்கூடிய சில கருத்து மாறுபாடுகளை சிறிது விட்டுக்கொடுத்து ஒன்றிணைந்து போகவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் கூட.அப்படி ஒன்றிணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருக்கிறார்.ஆனால் எடப்பாடி பழனிசாமி பொறுத்தவரையில் தான் மட்டும்தான் என்று நினைத்து கொண்டுஇருக்கிறார் .தன்னை ஏற்றுக்கொள்பவர்களுக்கு தான் இந்த கட்சியில் இடம் என்கின்ற அளவில் இருக்கிறார் .

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

எடப்பாடியை ஓரம் கட்டிவிட்டு , ஓ.பன்னீர்செல்வம், டிடிவி,சசிகலாவை வைத்து காய் நகர்த்துகிறதா பாஜக?

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேனீர் விருந்தில்  எடப்பாடி கலந்துகொள்ளவில்லை ,ஆனால் 
ஓ பி எஸ்  தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டுஇருக்கிறார் .ஆளுநர் இடையே நல்ல நட்புறவுடன் இருந்த எடப்பாடி ஏன் அந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்று ஆச்சரியமாக பார்க்கப்பட்டது .ஏனென்றால் அதிமுக பொதுச்செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பி ஜே பி தன்னை கண்டுகொள்ளவில்லை என்று   
எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வருத்தம் இருக்கிறது .சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி அங்கு மோடியையும் அமிட்ஷாவையும் சந்தித்து பேச நேரம் கேட்டுஇருக்கிறார் .ஆனால் அதற்கு நேரம் கொடுக்காத காரணத்தினால் வருத்தத்துடனேயே நாடு திரும்பியிருக்கிறார் . அதற்கு காரணம்   ஓ.பன்னீர்செல்வம், டிடிவி,சசிகலா இவர்களை இணைத்து பி ஜே பி எடப்பாடிக்கு எதிராக வியூகம் வகுப்பதை அறிந்த எடப்பாடி சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறார் .தொடர்ச்சியாக ஓபி எஸ் க்கு பி ஜே பி துணை நிற்பதும் ,எடப்பாடியின் வழக்குகள்  சூடுபிடிக்க தொடங்கியதும் தான் காரணம் என்று பார்க்கப்படுகிறது .இதற்க்கு இடையில் எடப்பாடியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ,செய்தியாளர் சந்திப்பில் பி ஜே பி தினகரன் உடன் கூட்டணி வைத்தாலும் அதிமுக வின் தனித்தன்மையை யாராலும் எதுவும் பண்ண முடியாது என்று சொல்லியிருக்கிறார் .அதிமுக வின் முழு கட்டமைப்பு யாரிடம் இருந்தாலும் இரட்டை இலை  சின்னம் யாரிடம் உள்ளதோ அவர்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் ,இதுதான் அனைவரும்  எதிர்பார்ப்பும் கூட .இதனை பயன்படுத்தி ஒரு புதிய யுக்தியை பி ஜே பி கையாளப்போவதாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .இதனால் எடப்பாடியின் தரப்பு ஒரு தீர்க்கமான முடிவு செய்து காய் நகர்த்தப்போவதாக பேசப்படுகிறது .இதற்கு பின்  என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்துஇருந்துதான் பார்க்க வேண்டும் .

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

பதவி வெறி & அதிகார சண்டையினால் மட்டுமே அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை சிதைத்து கொண்டிருக்கிறார்கள்

          சமீபகாலமாக அதிமுக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துஇருக்கிறது .இதற்க்கு முக்கியமான காரணம் பதவி வெறி ,அதிகார சண்டை ,நீயா ? நானா ? என்கின்ற போட்டி ,இவைகள் தான் தற்பொழுது அதிமுக வில் நடந்து கொண்டுஇருக்கிறது .இதில் பாதிக்கப்படுகிறவர்கள் அதிமுக தொண்டர்கள்  மட்டுமே .தொண்டர்கள் இல்லாமல் எதுவும் நடக்க இயலாது .ஏனென்றால் தற்பொழுது தொண்டர்களின் மனநிலை ஒன்றாக இல்லை. அதனை ஒருங்கிணைத்து  கொண்டு வர வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டனின்  விருப்பம் .இந்த அனைத்து  பிரச்சனைகளுக்கும் காரணம் முதலாவது  கே.பி.முனுசாமி மட்டுமே .அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் கிடையாது .இரண்டாவது ஓ பி எஸ் ,தனது பதவி பறிபோன பின் அம்மாவின் நினைவிடத்தில் தர்ம யுத்தம் என்ற பெயரில்  மற்றுமொரு  பிரச்சனையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார் .இதேபோல அதிமுக எம் எல் ஏ  கள் அனைவரும் இவர்களின் செயல்களை பார்த்து என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி இருக்கிறார்கள் . அனைத்து அதிமுக தொண்டர்களின் விருப்பம் என்பது யார் வேண்டுமானாலும் வரட்டும்,அவர்களில் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒற்றை  தலைமையை ஏற்பது தான் சிறந்த முடிவாகும் .

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

அதிமுக உட்கட்சி பிரச்சனையால் பிரிந்திருப்பவர்களை ரஜினிகாந்த் ஆதரவுடன் தன்வயப்படுத்த தயாராகிறதா பாஜக ?

          பி.ஜே.பி தலைமையில் ஒரு கூட்டணி  அமைக்கப்பட்டு ,அதில் அதிமுக வில் உள்ள  உட்கட்சி பிரச்சனையில் பிரிந்துஇருபவர்களை அந்த கூட்டணியில் தனித்தனி அங்கங்களாக சேர்த்து அதற்கு  திரு.ரஜினிகாந்த் அவர்களின் ஆதரவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெற்று ,ஒரு கூட்டணியை கட்டமைக்க 
பி.ஜே.பி முயற்சி செய்கிறது . திரு.ரஜினிகாந்த் அவர்கள் 2020-ல் அந்த தேர்தலில் அவர் வரப்போவதில்லை என்று சொன்ன பிறகு அந்த நேரத்தில் சில கணிப்புகளை பத்திரிக்கையாளர் சந்திப்பில்  முன்வைத்தார் .அதில் அதிகபட்சமாக 12% முதல் 15% சதவீதம் வாக்குகளை தான் நாம் பெற முடியும் .அப்பொழுது அந்த மூன்றாவது அணி திரு.ரஜினிகாந்த் அவர்கள் கட்டமைப்பது வெற்றி பெறாது .அதனால் யாரையும்  சிரமப்படுத்த விரும்பவில்லை ,நான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்கின்ற அளவில் அவர்  கூறினார் .அதனால் அவர் முழுவதும் நான் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என்று அவர் கூறவில்லை . 

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றம் அடிப்படையிலேயே தவறிழைத்துவிட்டதா?

          அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்ற OPS ன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்புகிறது. சசிகலா தொடர்ந்த வழக்கிற்கும் சரியான விடை கிடைக்கவில்லை. இடியாப்ப சிக்கல் எனும் உவமைக்கு இந்த வழக்கு மிகச்சரியாக பொருந்தும். இந்த சிக்கலை அவிழ்க்க நீதிமன்றம் தொட வேண்டியது, இந்த வழக்குகளை அல்ல. இந்த வழக்கின் அடிப்படையாக எம்.ஜி.ஆர். அவர்களின் உயிலுடனும், அவர் வகுத்த விதிகளுடனும் தொடக்கப்புள்ளி வைத்த முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி அவர்கள் தொடர்ந்த வழக்கைத்தான்.
         அடிப்படை கேள்விகளுக்கு விடையளிக்காமல் இறுதி கேள்விகளுக்கு விடையை தேடிக்கொண்டிருக்கிறது நீதிமன்றம். எப்படி கிட்டும்? அதிமுக எனும் மகத்தான கழகத்தை பாதுகாக்கும் பொறுப்பை எம்.ஜி.ஆர்.அவர்களும், அம்மா அவர்களும் யாரிடமும் விட்டு செல்லவில்லை. அடிமட்ட தொண்டர்களிடம் தான் விட்டு சென்றனர். அவர்களில் 80 சதவிகிதத்தினர் என்ன முடிவெடுக்கிறார்களோ அவரே தலைமை ஏற்க வேண்டும் என்றும், பொதுக்குழுவை கருவியாக பயன்படுத்தி யாரும் கழகத்தை கைப்பற்றி விடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள்.
           இது தொடர்பான வழக்குகளையும் வாதங்களையும் விசாரிக்காமல், நேரடியாக OPS தொடர்ந்த வழக்கிற்கு, பொதுக்குழுவிற்கு பெரும்பான்மை ஆதரவு யாருக்கு உள்ளது என்ற அடிப்படையில்லாத சமன்பாடுகளை சரிசெய்ய நினைக்கிறது நீதிமன்றம். இதனால்தான் கே.சி.பழனிசாமி அவர்கள் நீதிமன்றத்தின் மேலும், தேர்தல் ஆணையத்தின் மேலும் நம்பிக்கை இல்லை என்று முடிவெடுத்து தொண்டர்களை திரட்டி உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
       நாம் தொண்டர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு ஒரு தற்காலிக உறுப்பினர் அட்டை வழங்கி, கிளைச்செயலாளருக்கும் பொதுச்செயலாளருக்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்தி நமக்கான தலைமையை தேர்ந்தெடுப்பதே நீதிமன்றம் செய்த பிழைக்கும், தேர்தல் ஆணையம் செய்த பிழைக்கும் ஒரு தீர்வாக அமையும்.  

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

எம்.ஜி.ஆர். கற்ற அரசியல் பாடம் இன்று வரை அதிமுகவை வழிநடத்துகிறது

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.ஐ திமுகவில் இருந்து நீக்க எண்ணற்ற முயற்சிகள் கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு கருணாநிதியை தயங்க செய்தது. அதற்காக அவர் கையில் எடுத்த ஆயுதம் பொதுக்குழு. தனக்கு வேண்டியவர்களை மட்டுமே கொண்ட அப்பொதுக்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து எம்.ஜி.ஆர்.ஐ கட்சியில் இருந்து நீக்கியது திமுக. 
     இப்படியொரு நிலை, தான் தோற்றுவித்த கழகத்திற்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், யாரும் பொதுக்குழுவை கருவியாக பயன்படுத்தி கழகத்தை கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காகவும் எம்.ஜி.ஆர். அவர்கள் அதிமுகவை தொடங்கும்போதே பொதுக்குழுவிற்கு சிலவற்றை தவிர எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. அந்த சிலவும் கொள்கை ரீதியிலான அதிகாரங்களே. குறிப்பாக யாரையும் நீக்கவோ கட்சியின் தலைமையை தேர்ந்தெடுக்கவோ எந்த அதிகாரமும் பொதுக்குழுவிற்கு வழங்கப்படவில்லை.
     பிறகு யார்தான் தலைமையை தீர்மானிப்பர் என்ற கேள்விக்கு, கட்சியிலுள்ள 80 சதவிகித தொண்டர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அவரே தலைமையை நிர்வகிப்பார் என்ற ஆகச்சிறந்த முடிவுகளை எடுத்தார். இந்தியாவிலுள்ள எந்தவொரு அரசியல் இயக்கத்திலும் இல்லாத தனித்துவம் அதிமுகவிற்கு இருக்கிறது என்றால், அது எம்.ஜி.ஆர். அவர்களால் கொண்டுவந்த இந்த தீர்மானமே ஆகும். அதுவே ஜனநாயகமாகும்.
    இப்போது OPS மற்றும் EPS க்கு இடையே நிலவும் மோதல்போக்கிற்கும் அதிமுக உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைக்கும் அன்றே விடை சொன்னவர் எம்.ஜி.ஆர். ஆனால் அவ்வாறு நடந்தால் தனது பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அதிமுகவின் விதிகளை மாற்றி, தனக்கு வேண்டியவர்களை மட்டும் பொதுக்குழு உறுப்பினர்களாக நியமித்து, தன்னைத்தானே பொதுச்செயலாளர் என்று அறிவித்துக்கொண்டார் EPS. இது ஜனநாயகமா? 
    நீதிமன்றங்களின் மூலம் அரசியல் மோசடி செய்து கொண்டிருக்கிறார் EPS. நீதிமன்றங்களையும் தேர்தல் ஆணையத்தையும் புறக்கணித்துவிட்டு, நமக்கான தலைமையை நாம் வாக்களித்து தேர்ந்தெடுப்போம். நூறு உறுப்பினர்கள் கொண்ட ஒரு லட்சம் கிளைகளை உருவாக்கி, குறைந்தது ஒரு கோடி தொண்டர்களிடம் உறுப்பினர் அட்டையை கொடுத்து வாக்குகளை சேகரித்து, தலைமையை நியமிக்க வேண்டும். எவர் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். ஆனால் தொண்டர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
    இதற்கான முன்னெடுப்பை இன்றிலிருந்து துவக்க வேண்டும். நாம் ஒவ்வொரு கிளையிலும் குறைந்தது நூறு பேரையாவது திரட்டி  ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்குவோம். எம்.ஜி.ஆர். அவர்கள் விட்டுச்சென்ற பாதையையும் பணிகளையும் நாம்தான் மீட்டு செயல்படுத்த வேண்டும். ஒன்றிணைவோம்.

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

எம்.ஜி.ஆர். கற்ற அரசியல் பாடம் இன்று வரை அதிமுகவை வழிநடத்துகிறது

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.ஐ திமுகவில் இருந்து நீக்க எண்ணற்ற முயற்சிகள் கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு கருணாநிதியை தயங்க செய்தது. அதற்காக அவர் கையில் எடுத்த ஆயுதம் பொதுக்குழு. தனக்கு வேண்டியவர்களை மட்டுமே கொண்ட அப்பொதுக்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து எம்.ஜி.ஆர்.ஐ கட்சியில் இருந்து நீக்கியது திமுக. 
     இப்படியொரு நிலை, தான் தோற்றுவித்த கழகத்திற்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், யாரும் பொதுக்குழுவை கருவியாக பயன்படுத்தி கழகத்தை கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காகவும் எம்.ஜி.ஆர். அவர்கள் அதிமுகவை தொடங்கும்போதே பொதுக்குழுவிற்கு சிலவற்றை தவிர எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. அந்த சிலவும் கொள்கை ரீதியிலான அதிகாரங்களே. குறிப்பாக யாரையும் நீக்கவோ கட்சியின் தலைமையை தேர்ந்தெடுக்கவோ எந்த அதிகாரமும் பொதுக்குழுவிற்கு வழங்கப்படவில்லை.
     பிறகு யார்தான் தலைமையை தீர்மானிப்பர் என்ற கேள்விக்கு, கட்சியிலுள்ள 80 சதவிகித தொண்டர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அவரே தலைமையை நிர்வகிப்பார் என்ற ஆகச்சிறந்த முடிவுகளை எடுத்தார். இந்தியாவிலுள்ள எந்தவொரு அரசியல் இயக்கத்திலும் இல்லாத தனித்துவம் அதிமுகவிற்கு இருக்கிறது என்றால், அது எம்.ஜி.ஆர். அவர்களால் கொண்டுவந்த இந்த தீர்மானமே ஆகும். அதுவே ஜனநாயகமாகும்.
    இப்போது OPS மற்றும் EPS க்கு இடையே நிலவும் மோதல்போக்கிற்கும் அதிமுக உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைக்கும் அன்றே விடை சொன்னவர் எம்.ஜி.ஆர். ஆனால் அவ்வாறு நடந்தால் தனது பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அதிமுகவின் விதிகளை மாற்றி, தனக்கு வேண்டியவர்களை மட்டும் பொதுக்குழு உறுப்பினர்களாக நியமித்து, தன்னைத்தானே பொதுச்செயலாளர் என்று அறிவித்துக்கொண்டார் EPS. இது ஜனநாயகமா? 
    நீதிமன்றங்களின் மூலம் அரசியல் மோசடி செய்து கொண்டிருக்கிறார் EPS. நீதிமன்றங்களையும் தேர்தல் ஆணையத்தையும் புறக்கணித்துவிட்டு, நமக்கான தலைமையை நாம் வாக்களித்து தேர்ந்தெடுப்போம். நூறு உறுப்பினர்கள் கொண்ட ஒரு லட்சம் கிளைகளை உருவாக்கி, குறைந்தது ஒரு கோடி தொண்டர்களிடம் உறுப்பினர் அட்டையை கொடுத்து வாக்குகளை சேகரித்து, தலைமையை நியமிக்க வேண்டும். எவர் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். ஆனால் தொண்டர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
    இதற்கான முன்னெடுப்பை இன்றிலிருந்து துவக்க வேண்டும். நாம் ஒவ்வொரு கிளையிலும் குறைந்தது நூறு பேரையாவது திரட்டி  ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்குவோம். எம்.ஜி.ஆர். அவர்கள் விட்டுச்சென்ற பாதையையும் பணிகளையும் நாம்தான் மீட்டு செயல்படுத்த வேண்டும். ஒன்றிணைவோம்.

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: