சாதி, சமய பாகுபாடின்றி நலிந்தவர்களையும் பெண்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது திராவிட சித்தாந்தம். இயற்கையை அழிக்கும் எந்த நாடும் மாநிலமும் முன்னேறியதில்லை. இதன் மூலம் தான் தமிழகம் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் வருவதற்கு 75 ஆண்டுக்கு முன்பே இந்த இலக்குகள் திராவிட மேன் மனிதர்களால் உருவாக்கப் பட்டவை. அதிமுக எந்த கட்சி கூட நட்பு கொண்டாலும் இதன் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.
மற்ற மக்களை பிரித்தாள நினைக்கும் இபிஎஸ்-ன் சாதி பூசலும் பாஜக வின் மத சாயமும் அதிமுக-விற்கு எதிரானவை.
அதிலும் பாஜக என்பது கொடிய விஷம். குடும்பம் முதல் தேசம் வரை உள்ளுக்குள்ளவே கலகம் மூட்டுவதில் தேர்ந்தவர்கள். இவர்கள் கொள்கைகள் பல தரப்பிலும் ஒருவருக்கொருவர் பகைமையை தூண்டும். மத வெறி, சாதி வெறி, பணக்காரர் சார்பு, பணம் சுருட்டும் உத்திகள், இயற்கை சூழல் அழிப்பு, நவீன அவுட் சோர்ஸ் டிஜிட்டல் ஊழல், ஜனநாயக கட்டமைப்புகளை ஆக்கிரமித்தல் போன்ற பாசிச கொள்கைகளை மக்கள் இனம் கண்டு கொண்டு எதிர்க்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இந்த தலைமுறை பல தலைமுறைகளின் எதிர்காலத்தை சிதைத்து விடும். அதை மாற்ற மீண்டும் ஒரு புரட்சி உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
சமூக அக்கறை உள்ள நடுநிலையாளர்கள் மேலோட்டமாக அல்லாமல் கவனமாக பாஜகவின் நடைமுறைகளை கவனிக்க வேண்டும். அவர்கள் செய்வதற்கும் சொல்வதற்கும் சம்பந்தமே இருக்காது. பொய்கள், பொய்யான தகவல்கள், வன்முறை, ஆராஜகம் இவைகளை பல மார்கட்டிங் உத்திகளின் உதவியால் மக்கள் மனதில் விதைக்கிறார்கள். அரசு எதிராக பாதிக்கப் பட்டவர்கள் ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவிப்பதும் இயல்பு. அதை அரசு கவனிக்கும். ஆனால் அப்படி எதிர்ப்பவர்களை குண்டர்களை வைத்து அடித்து நொருக்கும் கல்சர் பஜக தோற்றுவித்த ஒன்று. பிறகு இதுவே சிவில் வார் அளவுக்கு போகும் வாய்ப்பு மிக அதிகம்.
சுய பாதுகாப்பிற்கு பயிற்சி கொடுக்கிறோம் என்ற பெயரில் குண்டரகளை உருவாக்கும. ஒரே கட்சி பாஜக தான். இந்த பயிற்சி பெற்ற குண்டர்களை ரகளையில் ஈடுபடுத்துவது முற்றிலும் பாசிச வாத செயலாகும்.
இந்த விஷம் நாட்டுக்கு மிகப் பெரிய கேடாகும். திராவிட வளர்ச்சி சித்தாந்தத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். அதனால் தான் அதிமுக அவர்களை விட்டு முற்றிலும் விலக வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திமுகவின் கலாச்சாரமான அராஜகம், கட்ட பஞ்சாயத்து, மிரட்டலகள், அதிகார கொழுப்பு, போன்றவை பல இடங்களில் தலைவிரித்தாட தொடங்கி உள்ளது. அதன் தலைவர்கள் தினம் ஒரு திட்டம் அறிவிப்பதும், ஓடி ஓடி சிலரோடு போட்டோ எடுத்து வெற்று விளம்பரம் செய்வதை மக்கள் கவனித்து விட்டார்கள்.
எனவே அதிமுக உடனே உள் கட்சி தேரதல் நடத்தி தனது அமைப்பை சரி செய்து கொண்டால் 2024 ல் பெரும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
குழுவில் இணைய