அதிமுக என்றாலே அது தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் கட்சியாக தான் எம்.ஜி.ஆர்., அம்மா காலத்தில் இருந்தது. அம்மாவின் மறைவுக்குப்பிறகு, சாத்திய பாகுபாடு அதிகரித்தது. தற்போது எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இடையிலான மோதலால் ரொம்பவே அதிகமாகியிருக்கிறது. இந்த நிலையில், ஓ.பி.எஸ் – தினகரன்சந்திப்புக்கு பின்னர் அதிமுகவில் சாதியப் பாகுபாடு பூதாகரமாகிவிட்டது.
திராவிடக் நிலை மாறி கட்சி சசிகலா,பன்னீர்,தினகரன்,வைத்திலிங்கம் என ஒரு அணியாகவும் எடப்பாடி,வேலுமணி,தங்கமணி என இன்னொரு அணியாகவும் எதிரெதிராகவே நிற்கிறார்கள். இவர்கள் இப்படி சாதிரீதியாக அடித்துக்கொள்வதால், கட்சிக்கு அப்பாற்பட்ட பலரும் அதில் சேர்ந்துகொள்கிறார்கள். இதை அதிமுக-வின் தொண்டர்களும் வாக்காளர்களும் துளியும் விரும்பவில்லை. இது எடப்பாடிக்கும் பண்ணீருக்கும் ஏன் அதிமுக என்ற பெரியக்கத்திற்குமே பெரிய ஆபத்தாக முடியும்!
கர்நாடகத்தில் பாஜகவை EPS-ம் OPS-ம் விழுந்து விழுந்து கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள் .தேர்தலை முன்னின்று நடத்தினார் அண்ணாமலை .தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி தேர்தலில் போட்டியிட்டார்.,
இவர்கள் அனைவரும் ஒருசேர தோற்று பாஜக ஆட்சி கர்நாடகத்தில் அப்புறப்படுத்தப்பட்டது. .தமிழகத்திலும் EPS, OPS இல்லாத, பாஜக கூட்டணி இல்லாத சாதி, மதம், லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட தொண்டர்களால் உருவாக்கப்படும் தலைமையால் வழிநடத்தப்படும் அதிமுகவிற்கும்,திமுக கூட்டணிக்கும் நாடாளுமன்ற தேர்தல் போட்டியாக அமையும் .அதில் அதிமுக நிச்சயம் நாற்பதையும் வென்றெடுக்கும்.
தொண்டர்களால் தலைமை என்கிற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் விதியை அழிக்க துணை நின்ற பா.ஜ.க அழித்த EPS, OPS அனைவருக்கும் எம்.ஜி.ஆர் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள் .
சாதி, சமய பாகுபாடின்றி நலிந்தவர்களையும் பெண்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது திராவிட சித்தாந்தம். இயற்கையை அழிக்கும் எந்த நாடும் மாநிலமும் முன்னேறியதில்லை. இதன் மூலம் தான் தமிழகம் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் வருவதற்கு 75 ஆண்டுக்கு முன்பே இந்த இலக்குகள் திராவிட மேன் மனிதர்களால் உருவாக்கப் பட்டவை. அதிமுக எந்த கட்சி கூட நட்பு கொண்டாலும் இதன் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.
மற்ற மக்களை பிரித்தாள நினைக்கும் இபிஎஸ்-ன் சாதி பூசலும் பாஜக வின் மத சாயமும் அதிமுக-விற்கு எதிரானவை.
அதிலும் பாஜக என்பது கொடிய விஷம். குடும்பம் முதல் தேசம் வரை உள்ளுக்குள்ளவே கலகம் மூட்டுவதில் தேர்ந்தவர்கள். இவர்கள் கொள்கைகள் பல தரப்பிலும் ஒருவருக்கொருவர் பகைமையை தூண்டும். மத வெறி, சாதி வெறி, பணக்காரர் சார்பு, பணம் சுருட்டும் உத்திகள், இயற்கை சூழல் அழிப்பு, நவீன அவுட் சோர்ஸ் டிஜிட்டல் ஊழல், ஜனநாயக…
1996 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது.வெறும் 4 எம்.எல்.ஏகள் மட்டும் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை இருப்பினும் திமுக அரசுக்கு எதிராக மிக வலுவான எதிர்க்கட்சி அரசியலை செய்து கொண்டுவந்தார் ஜெயலலிதா. ஆனால் தற்பொழுது 62 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் பதவி பெறுவதில் மட்டுமே ஆர்வம் கட்டிய எடப்பாடி,தன்மீதும் தன் சகாக்கள் மீதும் வழக்குகளுக்கு பயந்துகொண்டு சரியான எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை.அதனால் தமிழக அரசியல் களம் திமுக VS பாஜக என்று அமைகிறது.அதிமுக அதன் தனித்தன்மையை இழக்கிறது .அதிமுக தொண்டர்கள் விழிப்படைய வேண்டிய நேரம் இது.
திமுகவின் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக அமைச்சரவை மாறி உள்ளது. கர்நாடகா தேர்தலின் முடிவுகள் தென்னிந்திய அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையில் உள்ளது.இதை எல்லாம் விட்டுவிட்டு 3 நாட்களுக்கு முன்பு நடந்த ஓ பி எஸ், தினகரன் சந்திப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் @EPSTamilNadu. இவர் மீண்டும் ஆட்சி அமைக்க நினைக்கிறாரா?
அல்லது அதிமுகவை கைப்பற்றினால் மட்டும் போதும் என்று நினைக்கிறாரா?
திமுகவை எதிர்க்க எடப்பாடி உள்ளிட்ட அதிமுக சீனியர்கள் பயப்படுவதற்கு காரணம் அவர்கள் செய்த குற்றங்கள் தான் என்கிறார் அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன்.எப்போதெல்லாம் திமுக அரசை விமர்சிக்க நினைக்கிறார்களோ , அப்பொழுது அவர்கள் செய்த குற்றங்களான ஊழல்,ரெய்டு போன்றவற்றை கையிலெடுக்கிறார்,ஸ்டாலின் .சட்டசபையில் கொடநாடு வழக்கு என்று பேசியபோது எடப்பாடி வெளியேறியதால் அவரை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ களும் வெளிநடப்பு செய்தார்கள் .இதே போன்று இருக்கை பிரச்சனைக்காக மட்டும் எட்டு முறை வெளிநடப்பு செய்தது அதிமுக .
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இன்று எதிர்கட்சி வரிசையில் எம்.எல்.ஏ களாக அமர்ந்துஇருக்கிறார்கள்.அவர்கள் நினைத்தால் திமுகவின் முறைகேடு ,தவறுகளை வெளிக்கொண்டு வர முடியும் .ஆனால் தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பது போல் எதையும் பேசுவதில்லை. .உதயநிதியின் விளையாட்டுத்துறையில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன ,ஆனால் அதனை பற்றி பேசாமல் அமைச்சர் வேலுமணி “இலவச ஐ.பி.எல்.டிக்கெட் கேட்கிறார் , நினைத்தால் ஒரு ஸ்டேடியத்தையே விலைக்கு வாங்கலாம் ,ஓசி டிக்கெட் கேக்கிறாரே?” மக்கள் கேலி செய்கிறார்கள், என்கிறார் ஜெகதீஸ்வரன் .
திரு .கே.சி.பழனிசாமி அவர்கள் zoom மூலமாக தொண்டர்களுடன் கலந்து கொண்ட கலந்துரையாடலின் பொழுது கூறியதாவது ,மக்களை போல கீழ்மட்டத்தில் ,கிளைஅளவில் உள்ள இருந்தும்,இருக்கின்றவர்கள் தான் அண்ணாதிமுக கட்சியை பாதுகாத்துக்கொண்டு இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் .மேலும் அவர் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றவர்கள் அனைவரும் திருடர்கள் என்றும் ,அவர்கள் குடும்பம் பிழைப்பதற்கும் ,அவர்களை பாதுகாத்து கொள்வதற்கும் .அவர்கள் பினாமி பிழைப்பதற்கும்,அவர்கள் கமிஷன் ஏஜென்ட் பணம் பார்ப்பதற்கும் தான் இது எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் .
மேலும் உரையாடலின் பொழுது இவர்கள் அனைவருமே மக்களிடமும் தொண்டர்களிடமும் நடித்து கொண்டு இருப்பதால் இவர்கள் பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு தைரியம் கிடையாது என்று கூறியுள்ளார் .அவருடைய உரையாடலின் போது தொண்டர் ஒருவரும் கோவமாக பாஜக இருக்கும் வரை நாம் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது என்று உறுதியாக கூறியுள்ளார் .இதிலிருந்து தொண்டர்கள் அனைவருக்கும் பாஜகவின் மேல் அதிகஅளவு வெறுப்பு உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் புதியதலைமுறை தொலைக்காட்சியில் கலந்துகொண்டு நிருபரிடம் கலந்துரையாடிய பொழுது அவர் கூறியது ,தமிழ்நாட்டில் உள்ள சாதிக்கும் கட்சிக்கும் பார்க்கும் பொழுது வன்னியர் வாக்கு அன்னியர்க்கு இல்லை என்ற ராமசாமி படையாட்சி காலத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியை ராமதாஸ் அவர்கள் ஆரம்பித்த காலம் ,இப்பொழுது 2019-ல் கொங்கு பகுதியில் சிலிண்டர் சின்னத்தில் கொங்கு கட்சி ஆரம்பித்த காலம் ,தென்மாவட்டங்களில் முத்துராமலிங்க தேவர் போன்று இந்த காலகட்டங்களில் ஓர் emotional ஆக அது பயன்படுத்தப்பட்டு இருக்கிறதே ஒழிய ஒரு long term victory -அ கொடுத்ததில்லை என்று கூறியுள்ளார் .
மேலும் கலந்துரையாடலின் பொழுது கடைசியாக சாதியா ?கட்சியா ? என்று பார்க்கும் பொழுது திராவிட கட்சிகளில் கட்சி தான் வெற்றிபெற்று இருக்கிறதே தவிர சாதி வென்றதாக இதுவரை தமிழகத்தில் சரித்திரம் இல்லை என்றும் ,மேலும் சாதி தமிழகத்தில் வெற்றி பெறாது என்றும் கூறியுள்ளார் .
இம்முறை அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்திற்கு சீட் கொடுக்காவிட்டாலும் மறைமுகமாக திமுக மற்றும் பாஜகவின் ஆதரவோடு மீண்டும் மகனை MPஆக்க சுமூக உறவை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கடைபிடிக்கிறார்.மேலும் 2011-2015 வரை திமுக அமைச்சர்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் எதுவும் 2016-2021 காலகட்டங்களில் எடப்பாடி பழனிசாமியால் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது .ஆனால் அதற்கு கைமாறாக தற்பொழுது இவர்களை பாதுகாத்து கொண்டிருக்கிறது திமுக.
மேலும் மு.க.ஸ்டாலின் ,உதயநிதி ஸ்டாலின் ,எ.வ.வேலு போன்ற இவர்களுக்கு எதிராக பலகீனமான அதிமுக கூட்டணி வேட்பாளர்களே நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் .அதே போன்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பலகீனமான தி.மு.க வேட்பாளரே நிறுத்தப்பட்டு இருக்கிறார் .
இதுபோன்ற மறைமுக பேரங்களின் மூலம் எடப்பாடி பழனிசாமியை ஐ வீழ்த்த ஓ.பன்னீர்செல்வமும் ம்,அதே போன்று ஓ.பன்னீர்செல்வத்தை ஐ வீழ்த்த எடப்பாடி பழனிசாமியும் செய்கிற முயற்சிகள் இருவரும் சேர்ந்து அதிமுகவை வீழ்த்துவதற்கான வியூகம் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.எனவே அதிமுகவை காப்பது என்பது தொண்டர்கள் கையில் தான் உள்ளது.
குடும்ப அரிசிதாரர்களுக்கு ரூ 4,000 கொரோனா நிவாரணம் வழங்கியது.
ஆவின் பால் லிட்டர்க்கு 3 ரூ குறைத்தது
மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என அறிவித்தது
ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் மசோதா நிறைவேற்றி ஆளுநரிடம் ஒப்புதல் வாங்கியது.
வேதனைகள் :
மக்களுக்கு பலன்தரும் பழைய திட்டங்களை கைவிட்டு. புதியத்திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தாமல் இருப்பது.
முதியோர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை அதிகரிப்பதாக அறிவித்துவிட்டு முன்னறிவிப்பின்றி அதை நிறுத்தியது.
மின் கட்டணம் , சொத்து வரி குறைப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு மாறாக வரியை அதிகரித்தது.
மதுவிலக்கு கொண்டுவருவதாக சொல்லிவிட்டு. முன்பை விட அதிக அளவு மது விற்பனையை நவீன முறையில் மேம்படுத்துவது.
மிக மோசமான சட்டம் ஒழுங்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விட பலமடங்கு ஊழல்
ஊழலை மருமகன் மூலமாகமையப்படுத்தி ஆதாயம் தேடுவது திராவிட மாடல் என்று முழங்கிவிட்டு மருமகனை காப்பாற்ற மத்திய அரசிடம் மறைமுக பேச்சுவார்த்தை
சித்தாந்த அரசியலை வாயளவில் பேசி செயலளவில் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் நலத்திட்டங்களுக்கும் பெரிய அளவில்நடவடிக்கை எடுக்காதது
இரண்டு ஆண்டுகள் முடிந்தும் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலங்கள் உட்பட எந்த வேலையும் செய்து முடிக்காதது
முந்தைய அரசாங்கத்தில் ஊழலுக்கு உறுதுணையாக இருந்தஅதே அதிகாரிகளை அதிகபட்ச ஊழலுக்காக பயன்படுத்தி கொண்டிருப்பது
சொந்த அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சும் மத்திய அரசோடு மறைமுக ஒப்பந்தத்திலும் செயல்படுவது
செய்ய தவறியது:
முன்னாள் ஊழல்வாதிகளை 90 நாட்களில் சிறையில் அடைப்பேன். கலைஞரின் மகன் நான் சொன்னதை செய்வேன் என்று முழக்கமிட்டு அவர்களோடு மறைமுக ஒப்பந்தம் ஏற்படுத்தி செயல்படுவது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிகொண்டுவருவேன் என்று சொல்லிவிட்டு அதன் ஏன்டா நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உள்ள குற்றவாளியை கண்டறிவேன் என்று சவால் விட்டுவிட்டு அதன்மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது.
அதிமுக வின் முன்னாள் எம்.பி திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் தொண்டர்களுடன் கலந்துகொண்டு உரையாடிய பொழுது அவர் கூறியதாவது ,நம்முடன் இருக்கின்ற 15% தொண்டர்கள் மற்றும் பிரித்திருக்கின்ற தொண்டர்கள் 50% இவை இரண்டும் சேரும் பொழுது 65% தொண்டர்கள் நம்முடன் இருப்பார்கள் என்றும் ,மேலும் இது சேரும் பொழுது எடப்பாடி பழனிசாமியின் தொண்டர்கள் 25% அனைவரும் நம்முடன் வந்து சேர்ந்துகொள்வார்கள் என்றும் கூறினார்.
எனவே 90% சதவிகிதம் அண்ணாதிமுக தொண்டர்கள் பாஜகவை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கின்றனர் .மேலும் அவர்கள் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று முனைப்புடன் இருக்கின்றனர் .அண்ணாதிமுகவை சிறு சிறு துண்டுகளாக பிரித்து அந்த வாக்கு வங்கியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பாஜகவினர் நினைக்கின்றனர் .ஆனால் நாம் அவ்வாறு செய்ய விடமாட்டோம் என்று திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் தொண்டர்களுடன் கலந்துரையாடிய பொழுது இவ்வாறு கூறியுள்ளார் .