“அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்!- கே.சி.பி கில்லாடி ப்ளான்”

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஆவதற்கான முஸ்தீபுகளில் முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி இறங்கியிருப்பதால், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தரப்பும் தினகரன் தரப்பும் ‘ஜெர்க்’ ஆகியுள்ளன.

தினகரன்- திவாகரன் மோதலால் குஷியில் இருந்த ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் தரப்புக்கு கே.சி.பழனிசாமியின் ‘மூவ்’ அதிர்ச்சியை அளித்துள்ளது. எனவே, மீண்டும் அவரைக் கட்சிக்குள் கொண்டுவந்து ஆஃப் செய்துவிட நினைக்கிறது ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் தரப்பு. இன்னொருபுறம், கே.சி.பி-யைத் தங்கள் பக்கம் இழுத்து, எடப்பாடிக்கு செக் வைக்க நினைக்கிறது தினகரன் தரப்பு.

கே.சி.பி-யின் நெருங்கிய வட்டாரத் தில் பேசினோம். “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அ.தி.மு.க ஆதரவு கொடுக்கும் என்று டி.வி விவாதம் ஒன்றில் கே.சி.பி பேசினார். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆகிய இருவரும் அதை மிகப்பெரிய குற்றமாகக் கருதினர். மோடிக்கு பயந்து, கே.சி.பி-யை கட்சியைவிட்டு நீக்குவதாக அறிவித்தனர். ஆனால், அதனால் எழுந்த பிரச்னைகளை சமாளிக்கத் தெரியாமல் இப்போது தவிக்கிறார்கள்.

சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமித்த போதே, ‘அ.தி.மு.க சட்டவிதிகளின் படி அது செல்லாது’ என்று தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தவர் கே.சி.பழனிசாமி. அதைப் பார்த்துதான், ‘சசிகலா நியமனம் செல்லாது’ என்று தான் வெளியேற்றப்பட்ட பிறகு, தேர்தல் கமிஷனில் பெட்டிஷன் போட்டார் ஓ.பி.எஸ். இப்போதோ ‘எங்களின் பொதுச்செயலாளர் நியமனம் செல்லும். அவர்களின் ஒருங்கிணைப்பாளர் நியமனம் செல்லாது’ என்று சசிகலா தரப்பும், ‘எங்களின் ஒருங்கிணைப்பாளர் நியமனம் செல்லும். அவர்களின் பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது’ என ஓ.பி.எஸ் தரப்பும் தொண்டர்கள் காதில் பூச்சுற்றுகிறார்கள். ஆனால், சட்டத்தின் முன் எதுவும் எடுபடாது. முறைப்படி தேர்தல் நடத்தி, அதில் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து

தேர்வாகும் பொதுச்செயலாளருக்குத்தான், யாரையும் நீக்கவோ சேர்க்கவோ அதிகாரம் உண்டு. கே.சி.பியை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதுதான் இப்போது கே.சி.பியின் ஒரே குறிக்கோள். டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் இரட்டை இலைச் சின்ன மேல்முறையீட்டு வழக்கில், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தச் சொல்லி தினகரன் தரப்பு வாதாடிவருகிறது. அதை வேண்டாம் என்கிறது .பி.எஸ் தரப்பு. தேர்தல் ஆணையத்தில் இந்த விவகாரம் குறித்து எல்லோருக்கும் முன்பாக மனு செய்திருந்த கே.சி.பழனிசாமியை, இந்த மேல்முறையீட்டு வழக்கில் கழட்டிவிட்டுவிட்டார்கள். தன்னையும் அதில் சேர்க்குமாறு கே.சி.பி இப்போது மனுகொடுத்துள்ளார். அவரும் அந்த வழக்கில் சேர்க்கப்படும் பட்சத்தில், ‘.தி.மு.வில் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்என்ற வாதம் வலுக்கும். இது தங்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்று பதறிப்போயுள்ளது .பி.எஸ் தரப்பு.

இதனால், கே.சி.பியை மே 7-ம் தேதி தன் வீட்டுக்கு அழைத்து .பி.எஸ் பேசினார். ‘நடந்த எல்லாத்தையும் மறந்துடுங்க. மீண்டும் உங்களைக் கட்சியில் சேர்த்ததா அறிவிச்சுடுறேன். மனஸ்தாபம் இல்லாம கட்சிப்பணி செய்யுங்க. உங்களுக்கு சேரவேண்டியது வந்து சேரும்என்று சொல்லியுள்ளார். அதற்கு கே.சி.பி, ‘அதெல்லாம் இருக்கட்டுமுங்கஎன்னை எதுக்கு நீக்குனீங்கன்னு சொல்லுங்கன்னு கேட்டிருக்கார். ‘முதல்வர்தான் நீக்கச்சொன்னார்என்று எடப்பாடி தலையில் பழியைத் தூக்கிப் போட்டிருக்கிறார் .பி.எஸ்

உடனே கே.சி.பி., ‘என்னை நீக்கிய மறுநாளே, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் சேலம் இளங்கோவன் எல்லாம் அடுத்தடுத்து போன் பண்ணி ‘எங்களைத் தப்பா நினைச்சுக்காதீங்க. இதுக்கும் முதல்வருக்கும் எந்த  சம்பந்தமும் இல்லை. ஓ.பி.எஸ்-தான் எல்லாத்துக்கும் காரணம்’னு சொன்னாங்களே அது பொய்யா? என்று கேட்க, அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டார் ஓ.பி.எஸ். ‘பழசையெல்லாம் விட்ருங்க, நடக்கப்போறதைப் பத்தி பேசுவோம்’ என்று சொல்லியிருக்கிறார் ஓ.பி.எஸ். அதற்கு, ‘நான் மீண்டும் உங்களோட வர்றதைப் பத்திப் பிரச்னை இல்லை. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தறதுக்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கணும். 15 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும். அதில் ஓர் ஆளாக என்னை இணைக்க வேண்டும். இதுக்கு ஓ.கே-ன்னா நான் வர்றேன்’ என நிபந்தனை விதித்துள்ளார்” என்றது கே.சி.பி-யின் நெருங்கிய வட்டாரம்.

‘‘பொதுச்செயலாளர் தேர்தல் வைத்தால் எடப்பாடிக்கும், ஓ.பி.எஸ்-ஸுக்குமே தகராறு வெடிக்கும். தவிர, அவர்கள் இருவர்மீதுமே கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இந்தப் பக்கம் தினகரனால் போட்டியிட முடியாது. சசிகலா போட்டியிடலாம். ஆனால், அவர்மீது கட்சினருக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. விதி இருந்துச்சுன்னா அ.தி.மு.க-வின்  அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்’’ என்று தன் நண்பர்களிடம் சொல்லிவருகிறாராம் கே.சி.பி.

இன்னொரு பக்கம் பெங்களூரு புகழேந்தி, தங்க தமிழ்ச்செல்வன் என பலர் மூலம் கே.சி.பி-யைத் தங்கள் பக்கம் இழுக்க தினகரன் தீவிர முயற்சி செய்கிறார்.

கே.சி.பழனிசாமியிடம் பேசினோம். “பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட நான் உள்பட ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கும் உரிமை உள்ளது. எவ்வளவோ வழக்குகள் தன்மீது இருந்தபோதும், கட்சியை ஜெயலலிதா காவு கொடுத்தது கிடையாது. ‘மோடியா, இந்த லேடியா… பார்த்துவிடலாம்’ என்று துணிச்சலுடன் சவால்விட்டுப் பேசினார். அதனால்தான், அவருக்கு மக்கள் செல்வாக்கு குறையாமல் இருந்தது. இவர்களோ மோடி சொல்வதைதான் கேட்கிறார்கள். பி.ஜே.பி தலைவர் ஒருவர் சொன்னார் என்பதற்காக, கட்சியிலிருந்து என்னை நீக்குகிறார்கள். இவர்கள் கட்சியையே காவு கொடுக்கத் துணிந்து விட்டார்கள். நான் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இந்தக் கட்சியில் இருக்கிறேன். எம்.ஜி.ஆர் வழியில் நின்று அ.தி.மு.க-வைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது” என்பதுடன் முடித்துக்கொண்டார்.

 

Share on: