இரண்டு ஆண்டு கால திமுக அரசின் சாதனைகளும் வேதனைகளும்

சாதனைகள் :

குடும்ப அரிசிதாரர்களுக்கு ரூ 4,000 கொரோனா நிவாரணம் வழங்கியது.

ஆவின் பால் லிட்டர்க்கு 3 ரூ குறைத்தது

மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என அறிவித்தது

ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் மசோதா நிறைவேற்றி ஆளுநரிடம் ஒப்புதல் வாங்கியது.

வேதனைகள் : மக்களுக்கு பலன்தரும் பழைய திட்டங்களை கைவிட்டு. புதியத்திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தாமல் இருப்பது.

முதியோர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை அதிகரிப்பதாக அறிவித்துவிட்டு முன்னறிவிப்பின்றி அதை நிறுத்தியது.

மின் கட்டணம் , சொத்து வரி குறைப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு மாறாக வரியை அதிகரித்தது.

மதுவிலக்கு கொண்டுவருவதாக சொல்லிவிட்டு. முன்பை விட அதிக அளவு மது விற்பனையை நவீன முறையில் மேம்படுத்துவது.

மிக மோசமான சட்டம் ஒழுங்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விட பலமடங்கு ஊழல்

ஊழலை மருமகன் மூலமாகமையப்படுத்தி ஆதாயம் தேடுவது திராவிட மாடல் என்று முழங்கிவிட்டு மருமகனை காப்பாற்ற மத்திய அரசிடம் மறைமுக பேச்சுவார்த்தை

சித்தாந்த அரசியலை வாயளவில் பேசி செயலளவில் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் நலத்திட்டங்களுக்கும் பெரிய அளவில்நடவடிக்கை எடுக்காதது

இரண்டு ஆண்டுகள் முடிந்தும் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலங்கள் உட்பட எந்த வேலையும் செய்து முடிக்காதது

முந்தைய அரசாங்கத்தில் ஊழலுக்கு உறுதுணையாக இருந்தஅதே அதிகாரிகளை அதிகபட்ச ஊழலுக்காக பயன்படுத்தி கொண்டிருப்பது

சொந்த அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சும் மத்திய அரசோடு மறைமுக ஒப்பந்தத்திலும் செயல்படுவது

செய்ய தவறியது: முன்னாள் ஊழல்வாதிகளை 90 நாட்களில் சிறையில் அடைப்பேன். கலைஞரின் மகன் நான் சொன்னதை செய்வேன் என்று முழக்கமிட்டு அவர்களோடு மறைமுக ஒப்பந்தம் ஏற்படுத்தி செயல்படுவது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிகொண்டுவருவேன் என்று சொல்லிவிட்டு அதன் ஏன்டா நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உள்ள குற்றவாளியை கண்டறிவேன் என்று சவால் விட்டுவிட்டு அதன்மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது.
Share on: