அதிமுக தலைமை என்ன முடிவெடுக்கிறது என்று டெல்லி ஏங்கிய காலம் எங்கே போனது?

      புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் காலங்களில் டெல்லியில் பிரதமர் முதல் பிற அமைச்சர்கள் வரை அதிமுக தலைமை என்ன முடிவெடுக்கும் என்று காத்துக்கொண்டிருப்பர். மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்த காலகட்டம், ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தார். எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்திற்கு தேவையான அனைத்தையும் கேட்டு பெற்று கொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் மத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தது.
     அப்படி ஒரு சூழலில் எம்.ஜி.ஆர். மன்மோகன்சிங் சந்திப்பு நிகழ்ந்தது. தமிழகத்திற்கு வரவேண்டிய நிதிகளை வளர்ச்சி திட்டங்களுக்காக புரட்சி தலைவர் மன்மோகன்சிங் அவர்களிடம் கேட்டபோது, "கடும் நிதிநெருக்கடியில் மத்திய அரசு உள்ளது. நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி தர முடியாது" என்று மன்மோகன்சிங் கூறியதை கேட்டதும் கோபத்தில் எம்.ஜி.ஆர்.அவர்கள் எழுந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் பிரதமர் ராஜீவகாந்தி அவர்களிடம் இருந்து மன்மோகன்சிங்கிற்கு ஒரு உத்தரவு. எம்.ஜி.ஆர். கேட்பதையெல்லாம் கொடுத்து விடுங்கள் என்று. முடியாது என்று சொன்ன மன்மோகன்சிங் ஐ பதற வைத்தார் புரட்சி தலைவர். 
    அம்மா அவர்களின் காலகட்டங்களிலும் இது போன்று மத்திய அரசை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் இப்போது இருக்கும் அதிமுகவின் தலைமை ஊழல் வழக்குகளுக்கும், ரெய்டுகளுக்கும் பயந்து, எப்போதும் டெல்லியை கண்டு அஞ்சிக்கொண்டிருக்கிறது. பிரதமர் தமிழகம் வந்தால் அதிமுக தலைமையிடம் அனுமதி வாங்கி காத்திருந்து சந்தித்து சென்ற காலம் போய், பிரதமரை வரவேற்க ஒருவரும், வழியனுப்ப ஒருவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
   இவர்களா புரட்சி தலைவர் உருவாக்கிய கழகத்தின் தலைவர்கள்? இதுவா அவர் காண்பித்த வழி? இதனால் யாருக்கு பலன்? EPS க்கும், OPS க்கும் என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அனால் அந்த பாம்பு இவர்களை ஒரு நாள் விழுங்கி அதிமுக வையும், தமிழகத்தையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்பது இவர்களுக்கு இன்னும் புலப்படவில்லை. இவர்களின் சுய லாபத்திற்காக அதிமுக எனும் மகத்தான கழகத்தை அழிவு பாதைக்கு அழைத்து செல்கின்றனர். இவர்களை போன்று மத்திய அரசின் அடிமைகளாக இருக்கும் தலைமையை வேரறுத்து தொண்டர்களை நல்லதொரு பாதையில் அழைத்து செல்ல வேண்டுமென்றால், தொண்டர்கள் தினமும் இதனை பற்றி கவலை படுவதால் எதுவும் நடந்து விடாது. ஒன்றுபட வேண்டும். தொண்டர்கள் ஒன்றுபட்டு ஒரு தலைமை உருக்க வேண்டும்.
  நாளைய எதிர்காலம் தொண்டர்கள் கையில்தான் உள்ளது. அனைத்து தொண்டர்களும் தங்களுக்கான உறுப்பினர் அட்டையை பெற்று சரியான தலைமையை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும். தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் தலைமையே, புரட்சி தலைவர் வழி நடத்திய கழகத்தின் உண்மையான தலைமை. ஏதோ நான்கு பேர் சேர்ந்து கழக நிர்வாகிகள் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கும் தலைமையெல்லாம், டெல்லிக்கு தலையாட்டும் தலைமையே.    

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

அதிமுக தலைமை என்ன முடிவெடுக்கிறது என்று டெல்லி ஏங்கிய காலம் எங்கே போனது?

      புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் காலங்களில் டெல்லியில் பிரதமர் முதல் பிற அமைச்சர்கள் வரை அதிமுக தலைமை என்ன முடிவெடுக்கும் என்று காத்துக்கொண்டிருப்பர். மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்த காலகட்டம், ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தார். எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்திற்கு தேவையான அனைத்தையும் கேட்டு பெற்று கொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் மத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தது.
     அப்படி ஒரு சூழலில் எம்.ஜி.ஆர். மன்மோகன்சிங் சந்திப்பு நிகழ்ந்தது. தமிழகத்திற்கு வரவேண்டிய நிதிகளை வளர்ச்சி திட்டங்களுக்காக புரட்சி தலைவர் மன்மோகன்சிங் அவர்களிடம் கேட்டபோது, "கடும் நிதிநெருக்கடியில் மத்திய அரசு உள்ளது. நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி தர முடியாது" என்று மன்மோகன்சிங் கூறியதை கேட்டதும் கோபத்தில் எம்.ஜி.ஆர்.அவர்கள் எழுந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் பிரதமர் ராஜீவகாந்தி அவர்களிடம் இருந்து மன்மோகன்சிங்கிற்கு ஒரு உத்தரவு. எம்.ஜி.ஆர். கேட்பதையெல்லாம் கொடுத்து விடுங்கள் என்று. முடியாது என்று சொன்ன மன்மோகன்சிங் ஐ பதற வைத்தார் புரட்சி தலைவர். 
    அம்மா அவர்களின் காலகட்டங்களிலும் இது போன்று மத்திய அரசை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் இப்போது இருக்கும் அதிமுகவின் தலைமை ஊழல் வழக்குகளுக்கும், ரெய்டுகளுக்கும் பயந்து, எப்போதும் டெல்லியை கண்டு அஞ்சிக்கொண்டிருக்கிறது. பிரதமர் தமிழகம் வந்தால் அதிமுக தலைமையிடம் அனுமதி வாங்கி காத்திருந்து சந்தித்து சென்ற காலம் போய், பிரதமரை வரவேற்க ஒருவரும், வழியனுப்ப ஒருவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
   இவர்களா புரட்சி தலைவர் உருவாக்கிய கழகத்தின் தலைவர்கள்? இதுவா அவர் காண்பித்த வழி? இதனால் யாருக்கு பலன்? EPS க்கும், OPS க்கும் என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அனால் அந்த பாம்பு இவர்களை ஒரு நாள் விழுங்கி அதிமுக வையும், தமிழகத்தையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்பது இவர்களுக்கு இன்னும் புலப்படவில்லை. இவர்களின் சுய லாபத்திற்காக அதிமுக எனும் மகத்தான கழகத்தை அழிவு பாதைக்கு அழைத்து செல்கின்றனர். இவர்களை போன்று மத்திய அரசின் அடிமைகளாக இருக்கும் தலைமையை வேரறுத்து தொண்டர்களை நல்லதொரு பாதையில் அழைத்து செல்ல வேண்டுமென்றால், தொண்டர்கள் தினமும் இதனை பற்றி கவலை படுவதால் எதுவும் நடந்து விடாது. ஒன்றுபட வேண்டும். தொண்டர்கள் ஒன்றுபட்டு ஒரு தலைமை உருக்க வேண்டும்.
  நாளைய எதிர்காலம் தொண்டர்கள் கையில்தான் உள்ளது. அனைத்து தொண்டர்களும் தங்களுக்கான உறுப்பினர் அட்டையை பெற்று சரியான தலைமையை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும். தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் தலைமையே, புரட்சி தலைவர் வழி நடத்திய கழகத்தின் உண்மையான தலைமை. ஏதோ நான்கு பேர் சேர்ந்து கழக நிர்வாகிகள் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கும் தலைமையெல்லாம், டெல்லிக்கு தலையாட்டும் தலைமையே.    

கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

நீதிமன்ற தீர்ப்பு & தேர்தல் ஆணையத்தின் மீது அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கையில்லை


தேர்தல் ஆணையத்தின் மீது ஒரு நம்பிக்கை என்பது அதிமுக தொண்டர்கள் இடத்தில் இல்லை . பி ஜே பி விருப்பத்திற்கு ஏற்ப தான் தேர்தல் ஆணையம் தங்கள் முடிவுகளை எடுக்கிறார்கள் .ஓ பி எஸ் பொறுத்தவரைக்கும் இந்த இரட்டை தலைமை தொடர வேண்டும் துன்று நினைத்து கொண்டிருக்கிறார் .
இ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் இருவருமே சாதிய அரசியலை கையில் எடுக்கிறார்கள் . புரட்சித்தலைவர் காலத்தில் அந்த சாதிய அரசியல் கிடையாது .மற்ற சமூகத்தினர் அதிகமாக இருக்கின்ற இடங்களில் கூட ஒரு சின்ன சமுதாயத்தினர் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும் .அவர்களும் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் .சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டதுதான் அண்ணா தி.மு.க.ஆனால் இன்றைக்கு இ பி எஸ் அவர்கள் தான் சார்ந்த சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்று நினைக்கிறார் .அதே போல ஓ பி எஸ் ,சசிகலா ,தினகரன் போன்றோர் அவர்கள் சார்ந்த சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் . கே பி முன்னுசாமி அவர்கள் தான் சார்ந்த சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.இவர்கள் அனைவருமே ராமதாஸ் ஆக வேண்டும் என்று முயற்சிக்கிறார்களே ஒழிய இன்னொரு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி வழியிலே அண்ணா தி மு க என்றொரு மாபெரும் இயக்கம் தொண்டர்களால் ஒரு தலைமை உருவாக்கப்பட்டு அந்த தலைமை வழிநடத்தப்பட வேண்டும் என்கின்ற முடிவில் இவர்கள் இல்லை .
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

எம்.ஜி.ஆர் காலத்து தொண்டர்களை ஏமாற்ற நினைக்காதீர்கள் !


சி.வி .ஷண்முகம் டெல்லியில் ஒரு பேட்டியில். எப்படி முஸ்லிம்களுக்கு புனிதஸ்தலம் இருக்கிறதோ ,கிறித்தவர்களுக்கு புனிதஸ்தலம் இருக்கிறதோ ,ஹிந்துக்களுக்கு ஒரு புனித ஸ்தலம் இருக்க, அதுபோல அண்ணா தி மு க தொண்டனுக்கு தலைமைகழகம் என்று அவர் கூறியது மிக சரி தான்.
அதே சமயம் எப்படி பைபிளோ ,எப்படி குரானோ அதுபோல அண்ணா தி மு க தொண்டனுக்கு புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் எழுதி வைத்த அண்ணா தி மு க கட்சியினுடைய விதிகள் ,அதை மட்டும் ஏன் வந்து இவர்கள் அந்த வழியில் நடப்பதற்கு இவர்கள் ஏற்று கொள்வதற்கு இவர்கள் மறுப்பதற்கு காரணம் என்ன ?அப்போ அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் இல்லையா ? ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் .
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

திமுக & பாஜக மீதான எதிர்ப்பு அரசியலை கட்டமைக்கும் வலிமையான ஒற்றை தலைமை தேவை !


ஓராண்டு திமுக ஆட்சி வெறும் விளம்பரத்திலேயே போய்விட்டது. திரு ஸ்டாலின் அவர்கள் பேருந்தில் ஏறிக் கண்காணிப்பது, தீயணைப்பு அலுவலகம் சென்று சாதாரண அதிகாரியிடம் விசாரிப்பது, நரிக்குறவர் வீட்டிற்குச் சென்று புரட்சித்தலைவரைப் போன்று ஆகவேண்டும் என்று நினைப்பது. ஆனால் எந்தக்காலத்திலும் திரு ஸ்டாலின் அவர்கள் புரட்சித்தலைவரைப் போன்று ஆகமுடியாது.
பிரசாந்த் கிஷோர் கொடுத்த விளம்பரத்தில் தான் இந்த ஓராண்டு ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அதிலும் சொல்வது போன்று ஒரு சிறப்பும் இல்லை தொழில்துறைகள் எல்லாம் மிகவும் மோசமாக உள்ளது இவை எதையும் கண்டுகொள்ளாமல் நவீன முறையில் ஊழல் செய்துகொண்டு நல்லவர் போல் தன்னை காட்டிக்கொள்கின்றனர்.அதனால் மக்களுக்கு இந்த திமுகவின் ஓராண்டு ஆட்சி ஏமாற்றமாகவே உள்ளது.
இவர்களுக்குச் சரியான ஒரு எதிர் அணி உருவாகவேண்டும் அதற்கு அதிமுகவில் நல்ல கட்டமைப்பு வேண்டும்.சசிகலாவின் முயற்சிகளும் எந்த பலனும் அளிக்காது. EPS & OPS அவர்களும் எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் உள்ளனர். எனவே புரட்சித்தலைவர் கால தொண்டர்கள் ஒருங்கிணைந்து வலிமையான ஒற்றைத்தலைமையை உருவாக்கவேண்டும். அதுவும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

பொதுவெளியில் ஆளுநர் குற்றச்சாட்டு சரியா?


தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு பிராண்ட் குறிப்பிட்ட தவற்றினை செய்கிறார்கள் என்பதனை ஆளுநர் மத்திய அரசாங்கத்தின் உள்துறைக்கு அறிக்கையாகச் சொல்லலாம் அதுவும் மாநில அரசின் முதலமைச்சருக்கோ உள்துறைக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ தெரிவித்து அவர்களிடம் விளக்கம் கேட்டு அது தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக் கூறலாம் ஆனால் அதை எல்லாம் கடந்து பொது வெளியில் பேசுவது ஏற்புடையது அல்ல வழக்கமாக ஆளுநர்கள் அவ்வாறு பேசுவது இல்லை . இருப்பினும் சட்டம் ஒழுங்கு என்பது ஒரு தீவிரவாத பிரச்சனையாகத் தமிழ்நாட்டில் கருதப்படும் நிலையில் இது ஒரு உணர்திறன் கொண்ட ஒரு கருத்து என்பதால் பொதுவெளியில் ஆளுநர் அதற்குரிய ஆதாரங்களை வெளியிட்டுப் பேசவேண்டும் , அல்லது தமிழ்நாட்டு அரசாங்கம் ஆளுநர் சொல்வது தவறு என்பதற்குக் கடுமையான எதிர் வினையாற்ற வேண்டும்
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

திமுக அரசு பொய் வாக்குறுதிகளை கொடுத்து குடும்பத்தலைவிகளை ஏமாற்றிவிட்டார்களா ?


தி.மு.க.ஆட்சியில் சமீபத்தில் நடந்த தேர் விபத்தில் 11பேர் இறந்ததற்கு அரசு அதிகாரிகள் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளின் அலட்சியம் மட்டுமே காரணமாக இருக்க முடியும் அதற்கு ரூபாய் 5லட்சம் கொடுப்பது சரியான தீர்வு அல்ல மேலும் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க அதிகாரிகள் அவர்களது பணியில் கவனமாக இருந்தால் போதும் மற்றும் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்த மகளிருக்கான ரூபாய் 1000 தற்பொழுது வரை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதன் விளைவு குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லை எனவே முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் ரூபாய்1000 விநியோகிப்பதனால் மட்டுமே பெண்களுக்கு வீட்டில் மதிப்பு ஆனால் முதலமைச்சர் அவர்கள் இதனை எல்லாம் தவிர்த்துவிட்டு ECR சாலைக்குத் திரு. கலைஞர் கருணாநிதி சாலை எனப் பெயர்மாற்றம் செய்வதில் முனைப்பு கட்டுவது கண்டிக்கத்தக்கது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

மாவட்டச் செயலாளர்களுக்கே மீண்டும் வாய்ப்பு! கண்துடைப்பா அதிமுக அமைப்பு தேர்தல்?


ஏற்கனவே பதவியில் இருக்கும் நிர்வாகிகளுக்கே மீண்டும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளை வழங்கி வருவதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அக்கட்சி மாவட்டச் செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படாமலே குறுநில மன்னர்கள் போல் அப்பதவியில் நீடிப்பார்கள் என்றும் அவர்களை மீறி மாவட்டத்தில் எந்த கட்சி பதவிக்கும், யாரும் எளிதாக வந்து விட முடியாது என்ற குற்றச்சாட்டும் அக்கட்சியில் நிரந்தரமாகவே உள்ளது.
அதற்கு நேர்மாறாக அதிமுகவில் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த வரை மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் எந்நேரத்திலும் மாற்றப்படலாம், அவர்கள் இடத்திற்கு யார் வேண்டுமென்றாலும் வரலாம் என்ற நிலை இருந்தது.
பதவிப் பறிக்கப்படப் போகிறவர்கள், புதிதாக அவர்கள் இடத்திற்கு வரப்போகிறவர்கள் யார் என்று யாராலும் எளிதாக கணித்து விட முடியாது. அதுபோல், சரியாக கட்சிப் பணியாற்றவில்லை, தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் ஏதாவது வந்தால், உடனடியாக மாவட்டச் செயலாளர்களை தயவு தாட்சணியம் இன்றி பதவியில் இருந்து தூக்கி எறியவும் ஜெயலலிதா தயங்கமாட்டார் என்பதாலே அதிமுகவில் கடைநிலை நிர்வாகி கூட திடீரென்று மாவட்டச் செயலாளர், எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களாக்கப்பட்ட வரலாறு அடிக்கடி நிகழும்.
அதனால், கட்சியில் மற்ற நிர்வாகிகள் ஜெயலலிதா கவனத்தை ஈர்க்க போட்டிப்போட்டு கட்சிப் பணியாற்றினர். திடீர் உயர்வுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பால் மாற்று கட்சியினரும் அதிமுகவை நோக்கி படையெடுத்தனர். அப்படி சாதாரணமாக இருந்து ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான் தற்போது அதிமுகவின் தலைமை பொறுப்பு முதல் மாவட்ட செயலாளர்கள் வரை அதிகார மையங்களாக இயங்குகின்றனர்.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர்கள் தங்கள் வந்தவழியை மறந்து, தற்போது திமுகவை போல் பெயரளவுக்கு கட்சித் தேர்லை நடத்தி மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பதவிகளுக்கு ஏற்கனவே இருந்து அதிகாரம் செலுத்தியவர்களுக்கு மீண்டும் அப்பதவிகளை தாரை வார்த்து கொடுத்து வருவதாக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:
‘ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தற்போது அதிமுக அமைப்பு தேர்தல் தமிழகம் முழுவதும் மும்முரமாக நடக்கிறது. மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பதவிக்கான உட்கட்சி தேர்தலில் ஏற்கனவே அப்பதவிகளில் இருந்தவர்களே மீண்டும் அப்பதவிகளுக்கு விருப்பமனு கொடுக்கின்றனர். அவர்களை எதிர்த்து வேறு யாரும் பெரும்பாலும் விருப்பமனு கொடுக்கவில்லை. மீறி யாரும் விருப்பமனு கொடுத்தால் கட்சியில் ஓரங்கட்டப்படுவோம் என்பதால் அவர்களால் விருப்பமனு கொடுக்க முடியவில்லை.
ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சிலர் போட்டி விருப்பமனு கொடுத்துள்ளனர். அவர்களை வாபஸ் வாங்க கட்சி மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதுபோல் மற்ற மாவட்ட நிர்வாகிகள் பதவியில் இருப்பவர்களும் அதே நிலையில் மீண்டும் தொடர வேண்டும் என்று கூறப்பட்டதால் அந்த பதவிகளுக்கும் பெரியளவிற்கு யாரும் போட்டியிட விருப்ப மனு கொடுக்கவில்லை.
அதனால், கட்சி அமைப்பு ரீதியான தேர்தல் அதிமுகவில் பெயரளவுக்கே நடத்தப்படுகிறது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பாவை மீறி யாரும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு விருப்பமனு வழங்கவில்லை.
புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமாரை மீறி யாரும் விருப்பமனு செய்யவில்லை. ஆர்பி.உதயகுமார் ஏற்கனவே ஜெ., பேரவை மாநில செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது. செல்லூர் ராஜூவை எதிர்த்து நேற்று மதியம் வரை யாரும் விருப்பமனு வழங்கவில்லை. அதன்பிறகே முன்னாள் எம்எல்ஏ-க்கள் ஆர்.ராஜாங்கம், எஸ்எஸ்.சரவணன் உள்ளிட்ட நான்கு பேர் கடும் எதிர்ப்பையும் மீறி செல்லூர் ராஜூவுக்கு எதிராக மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு வழங்கினர்.
கட்சித் தலைமை ஆசி செல்லூர் கே.ராஜூவுக்கு இருப்பதால் அவரே மீண்டும் மாநகர மாவட்டச் செயலாளராகும் வாய்ப்புதான் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக முன்பு இருந்த முன்னாள் அமைச்சர் ராஜநே்திரன்தான் மீண்டும் மாவட்டச் செயலாளராகி இருக்கிறார். விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த ரவிச்சந்திரன் மீண்டும் மாவட்டச் செயலாளராக தேர்வாகி இருக்கிறார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக 15 ஆண்டிற்கு மேலாக இருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீண்டும் தேர்வாகி இருக்கிறார். திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் தேர்வாகியிருக்கிறார். இருவரும் மாநில பதவியில் வேறு இருக்கிறார்கள். அப்படியிருந்தும் மாவட்டச் செயலாளர் பதவியை இருவருக்கும் விட்டுக்கொடுக்க மனமில்லை.
தேனி மாவட்டச் செயலாளர் பதவிக்கு எஸ்பிஎம்.சையதுகான் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து 8 பேர் விருப்பமனு கொடுத்திருந்தாலும் பேச்சுவார்தை செய்து மீண்டும் சையதுகானையை மாவட்டச் செயலாளராக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டச் செயலாளர் பதவிக்கு மீண்டும் செந்தில்நாதன் விருப்பமனு கொடுத்துள்ளார். அவரை எதிர்த்து 4 பேர் விருப்பமனு வழங்கியிருந்தாலும் செந்தில்நாதன்தான் மீண்டும் மாவட்டச் செயலாளராக வருவார்.

இப்படி தமிழகம் முழுவதும் பெரும்பாலும் ஏற்கனவே இருக்கும் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளே மீண்டும் தொடர வைக்க கட்சித் தலைமை திட்டமிட்டு இருப்பதால், ஜெயலலிதாவை போல் கட்சி அமைப்பில் புதியவர்களை கொண்டு வந்து கட்சியை வளர்க்க, தற்போதுள்ள கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்காததாலே நிர்வாகிகள் பாஜக, திமுக பக்கம் சென்று கொண்டிருக்கின்றனர். இப்படியே போனால் அதிமுக தேய்ந்து கொண்டே தான் போகும், ’’ என்றனர்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

ஆளுநர் அனுமதி மறுப்பு சட்ட நெருக்கடி என்பது வெளிப்படையாக தெரிகிறது


சட்டமன்றத்தில் துணை வேந்தர்களை நியமிக்கிற அதிகாரம் மாநில அரசாங்கத்திற்கு தான் உள்ளது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் சட்டமாக்கப்பட வேண்டுமென்றால் ஆளுநர் கையெழுத்திட்டு அனுமதி கொடுத்தால் மட்டுமே முடியும். 8 கோடி மக்களால் 10 கோடி ஜனத்தொகை உள்ள தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் இயற்றப்படுகிற எந்த சட்டத்திற்கும் இதுவரை கிட்டத்தட்ட 19 மசோதாக்களுக்கு ஆளுநர் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து எதற்கும் கையெழுத்திடவில்லை இந்த மசோதாவிற்கு மட்டும் எப்படி அவர் கையெழுத்திடுவார், இது ஒரு அரசியலமைப்புச் சட்ட நெருக்கடி என்பது வெளிப்படையாக தெரிகிறது.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on:

அவர்களின் சுயநலத்திற்காக அச்சாணி இல்லாத தேர் போல தொண்டர்களை வழிநடத்துகிறார்கள்


அம்மா அவர்களின் மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாகத் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பொதுவெளியில் திருமதி. சசிகலா அவர்கள் மீது சில குற்றச்சாட்டுகளை எழுப்பியிருக்கிறார் பின்பு அவரே ஆறுமுகசாமி ஆணையத்தில் அதற்கு நேர் மாறாகச் செய்த சில விஷயங்கள் திரு.ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் எந்த அளவு தரம் தாழ்ந்து இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய சுயநலத்திற்காக மட்டுமே அ.தி.மு.க. தொண்டர்களையும் அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தையும் பயன்படுத்திக்கொண்டார் என்பதைத் தொண்டர்கள் தற்பொழுது உணர்ந்திருக்கிறார்கள். அதேபோல் இதில் தனக்கும் தொடர்பு உள்ளது என்று திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திரு. வேலுமணி அவர்களும் கூறுகின்றனர் எனவே இச்சம்பவத்தில் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்குத் தொடர்பு உள்ளது என்று உறுதியானாலும் கூட திருமதி.சசிகலா அவர்கள் புனிதமானவர் என்று அவரை ஏற்றுக்கொள்ளத் தொண்டர்கள் தயாராக இல்லை எனவே இவர்கள் யாரும் சரியான தலைவர்களாக அ.தி.மு.க. விருக்கு இல்லை அச்சாணி இல்லாத தேராக அ.தி.மு.க. தத்தளித்துக் கொண்டிருக்கிறது ஆகையால் தொண்டர்களால் ஒரு தலைமை தேர்ந்தெடுக்கும் பொது தான் வலிமையான தலைமை உருவாகும்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: