ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையில் விதிகள் மாறுகிறதா? கோட்டையை நெருக்கிய கோரிக்கைகள்!


மாற்றுத்திறனாளிகளின், குடும்ப தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள், தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டு உள்ளன.

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான, மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என்றும் அரசு அறிவித்திருப்பதால், அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் உயிரிழந்தவர்கள், தகுதியற்றவர்கள் என ஒவ்வொன்றாக கண்டறியப்பட்டு, இறுதியில், 8,833 பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. அதேபோல, விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள் குறித்து, பெண்களிடம் அது சரியான தகவலா? என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த தகவல் உறுதியான விண்ணப்பதாரர்களின் வங்கிக்கணக்குகளில் இந்த மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தவிர, பல மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்களுக்கு இந்த மாதமும் பணம் வராத நிலையில், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதில், “வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இது குறித்த விசாரணைக்கு தங்களைத் தொடர்பு கொள்ளும்போது, உரிய தகவல்களை தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் தங்களது மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும்” என்று அந்த எஸ்எம்எஸ்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.அரசின் நடவடிக்கைகள் இவ்வாறாக இருந்த்லும், ஒருசாரார் வருத்தத்தில் உள்ளதாகவே செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதில், முக்கியமானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.. மாற்றுத்திறனாளிகள் பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் அதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லையாம்..

காரணம், இவர்கள் எல்லாருமே 4 சக்கர வாகனத்தை வைத்திருப்பதாக கூறி, மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 2 சக்கர வாகனங்களில் அவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, வாகனத்தின் 2 பக்கமும், கூடுதலாக 2 சக்கரங்கள் இணைக்கப்படும்.. அதனால், இதனை 4 சக்கர வாகனங்களாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் நிலையில், அதனை நிஜமாகவே கார், வேன் போல, “4 சக்கர வாகனம்” என்று கருதி, மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டுவிட்டதாம்.மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவியருக்கு, மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டதை கண்டித்து, 23 மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.. அந்தவகையில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் ஜான்சிராணி தலைமை வகித்தார். சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் கோரிக்கை மனுவையும் அளித்தார்.
Share on:

ஆளுநர் 3 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்? மசோதக்களை தாமதம் செய்த ஆர்.என். ரவிக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்!


“இந்த மசோதாக்கள் ஜனவரி 2020 முதல் நிலுவையில் உள்ளன. நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகு ஆளுநர் முடிவெடுத்துள்ளார். ஆளுநர் மூன்று ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? உச்சநீதிமன்றத்தை அணுகும் வரை ஆளுநர் ஏன் காத்திருக்க வேண்டும்?” என தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதைக் கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றாம் ஆளுநர்களின் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்ட அரசியலமைப்பு செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது என்பது பிரச்சினை என்று கூறியது.

மேலும், “இந்த மசோதாக்கள் ஜனவரி 2020 முதல் நிலுவையில் உள்ளன. நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகு ஆளுநர் முடிவெடுத்துள்ளார். ஆளுநர் மூன்று ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? உச்சநீதிமன்றத்தை அணுகும் வரை ஆளுநர் ஏன் காத்திருக்க வேண்டும்?” என தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்ததாக தமிழக அரசு தொடர்ந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்கள் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டதையடுத்து, மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் செய்த கால தாமதம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஆளுநர் மாளிகை அலுவலகம் சார்பில் அட்டர்னி ஜெனரல் (ஏஜி) ஆர்.வெங்கடரமணி ஆஜரானார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பார்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, “மீண்டும் நிறைவேற்றப்பட்டு மசோதாக்கள் குறித்து ஆளுநர் முடிவெடுப்பதற்காக நாம் காத்திருப்போம். அதுவரை விசாரணையை ஒத்திவைபோம்.” என்று கூறினர்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதைக் கவனத்தில் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ஆளுநர்களின் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்ட அரசியலமைப்பு செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் தாமதம் உள்ளது என்பது பிரச்சினை என்று கூறியது.

ஜனவரி 2020 முதல் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் காலதாமதம் செய்வது குறித்த கவலைகளை எழுப்பி, அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணியிடம் தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார். நவம்பர் 10-ம் தேதி அன்று நீதிமன்றத்தின் நோட்டீசுக்குப் பின் நேரம் குறித்த சந்தேகங்களை எழுப்பினார்.

“இந்த மசோதாக்கள் ஜனவரி 2020 முதல் நிலுவையில் உள்ளன. நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகு ஆளுநர் முடிவெடுத்துள்ளார். ஆளுநர் மூன்று ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? உச்சநீதிமன்றத்தை அணுகும் வரை ஆளுநர் ஏன் காத்திருக்க வேண்டும்?” என தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

தற்போதைய கவர்னர் நவம்பர் 18, 2021-ம் தேதி பொறுப்பேற்றார், பல மசோதாக்களில் பல சிக்கல்கள் இருக்கிறது எனபதால் இந்த கால தாமதத்தை ஆளுநருக்குக் காரணமாகக் கூற முடியாது என்றும் அட்டர்னி ஜெனரல் வாதத்துக்கு உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.

தமிழ்நாடு அரசு நடத்தும் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரங்களைப் பறிக்கும் மசோதாக்களில் ஒன்றைப் பற்றி மூத்த வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியுள்ளதால், தற்போது 5 மசோதாக்கள் மட்டுமே ஆளுநரிடம் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியது.

“மசோதாக்கல் மீண்டும் நிறைவேற்றப்பட்டவுடன், அந்த மசோதாக்கள் நிதி மசோதாவின் அதே நிலைப்பாட்டில் உள்ளன” என்று உச்ச நீதிமன்றம் அமர்வு கூறியது, “மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாக்கள் குறித்து ஆளுநர் புதிய முடிவுகளை எடுக்கட்டும்” என்று கூறினார்.

அரசியலமைப்பின் 200 வது பிரிவைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, ஆளுநர்கள் ஒப்புதல் வழங்கலாம்/நிறுத்தலாம் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மசோதாவை அனுப்பி வைக்கலாம் என்றும் அவர் மசோதாவை சபையின் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பலாம் என்றும் கூறியது.

மசோதாக்களை மீண்டும் சட்டசபைக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ அனுப்பாமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பத என்று கேட்டதுடன், அது பிரச்சினையைப் பிரதிபலிக்கும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.

ஆளுநர் ஆர்.என். ரவி 10 மசோதாக்களை அனுப்பிய சில நாட்களுக்குப் பிறகு, சனிக்கிழமை (நவம்பர் 18) கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் ரவி நவம்பர் 13-ம் தேதி ரவி திருப்பி அனுப்பியதை அடுத்து சட்டம், விவசாயம் மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு சட்டப்பேர்வையால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தமிழக ஆளுநர் தாமதம் செய்தது “தீவிரமான கவலைக்குரிய விஷயம்” என்று நவம்பர் 10-ம் தேதி வழக்கு விசாரணையின் போது கூறிய உச்ச நீதிமன்றம், ராஜ் பவன் 12 மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டிய மாநில அரசின் மனு மீது மத்திய அரசிடம் பதில் கேட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக வேண்டும் என்று கூறியது.

மேலும், “மனுவில் எழுப்பப்பட்டுள்ள விஷயங்கள் தீவிரமான கவலையை எழுப்புகின்றன. இந்த நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட அறிக்கைகளின்படி, 200வது பிரிவின் கீழ் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட 12 மசோதாக்கள் இல்லை என்று தெரிகிறது. வழக்கு தொடர அனுமதி வழங்குதல், கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் பொதுப்பணித்துறை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல் போன்ற பிற விஷயங்கள் நிலுவையில் உள்ளன” என்று உச்சநீதிமன்றம் கூறியது.

“ஆளுநர் ஆணைகளில் கையொப்பமிடாமல், நாள்தோறும் கோப்புகள், பணி நியமன ஆணைகள், பணி நியமன ஆணைகளுக்கு ஒப்புதல் அளித்தல், ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் வழங்குதல், உச்ச நீதிமன்றத்தால் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட மசோதாக்கள் தமிழக சட்டப்பேவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆளுநர் சட்டப்பேரவை மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் முடக்கி, அரசு நிர்வாகத்துக்கு ஒத்துழைக்காமல், விரோதப் போக்கை உருவாக்குகிறது” என தமிழக அரசு மனுவில் குற்றம்சாட்டியுள்ளது.

“தமிழ்நாடு ஆளுநர்/முதல் பிரதிவாதியின் அரசியல் சாசன ஆணையின் செயலற்ற தன்மை, புறக்கணிப்பு, தாமதம் மற்றும் இணங்கத் தவறுதல், தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அவரது கையொப்பத்திற்காக மாநில அரசு அனுப்பிய கோப்புகள், அவருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களின் பரிசீலனை செய்யாதவை மற்றும் ஒப்புதல் அளிக்காதவை மற்றும் பரிசீலிக்கப்படாதவை என்று அறிவிக்க வேண்டும். இது அரசு ஆணைகள் மற்றும் கொள்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, நியாயமற்றது, மேலும் தவறாக அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
Share on:

இலங்கை ராணுவம் அத்துமீறல்!



எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு விசை படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்களை, எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதேபோல அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்திய 2 விசை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியது.

தமிழகக் கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவு சென்றால் தான் மீன்கள் கிடைக்கும். அவ்வாறு மீன்கள் கிடைக்கும் பகுதிகள் அனைத்தும் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகள் ஆகும். அங்கு சென்று மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது. அதை மதிக்காமல் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும் கொடுமைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்.

மீனவர் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை தீர்ப்பதற்காக இந்தியா – இலங்கை கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்குடன் இந்தியா – இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி சாதகமான முடிவை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Share on:

21 அதிகாரிகள் மீது நடவடிக்கை



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இதன் பின்னர், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை அரசு ஏற்று கொண்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியராக இருந்த வி.வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி.-யாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ், மாவட்ட எஸ்.பி.யாக இருந்த கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறையை சேர்ந்த 17 பேர், வருவாய் துறையை சேர்ந்த 3 பேர் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன? ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது மற்ற காவல் துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா என கேள்வி எழுப்பினர்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் இன்னும் பணியில் நீடிக்கிறார்களா அல்லது ஓய்வு பெற்று விட்டார்கள் என்பதும் தெரியவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அரசு தரப்பு தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்று இருந்த காவல்துறை அதிகாரி சைலேஷ்குமார் யாதவ் ஏற்கனவே ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் பிரச்சனை ஏற்பட்டபோது திறமையாக கையாண்டு ஐகோர்ட் சுமுகமாக செயல்பட செய்தவர் என்று தெரிவித்து, அவர் எப்படி இந்த குற்றச்சாட்டுக்குள் ஆளானார் என்று கேள்வி எழுப்பினார்.

தற்போது நடவடிக்கை உள்ளாகியுள்ள 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? துப்பாக்கி சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Share on:

அமைதியான வழியில் போராடிய விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது!


‘திருவண்ணாமலையில் தன்னுடைய நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த கூடாது என்று அமைதியான வழியில் போராடிய பச்சயப்பன் என்ற விவசாயியை பாலியல் குற்றவாளி, கள்ளச்சாராய குற்றவாளி, விபச்சார தொழில் குற்றவாளி போன்றவர்களை கைது செய்யும் குண்டர் சட்டத்தில் திமுக அரசு கைது செய்துள்ளது. திருவண்ணாமலையில் போராட்டம் செய்தவரை அவரது குடும்பம் எளிதாக சந்திக்க கூடாது என்பதற்காக மதுரை சிறையில் கொண்டு போய் அடைத்துள்ளார்கள்.

விவசாயிகள் மீது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஏன் இந்த வன்மம்? தமிழ்நாட்டின் சர்வாதிகாரி என்ற நினைப்பு உங்கள் தலைக்கு ஏறி விட்டதா?

அரசாங்கத்தை எதிர்த்து அமைதியாக போராட்டம் செய்யும் விவசாயிகள் குண்டர்களா? இது தான் உங்கள் கட்சி வாய் கிழிய பேசும் சமூக நீதியா?’ என்று அறப்போர் இயக்கம் கேள்வியெழுப்பியுள்ளதை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்க்கு ஆதரவாக குரல்கொடுக்க தொடங்கியுள்ளனர்.
Share on:

மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்


உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார். அவரதுக்கு வயது 102. சளி, காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சங்கரய்யா இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகவும், சுதந்திரத்துக்குப் பின்பு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர் சங்கரய்யா

பொது உடமை இயக்கத்தை வலுப்படுத்திய சங்கரய்யாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் தமிழர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.

சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க கையெழுத்து போட ஆளுநரின் செயலைக் கண்டித்து பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்தார் பொன்முடி. இந்த நிலையில் சங்கரய்யாவின் மறைவு அரசியல் கட்சியினரிடையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சங்கரய்யாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Share on:

Continue Reading

தீபாவளியிலும் தீண்டாமை


தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வாங்கிக்கொண்டு பைக்கில் சென்ற இளைஞரை வழிமறித்து பீர் பாட்டில் கொண்ட தலையில் கொலைவெறியுடன் ஆதிக்க சாதியினர் தாக்கிய சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கைவயல் தொடங்கி தொடர்ந்து சாதி வெறி கொடூரங்கள், தீண்டாமை குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் கறம்பக்குடி அருகே தீபாவளி பண்டிகை அன்று கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. கறம்பக்குடி அடுத்த மோலுடையான்பட்டி‌யில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் பட்டாசு வாங்கிச் சென்றபோது சாதி வெறியர்கள் அவரை வழிமறித்து பாட்டிலால் மண்டையை உடைத்து இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் அதிர்ச்சித் தகவலை தெரிவித்து உள்ளது.

கீழ்தொண்டைமான் கிராமத்தில் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த சாரதி மற்றும் அவர்களின் கூட்டாளிகள் சேர்ந்து வழிமறித்து இளைஞர் பிரகாஷை சாதிய தீண்டாமை வார்த்தையில் கொச்சையாக பேசி பீர் பாட்டிலில் 15 முறை தலையில் கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்

சாதி மன நோய் பிடித்த குற்றவாளிகளை SC / ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து உரிய நீதி வழங்கிட வேண்டும். தென் மாவட்டங்களில் தொடரும் பட்டியல் மக்களுக்கு எதிரான சாதிய தீண்டாமை வன்முறையை தடுக்க தமிழக அரசு, முதலமைச்சர் முக ஸ்டாலின், சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டு உள்ளது.
Share on:

பல்வீர் சிங்கிற்கு நெருக்கடி.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு


பல்பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை தொடங்க சிபிசிஐடி போலீஸாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது
இந்த வழக்கு உயர்மட்ட விசாரணை குழுவின் பரிந்துரையின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
மேலும் அந்த காட்சிகளை வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பற்களை பிடுங்கிய போது சிசிடிவி செயல்படவில்லை. ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் உத்தரவின் பேரில் சிசிடிவி கேமரா அணைத்து வைக்கப்பட்டது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் இருந்தனர். இதனிடையே பல்வீர் சிங்ஸ ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) சிபிசிஐடி போலீஸார் கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் பல்வீர் சிங் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை தொடங்க சிபிசிஐடி போலீஸாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
Share on:

அமர் பிரசாத் ரெட்டி & கோவுக்கு 12 ஆயிரம் ‘பெனால்டி’!


அண்ணாமலை வீட்டுக்கு அருகே பாஜகவினர் அமைத்த கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் 12,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டு அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு 50 அடி உயரத்தில் பாஜக கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. இதற்கு அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் சென்று அந்த கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
பாஜக கொடிக் கம்பம் நடும் விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தனர்
இந்த நிலையில், கொடிக் கம்பம் சேதப்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அவரது ஜாமீன் மனுவில் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டிருந்தார். இந்த நிலையில், அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ் ஆஜராகி, அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் கொடிக்கம்பம் வைத்துள்ளனர்
சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் தலா 2,000 ரூபாய் வழங்க வேண்டும், மேலும், 2 வாரங்களுக்கு காலை, மாலை என 2 நேரங்களும் கானாத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து, அவர்கள் 6 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் 55 அடி உயரக் கம்பத்தில் கொடி கண்ணுக்கு தெரியாது. காக்கா, குருவி உட்கார மட்டுமே அந்தக் கொடிக் கம்பம் பயன்படும் எனத் தெரிவித்ததோடு மீண்டும் கொடிக் கம்பம் அமைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நிபந்தனை விதித்து அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கினார் நீதிபதி.
Share on:

எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கியது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்ய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தன்னைப் பற்றி தெரிவித்த கருத்துகள் தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிச்சாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியிலிருந்து கே.சி.பழனிச்சாமியை நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது.சென்னை உயர் நீதிமன்றம் இதையடுத்து நீதிபதி, கட்சியில் இருந்து கே.சி.பழனிச்சாமியை நீக்கி பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Share on: