திமுகவை எதிர்க்க எடப்பாடி உள்ளிட்ட அதிமுக சீனியர்கள் பயப்படுவதற்கு காரணம்!


திமுகவை எதிர்க்க எடப்பாடி உள்ளிட்ட அதிமுக சீனியர்கள் பயப்படுவதற்கு காரணம் அவர்கள் செய்த குற்றங்கள் தான் என்கிறார் அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன்.எப்போதெல்லாம் திமுக அரசை விமர்சிக்க நினைக்கிறார்களோ , அப்பொழுது அவர்கள் செய்த குற்றங்களான ஊழல்,ரெய்டு போன்றவற்றை கையிலெடுக்கிறார்,ஸ்டாலின் .சட்டசபையில் கொடநாடு வழக்கு என்று பேசியபோது எடப்பாடி வெளியேறியதால் அவரை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ களும் வெளிநடப்பு செய்தார்கள் .இதே போன்று இருக்கை பிரச்சனைக்காக மட்டும் எட்டு முறை வெளிநடப்பு செய்தது அதிமுக .

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இன்று எதிர்கட்சி வரிசையில் எம்.எல்.ஏ களாக அமர்ந்துஇருக்கிறார்கள்.அவர்கள் நினைத்தால் திமுகவின் முறைகேடு ,தவறுகளை வெளிக்கொண்டு வர முடியும் .ஆனால் தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பது போல் எதையும் பேசுவதில்லை. .உதயநிதியின் விளையாட்டுத்துறையில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன ,ஆனால் அதனை பற்றி பேசாமல் அமைச்சர் வேலுமணி “இலவச ஐ.பி.எல்.டிக்கெட் கேட்கிறார் , நினைத்தால் ஒரு ஸ்டேடியத்தையே விலைக்கு வாங்கலாம் ,ஓசி டிக்கெட் கேக்கிறாரே?” மக்கள் கேலி செய்கிறார்கள், என்கிறார் ஜெகதீஸ்வரன் .
Share on:

பாஜகவை எதிர்க்கக்கூடிய தலைமை தற்போதைய அதிமுகவில் யாருக்கும் இல்லை!


திரு .கே.சி.பழனிசாமி அவர்கள் zoom மூலமாக தொண்டர்களுடன் கலந்து கொண்ட கலந்துரையாடலின் பொழுது கூறியதாவது ,மக்களை போல கீழ்மட்டத்தில் ,கிளைஅளவில் உள்ள இருந்தும்,இருக்கின்றவர்கள் தான் அண்ணாதிமுக கட்சியை பாதுகாத்துக்கொண்டு இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் .மேலும் அவர் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றவர்கள் அனைவரும் திருடர்கள் என்றும் ,அவர்கள் குடும்பம் பிழைப்பதற்கும் ,அவர்களை பாதுகாத்து கொள்வதற்கும் .அவர்கள் பினாமி பிழைப்பதற்கும்,அவர்கள் கமிஷன் ஏஜென்ட் பணம் பார்ப்பதற்கும் தான் இது எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் .

மேலும் உரையாடலின் பொழுது இவர்கள் அனைவருமே மக்களிடமும் தொண்டர்களிடமும் நடித்து கொண்டு இருப்பதால் இவர்கள் பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு தைரியம் கிடையாது என்று கூறியுள்ளார் .அவருடைய உரையாடலின் போது தொண்டர் ஒருவரும் கோவமாக பாஜக இருக்கும் வரை நாம் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது என்று உறுதியாக கூறியுள்ளார் .இதிலிருந்து தொண்டர்கள் அனைவருக்கும் பாஜகவின் மேல் அதிகஅளவு வெறுப்பு உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
Share on:

தமிழகத்தில் சாதியா?கட்சியா? என்று வரும் பொழுது திராவிட கட்சிகளில் கட்சிதான் வென்று இருக்கிறதே தவிர சாதி வென்றதாக சரித்திரம் இல்லை



திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் புதியதலைமுறை தொலைக்காட்சியில் கலந்துகொண்டு நிருபரிடம் கலந்துரையாடிய பொழுது அவர் கூறியது ,தமிழ்நாட்டில் உள்ள சாதிக்கும் கட்சிக்கும் பார்க்கும் பொழுது வன்னியர் வாக்கு அன்னியர்க்கு இல்லை என்ற ராமசாமி படையாட்சி காலத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியை ராமதாஸ் அவர்கள் ஆரம்பித்த காலம் ,இப்பொழுது 2019-ல் கொங்கு பகுதியில் சிலிண்டர் சின்னத்தில் கொங்கு கட்சி ஆரம்பித்த காலம் ,தென்மாவட்டங்களில் முத்துராமலிங்க தேவர் போன்று இந்த காலகட்டங்களில் ஓர் emotional ஆக அது பயன்படுத்தப்பட்டு இருக்கிறதே ஒழிய ஒரு long term victory -அ கொடுத்ததில்லை என்று கூறியுள்ளார் .

மேலும் கலந்துரையாடலின் பொழுது கடைசியாக சாதியா ?கட்சியா ? என்று பார்க்கும் பொழுது திராவிட கட்சிகளில் கட்சி தான் வெற்றிபெற்று இருக்கிறதே தவிர சாதி வென்றதாக இதுவரை தமிழகத்தில் சரித்திரம் இல்லை என்றும் ,மேலும் சாதி தமிழகத்தில் வெற்றி பெறாது என்றும் கூறியுள்ளார் .
Share on:

சபரீசனோடு என்ன பேசினார் OPS ?



இம்முறை அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்திற்கு சீட் கொடுக்காவிட்டாலும் மறைமுகமாக திமுக மற்றும் பாஜகவின் ஆதரவோடு மீண்டும் மகனை MPஆக்க சுமூக உறவை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கடைபிடிக்கிறார்.மேலும் 2011-2015 வரை திமுக அமைச்சர்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் எதுவும் 2016-2021 காலகட்டங்களில் எடப்பாடி பழனிசாமியால் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது .ஆனால் அதற்கு கைமாறாக தற்பொழுது இவர்களை பாதுகாத்து கொண்டிருக்கிறது திமுக.

மேலும் மு.க.ஸ்டாலின் ,உதயநிதி ஸ்டாலின் ,எ.வ.வேலு போன்ற இவர்களுக்கு எதிராக பலகீனமான அதிமுக கூட்டணி வேட்பாளர்களே நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் .அதே போன்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பலகீனமான தி.மு.க வேட்பாளரே நிறுத்தப்பட்டு இருக்கிறார் .

இதுபோன்ற மறைமுக பேரங்களின் மூலம் எடப்பாடி பழனிசாமியை ஐ வீழ்த்த ஓ.பன்னீர்செல்வமும் ம்,அதே போன்று ஓ.பன்னீர்செல்வத்தை ஐ வீழ்த்த எடப்பாடி பழனிசாமியும் செய்கிற முயற்சிகள் இருவரும் சேர்ந்து அதிமுகவை வீழ்த்துவதற்கான வியூகம் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.எனவே அதிமுகவை காப்பது என்பது தொண்டர்கள் கையில் தான் உள்ளது.
Share on:

இரண்டு ஆண்டு கால திமுக அரசின் சாதனைகளும் வேதனைகளும்

சாதனைகள் :

குடும்ப அரிசிதாரர்களுக்கு ரூ 4,000 கொரோனா நிவாரணம் வழங்கியது.

ஆவின் பால் லிட்டர்க்கு 3 ரூ குறைத்தது

மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என அறிவித்தது

ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் மசோதா நிறைவேற்றி ஆளுநரிடம் ஒப்புதல் வாங்கியது.

வேதனைகள் : மக்களுக்கு பலன்தரும் பழைய திட்டங்களை கைவிட்டு. புதியத்திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தாமல் இருப்பது.

முதியோர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை அதிகரிப்பதாக அறிவித்துவிட்டு முன்னறிவிப்பின்றி அதை நிறுத்தியது.

மின் கட்டணம் , சொத்து வரி குறைப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு மாறாக வரியை அதிகரித்தது.

மதுவிலக்கு கொண்டுவருவதாக சொல்லிவிட்டு. முன்பை விட அதிக அளவு மது விற்பனையை நவீன முறையில் மேம்படுத்துவது.

மிக மோசமான சட்டம் ஒழுங்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விட பலமடங்கு ஊழல்

ஊழலை மருமகன் மூலமாகமையப்படுத்தி ஆதாயம் தேடுவது திராவிட மாடல் என்று முழங்கிவிட்டு மருமகனை காப்பாற்ற மத்திய அரசிடம் மறைமுக பேச்சுவார்த்தை

சித்தாந்த அரசியலை வாயளவில் பேசி செயலளவில் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் நலத்திட்டங்களுக்கும் பெரிய அளவில்நடவடிக்கை எடுக்காதது

இரண்டு ஆண்டுகள் முடிந்தும் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலங்கள் உட்பட எந்த வேலையும் செய்து முடிக்காதது

முந்தைய அரசாங்கத்தில் ஊழலுக்கு உறுதுணையாக இருந்தஅதே அதிகாரிகளை அதிகபட்ச ஊழலுக்காக பயன்படுத்தி கொண்டிருப்பது

சொந்த அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சும் மத்திய அரசோடு மறைமுக ஒப்பந்தத்திலும் செயல்படுவது

செய்ய தவறியது: முன்னாள் ஊழல்வாதிகளை 90 நாட்களில் சிறையில் அடைப்பேன். கலைஞரின் மகன் நான் சொன்னதை செய்வேன் என்று முழக்கமிட்டு அவர்களோடு மறைமுக ஒப்பந்தம் ஏற்படுத்தி செயல்படுவது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிகொண்டுவருவேன் என்று சொல்லிவிட்டு அதன் ஏன்டா நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உள்ள குற்றவாளியை கண்டறிவேன் என்று சவால் விட்டுவிட்டு அதன்மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது.
Share on:

1 லட்சம் அதிமுக தொண்டர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

அதிமுக வின் முன்னாள் எம்.பி திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் தொண்டர்களுடன் கலந்துகொண்டு உரையாடிய பொழுது அவர் கூறியதாவது ,நம்முடன் இருக்கின்ற 15% தொண்டர்கள் மற்றும் பிரித்திருக்கின்ற தொண்டர்கள் 50% இவை இரண்டும் சேரும் பொழுது 65% தொண்டர்கள் நம்முடன் இருப்பார்கள் என்றும் ,மேலும் இது சேரும் பொழுது எடப்பாடி பழனிசாமியின் தொண்டர்கள் 25% அனைவரும் நம்முடன் வந்து சேர்ந்துகொள்வார்கள் என்றும் கூறினார். எனவே 90% சதவிகிதம் அண்ணாதிமுக தொண்டர்கள் பாஜகவை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கின்றனர் .மேலும் அவர்கள் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று முனைப்புடன் இருக்கின்றனர் .அண்ணாதிமுகவை சிறு சிறு துண்டுகளாக பிரித்து அந்த வாக்கு வங்கியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பாஜகவினர் நினைக்கின்றனர் .ஆனால் நாம் அவ்வாறு செய்ய விடமாட்டோம் என்று திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் தொண்டர்களுடன் கலந்துரையாடிய பொழுது இவ்வாறு கூறியுள்ளார் .
Share on:

தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை விட மக்கள் மன்றத்தின் தீர்ப்பே இறுதியானது!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்,ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிப்பதாக உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி கடந்த 2022-ல் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி அதிமுக விதிகளை மாற்றியமைத்தார்.

கட்சியிலிருந்து தொடர்ந்து காரணமின்றி உறுப்பினர்களை நீக்கிய எடப்பாடி பழனிசாமி மத்திய பாஜக அரசிற்கு ஆதரவாக பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்தார்.

அதிமுக கட்சியின் சுய அமைப்பை இபிஎஸ் படிப்படியாக மாற்றியமைத்து மதவாத அரசியலுக்கு ஆதரவாக செயல்பட துவங்கியதன் விளைவு, தமிழகத்தில் அதிமுகவை மக்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த பொழுது,பாஜக அரசியலை கடுமையாக விமர்சித்து வந்தார்.பிரதமர் மோடி தமிழகத்தில் உள்நுழைய பல்வேறு எதிர்ப்பலைகள் ஓங்கி இருந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு,இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜெயலலிதாவின் பாஜக எதிர்ப்பை தவிடு …

Share on:

Continue Reading

அதிமுகவை சீண்டும் அண்ணாமலை!! பாஜக கூட்டணி தேவையா?

அதிமுகவை சீண்டும் அண்ணாமலை!!
பாஜக கூட்டணி தேவையா?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுக வெறுப்பாக எழுந்துள்ளது.

சமீபத்தில் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை வெளியிட்டு ஊழலை வெளிக்கொண்டு வருவேன் என பேசினார். இதில் அதிமுகவிற்கு எதிராகவும் சில விஷயங்களை பேசியுள்ளார்.

ஊழல் பட்டியலில் திமுகவிற்கு எதிராக பற்றி மட்டும் பேச மாட்டேன் என்ற அண்ணாமலை அதிமுகவையும் மறைமுகமாக சீண்டியுள்ளார். ஒரு கருத்தை எதிர்க்கிறோம் என்றால் அதன் அடிப்படையை எதிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு திமுக பைல்ஸ் என்பது இப்போது முடிய போவது இல்லை என்று பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசப்போவதாக குறிப்பிட்டு பேசியுள்ளார்.

உங்களை எதிர்க்க கூடாது என்றால் டெல்லி…

Share on:

Continue Reading

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை என்ன ஆனது?

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை என்ன ஆனது?

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அதிமுக பொதுச்செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.திடீரென இறந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பலராலும் சந்தேகிக்கப்பட்டது.அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் அதை ஆமோதிக்கும் வகையில், அதில் தொடர்புடைய “சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்” எனப்பேசினார்.தொடர்ந்து ஓபிஎஸ் கடந்த 2017 மார்ச் 17 ஆம் தேதி ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக்கோரி தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதமும் இருந்தார்.

மத்திய அரசின் துணையுடன் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த ஓபிஎஸ் அதிமுகவின் துணை முதலமைச்சரானார்.ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து ஜெயலலிதா மரணம் குறித்தான விசாரணையை தீவிரப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு…

Share on:

Continue Reading

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிப்பது தேர்தல் ஆணையம் தான்!!!

அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படாமலே பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தியுள்ளதாக அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அவரை தொடர்ந்து,எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று அதிமுக அடிப்படை உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் மனு அளிந்திருந்தார்.பொதுச்செயலாளர் வழக்குகளில் இபிஎஸ் வெற்றி பெற்றாலும் இறுதியாக,எடப்பாடியை அங்கீகரிக்க வேண்டியது தேர்தல் ஆணையம்தான்.

திருத்தப்பட்ட தேர்தல் விதிகளின்கீழ் தேர்தல் நடந்தது என்று தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும்கூட, திருத்தப்பட்ட விதிகளுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை ஒப்புதல் தரவில்லை.திருத்தப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் தராத ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை, எப்படி தேர்தல் ஆணையம் ஏற்கும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.

இபிஎஸ்-க்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு அளித்திருந்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு …

Share on:

Continue Reading